அந்தப்பையனுக்கு இருபது வயதிருக்கும் மழையில் நனைந்து வெடவெடவென்று நடுங்கும் ஆட்டுக்குட்டியை போல நாற்காலியில் ஒட்டிக்கொண்டு இருந்தான் மிரண்டுபோன பார்வை பக்கத்திலிருந்த அம்மாவின் கைகளை விடாமல் பிடித்து ஆதரவை உறுதி செய்தவண்ணம் இருந்தான். அவன் தாயார் என்னிடம் பேசினார் சுவாமிஜி இவன் நன்றாக படித்துக்கொண்டிருந்தான். என் மூன்றாவது மகன் இவன் மிகவும் சிரமப்பட்டு பொறியியல் கல்லூரியில் சேர்த்திருக்கிறோம் கடந்து இரண்டு வாரமாக காலேஜ் போகமாட்டேன் என்கிறான் இரவு முழுவதும் உறங்காமல் விழித்து கொண்டே இருக்கிறான் பகலில் நானோ அவன் அப்பாவோ பக்கத்தில் இருந்தால் சிறிதுநேரம் உறங்குகிறான் என்ன செய்வது என்று புரியவில்லை. என் மகனை காப்பாற்றுங்கள் என்றார்.
ஏன் உனக்கு என்னாச்சு என்று அவனிடம் கேட்டேன். எனக்கு பயமாக இருக்கிறது உறங்க வேண்டுமென்று கண்ணை மூடினால் ஒருமுகம் என் பக்கத்தில் வருகிறது. அது விடுகிற சூடான மூச்சு என் முகத்தில்படுகின்றது நான் உனக்குள் போகப்போகிறேன் வழிவிடு என்று உறுமுறுகிறது என்று பதில் சொன்னான் எப்போது நீ கண்ணை மூடி தூங்கப்போனாலும் அப்போதெல்லாம் உனக்கு அப்படி தெரிகிறதா? என்று அவனிடம் கேட்டேன் இல்லை அப்படி தெரியவில்லை ஏதாவது ஒருமுறைதான் தெரிகிறது மற்ற நேரங்களில் அது வந்துவிடுமோ என்ற அச்சத்தில் என்னால் உறங்க முடியவில்லை தயவு செய்து யாரும் என்னை விட்டு அகன்று விடாதீர்கள் என் கூடவே இருங்கள் என்று கெஞ்சினான்.
இந்த மாதிரியான அனுபவம் உனக்கு எப்போதிலிருந்து இருக்கிறது. சின்ன வயசில் இப்படி என்றாவது உனக்கு இருந்திருக்கிறதா? என்று நான் கேட்கவும் சின்ன வயதில் எல்லாமே நன்றாக இருந்தது போன மாதத்திலிருந்து தான் இப்படி இருக்கிறது என்றான் போன மாதத்தில் நீ எங்கே இருந்தாய் என்று கேட்டேன் எனக்கு இந்த சம்பவம் முதல் முறையாக ஹாஸ்டலில் தான் ஏற்பட்டது மூங்கில் மணி என்ற மாணவனுக்கு பிறந்தநாள் கொண்டாடிவிட்டு எல்லோரும் நேரம் கடந்து படுத்தோம் நான் எனது அறைக்குள் வந்தபோது யாரோ என்னோடு வந்து கதவை சாத்துவது போல் இருந்தது. பெரியதாக அதை நான் கண்டு கொள்ளவில்லை படுத்துவிட்டேன் நன்றாக உறக்கம் கண்ணை இழுத்தது கண்டிப்பாக அரைமணி நேரமாகியிருக்கும் யாரோ என் நெற்றியில் விரல்களால் அழுத்தி எழுப்பி விடுவது போல் இருந்தது.
தூங்காதே எழுந்திரு என்ற கட்டளை கேட்டது. நான் எழுந்திருக்கவில்லை என்றால் கழுத்தை நெறித்து விடுவேன் என்று அந்த குரல் சொன்னது. நான் பயந்துவிட்டேன் அவசரத்தில் கண்ணை விழித்தேன் அப்போது தான் அந்த முகம் எனக்கு பக்கத்தில் தெரிந்தது. வாரப்படாத தலை, கோரமான தாடி, பழுப்பேறிய பற்கள், சிவந்த கண்கள் குடிகாரனிடம் இருந்து வருவது போல சகிக்கமுடியாத நாற்றம், பயமும் அறுவறுப்பும் ஏற்பட்டது. உறங்கவே இல்லை விடியும் வரை விழித்திருந்தேன் இதே போன்று இரண்டு இரவுகள் அவதிப்பட்டேன். தாங்க முடியாத அவஸ்தையில் வீட்டுக்கு வந்துவிட்டேன். என்னை மீண்டும் காலேஜ் பக்கம் அனுப்பி விடாதீர்கள் என்று பரிதாபமாக பேசினான்.
வீட்டுக்கு வந்தபிறகு அந்த உருவத்தை பார்த்தாயா?
இல்லை பார்க்கவில்லை ஆனால் உறங்கினால் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் உறங்கவில்லை பகலில் அவ்வளவாக பயமில்லை என்பதனால் உறங்குகிறேன் என்றான். இவன் கூறுகிற விஷயத்தை வைத்து பெற்றோர்கள் பயப்படுவார்கள் மற்றவர்கள் இவனுக்கு மனநோய் வந்துவிட்டதா? படிப்பின் மீது பயம் வந்துவிட்டதா? அல்லது வேறு ஏதாவது வெளியில் சொல்ல முடியாத பிரச்சனையா? என்று நினைப்பார்கள்.
பொதுவாக இந்த வயது பிள்ளைகள் இதுவரை பள்ளிக்கூடத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழல் அமைந்த கல்லூரிக்கு செல்வதனால் அங்குள்ள தன்மைகளை மனதால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் தெரியாமல் தங்களுக்குள்ளேயே போட்டு அழுத்தி இந்த மாதிரி அவஸ்தைப் படுவார்கள். அல்லது மிக நெருக்கமான நண்பன் அல்லது தோழி இவர்களிடம் ஏற்பட்ட சண்டை சச்சரவு மற்றும் பிரிவுகளால் இந்த நிலைக்கும் தள்ளப்படுவார்கள். இதுவே இயற்கையாக நடக்கும். திடகாத்திரமான மனதுள்ளவர்களை பற்றி கவலை இல்லை. மெல்லிய மனதுடையவர்கள் இந்த அவஸ்தைகளுக்கு மிக சுலபத்தில் இடம் கொடுத்து விடுவார்கள். ஒருவேளை இந்த பையனின் நிலையும் அப்படித்தான் இருக்குமோ என்று முதலில் நினைத்தேன்.
அவனது செயல்பாடு அவனது உடல் இயக்கம் போன்றவைகள் சாதாரண மனச்சிக்கலாக எனக்கு தெரியவில்லை அவனிடம் ஏற்பட்ட பயமும் படபடப்பும் உண்மையானது. எதையோ ஒன்றை நினைத்துக்கொண்டு அதற்கு பதிலாக வேறொன்றை சொல்லுகின்ற பதட்டமும் கிடையாது. சாதாரண மனநிலையில் உள்ளவன் அளவுக்கு மீறிய அச்சத்தால் எப்படி இருப்பானோ அப்படி தான் இருந்தது அவன் செயல் மேலும் அவன் கண்ணுக்கு கீழே அழுத்தமாக விழுந்த கருவளையம் நாக்கில் படர்ந்திருந்த வெள்ளைத் தடிப்பு, கை விரல்களை பயன்படுத்திய விதம் இதுவொரு நிஜமான அமானுஷ்ய சக்தியின் தாக்குதலாக இருக்க வேண்டுமென்று எனக்கு உணர்த்தியது.
மேலும் சில பரிசோதனைகள் மூலம் பையனிடம் சேட்டை செய்தது ஒரு ஆவி என்ற முடிவுக்கு வந்தேன். அவன் தங்கி இருந்த ஹாஸ்டலில் பணி செய்த ஏதோ ஒரு பணியாள் அசம்பாவிதமாக மரித்து அங்கேயே ஆவியாக சுற்றி தன்னால் மிரட்ட முடிந்த மாணவர்களை மிரட்டி விளையாடுவது சகஜம் என்பதை தெரிந்து கொண்டேன். அவனுக்கு தைரியம் சொன்னதோடு அந்த ஆவி மீண்டும் அவனை நெருங்காதவாறு மந்திரப்பூர்வமான சில தடுப்புகளையும் அவனுக்கு கொடுத்தேன்
இதை இங்கே சொல்வதற்கு மிக முக்கிய காரணம் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டவுடன் சம்மந்தப்பட்டவர்களை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தி விடுகிறோம். இதற்காக பயன்படுத்தும் மருந்துகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி மாறாத தழும்புகளை உருவாக்கி விடுகிறது. எனவே பாதிப்பு வந்தவுடன் நாலாவிதத்திலும் ஆராய்ந்து நிவாரணம் தேட வேண்டும். இப்படி செய்தால் நிச்சயம் உடனடியான பலனை பெறலாம்.