குருஜி ஐயா, எங்கள் குடும்பத்தில் கண்திருஷ்டி தொல்லை என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. அது நிரந்தரமாக நீங்க, மீண்டும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு,
தனலஷ்மி தங்கவேலு,
நீலாங்கரை.
உங்கள் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் அருகம்புல் மாலை சாற்றி சுவாமிக்கு அர்ச்சனை செய்யுங்கள் பிறகு அந்த மாலையை வாங்கி வந்து வீட்டு தலைவாசலில் கட்டி வையுங்கள். நீங்கள் நீலாங்கரையில் தானே இருக்கிறீர்கள் கடல் பக்கம் தான். வாரத்தில் ஒருமுறை வீடு முழுவதும் கடல் நீர் தெளித்து சாம்பிராணி புகை போடுங்கள் சிக்கல்கள் விலகும்.