குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது மூத்தமகளுக்கு பேய் பிடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள் இங்கு லண்டனில் ஒரு சாஸ்திரியாரிடம் அவளை அழைத்துச்சென்றோம் அவரும் அப்படித்தான் கூறுகிறார் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக உங்களது பதிவுகளை படிக்க நேரிட்டது எங்களுக்கு வழிகாட்டுங்கள் ஐயா.
இப்படிக்கு,
குணவதனி ,
லண்டன் .
உங்கள் மகளுக்கு ஆவித்தொல்லை இருப்பதாக எழுதியிருக்கிறீர்களே தவிர, அதனால் ஏற்படும் பாதிப்புகள் உங்கள் மகள் நடந்து கொள்ளும் விதம், அவளது ஜாதகம் போன்ற எதையும் நீங்கள் குறிப்பிட வில்லை.
பதட்டமும், அவசரமும் மனத்தாங்கலும் உங்களிடம் அதிகம் இருப்பதனால் பரபரப்போடு இந்த கடிதம் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்பதாக புரிந்து கொண்டேன். முதலில் நீங்கள் நிதானமாக இருங்கள். நிதானமாக இருந்தால் தான் காரியங்களை சாதிக்க முடியும்.
எது எப்படியோ உங்கள் மகளுக்கு பேய் பிடித்திருந்தாலும் இல்லை மனநோயாக இருந்தாலும் இப்போது நான் சொல்லும்
ஓம் அஸ்ய சீக்கிரமேவ சாந்தீம்
குரு குரு ஸ்வாஹா ஓம்
என்ற இந்த மந்திரத்தை செப்புத்தகட்டில் எழுதி மூன்று நாட்கள் எலுமிச்சை பழச்சாற்றில் ஊற வைத்து சுத்தப்படுத்திய பிறகு தகட்டிற்கு விபூதி, குங்குமம் வைத்து பயபக்தியுடன் விநாயகரின் முன்னால் வைத்து தகட்டில் எழுதி இருக்கும் மந்திரத்தையே நூற்றி எட்டுமுறை உச்சரித்து உரு ஏற்றி ஒரு தாயத்திற்குள் அடைத்து பெண்ணின் கழுத்திலோ கையிலோ கட்டுங்கள். பத்து நாட்களில் நல்ல மாற்றம் வரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மேல் அன்பு வைத்திருக்கும் யாரும் அவளுக்காக இதை செய்விக்கலாம்.