Store
  Store
  Store
  Store
  Store
  Store

சந்தேக சண்முகமும் தேர்தல் அறிவிப்பும் !


     ன் பேரு சந்தேக சண்முகம். தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே, பல சந்தேகங்களும் கூடவே வந்து போச்சு மூக்குக்குள்ள போன பட்டணப்பொடி தும்மலாக வெளிவருகிற மாதிரி உள்ளே போன விஷயங்கள் சந்தேகமா வெளிவருது. தப்பா எடுத்துக்காம முடிஞ்சா பதிலை சொல்லுங்க.

நம்ம தலைவர் கலைஞர் அவர்களை பார்த்து மக்களவை தேர்தல் வேட்பாளர்களில் பொம்மனாட்டிக்கு அதிக இடம் கொடுக்கல. அவர் எப்போதுமே அவுங்கள மதிக்க மாட்டாரு என்று வாய்க்கு வந்தபடி நிறைய பேர் பேசுறாங்க. ராஜ்யசபா தேர்தலின் போது கனிமொழிக்காக ஆதரவு கேட்டு எல்லா தலைவருக்கும் கடிதம் எழுதினாரு அதே கனிமொழி மத்தியமைச்சரா வரனும்னு மன்மோகன்சிங்கையே கட்டாயப்படுத்தினாரு. அந்தம்மா திகார்ல இருந்தப்போ வருத்தத்தோட உள்ளமும் உடம்பும் உருகினாரு. அதை எல்லாம் ஏன் இந்த தமிழ்நாடு மறந்து போச்சு? கனிமொழி என்கிறது பெண்மணி தானா? தலைவரு அவுங்க முன்னேற்றத்திற்கு பாடுபடுவதும் பொம்மனாட்டிங்க மேம்பாட்டுக்கு உழைக்கிறதும் வேறு வேறா? 

இன்னும் ஒரு சந்தேகங்க ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள் திராவிட கட்சிகளோடும் கூட்டணி இல்லே, தேசிய கட்சிகளோடும் கூட்டணி இல்லைன்னு முந்தி சொன்னாரே இப்போ பா.ஜ.கவோடு கூட்டணி வச்சுக்கிறாரே ஒருவேளை பா.ஜ.க தேசிய கட்சி இல்லையா? இல்லாட்டி பா.ஜ.க என்பதும் அவரோட சமூக நல்லிணக்க கூட்டணியில் இருக்கிற கட்சிகள் மாதிரி குட்டி ஜாதி கட்சி தானா? எவ்வளவோ யோசித்து பார்த்தாலும் விடை கிடைக்க மாட்டேங்கிறது. 

கொஞ்சம் பொறுங்க இன்னும் ஒரே ஒரு சந்தேகம் அதமட்டும் கேட்டுட்டு நல்ல பிள்ளையா போயிடுதேன். நம்ம அம்மா ஜி பிரதமர் ஆன மாதிரியே பேசுறாங்களே ஒருவேளை தேர்தல் முடிஞ்ச பிறகு சட்டசபைக்கு போனா எல்லோரும் முதல்வர் அவர்களே என்று அழைப்பதற்கு பதிலாக பிரதமர் அவர்களே என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டா என்ன பன்றது? ப்ளீஸ் கொஞ்சம் நிதானமா நான் புரிஞ்சிக்கிற மாதிரி பதில் சொல்லுங்க. இப்போ சந்தேக சண்முகம் போயிட்டு அப்புறமா வறேன். 









Contact Form

Name

Email *

Message *