Store
  Store
  Store
  Store
  Store
  Store

கட்டிய வீடும் எட்டடி குழியும் !



    நேற்றுவரை கம்பீரமாக நடமாடிய ராங்கநாத உடையார் தாத்தா இன்று காலமாகிவிட்டார் தலையில் துணிவிரித்து நீளமாக அவரை படுக்க வைத்திருந்தார்கள் வாய்வழியாக உயிர் பிரிந்ததனால் திறந்தே இருந்த வாயை மூடி கட்டி நெற்றியில் ஒருரூபாய் நாணயத்தில் போட்டு வைத்திருந்தார்கள் எத்தனை லட்சங்களை சம்பாதித்தவர் கடேசியில் ஒரே ஒரு ரூபாய் மட்டும் சுமந்து கொண்டு சுடுகாட்டுக்கு போகபோகிறார் அங்கே போனால் வெட்டியான் அந்த ஒரு ரூபாயையும் எடுத்து கொள்வான்.

பிணத்தறுகில் யாருமில்லை ஒவ்வொரு மூலையிலும் சிறு சிறு குழுக்களாக பெண்கள் யார் முகத்திலும் சோகமில்லை சந்தோசமும் இல்லை நடக்க வேண்டிய காரியம் நடக்க வேண்டிய நேரத்தில் நடந்து விட்டதாக கருதுவது போல் இருந்தது ஒன்றிரண்டு பெண்கள் மட்டும் சாஸ்திரத்திற்க்காக தலைவிரி கோலமாக இருந்தார்கள் 

கூடத்திலும் கூடத்திற்கு வெளியேயும் நிறைய ஆண்கள் ஆக வேண்டிய வேலையை முடித்து விட்டால் அவரவர் வேலைக்கு போகலாம் என்று நினைப்பும் எதிர்பார்ப்பும் தெரிந்தது பெரியவர் என்ன சின்ன வயதிலா போய்விட்டார் எல்லாம் ஆண்டு அனுபவித்து பேரன் பேத்திகளை பார்த்து அவர்களுக்கும் குழந்தைகளை பார்த்து வாழ்க்கையை நன்றாக அனுபவித்த பிறகு தானே போயிருக்கிறார் இது பெரிய சாவு கல்யாண சாவு ஆட்டம் பாட்டத்தோட அடக்கம் செய்வோம் என்ற முனுமுனுப்புகள் பல இடத்திலும் கேட்டது 

இறந்த பெரியவரின் மூத்தமகன் கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்து சத்தமாக பேசினான் ஆற்று மேட்டிலிருக்கும் ஐம்பது ஏக்கரும் என் பெயருக்கு வர வேண்டும் அதற்கு சம்மதித்தால் பிணத்தை எடுக்கலாம் இல்லை என்றால் நன்றாக இருக்காது என்று இரைந்தார் அதை கேட்டு இரண்டாவது மகன் துள்ளி குதித்தார் உனக்கு அந்த ஐம்பது ஏக்கர் வேண்டுமானால் எனக்கு மடிபாக்கத்து வீடும் மாமல்லபுறத்து பெட்ரோல் பங்கும் வந்தாகணும் இல்லை என்றால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் அண்ணன் தம்பி இருவரின் சண்டையை பார்த்து பெரியவரின் ஒரே மகள் அன்பு மகள் கூந்தலை வாரி கட்டி கொண்டு சபைக்கு வருகிறாள் 

எங்க அப்பனும் ஆத்தாவும் உங்களை மட்டும் பெத்துக்கல என்னையும் தான் பெத்தாங்க ஆம்பளைக்கு ஐம்பதுன்னா பொம்பளைக்கும் ஐம்பது தான் இருக்கும் சொத்த மூனா பிரி இல்லன்ன நா இப்போவே கோர்ட்டுக்கு போறேன் நீங்க எல்லாம் நாசமா போயிடுவீங்கன்னு மண்ணை வாரிவிடுவேன் 

பிள்ளைகள் இப்படி மல்லுகட்டி நிற்க செத்து கிடக்கும் தாத்தாவை பாக்கிறேன் வாழும் வரையில் எப்படி இருந்தவர் ரங்கநாத உடையார் என்றால் பார்ப்பதற்கும் ரங்கநாதரை போலவே கம்பீரமாக இருப்பார் ஆறடிக்கு மேல் உயரம் நெற்றி நிறைய விபூதி தெருவில் நடந்தாலும் பயணம் என்றாலும் கையை விட்டு அகலாத குடை வாய்நிறைய வெற்றிலை வெள்ளை வானத்தில் நீலம் போட்டது போன்ற கதராடை ஒரு சின்ன பையன் வணக்கம் வைத்தால் கூட நின்று நிதானமாக நலம் விசாரிக்கும் மாண்பு ஊரில் நடக்கும் நல்லது கெட்டது அத்தனைக்கும் இவர் தான் தலைமை பெரியவர் சொன்னால் மீறக்கூடாது என்ற ஊராரின் மரியாதை கலந்த கட்டுப்பாடு 

நேற்றுவரை அதில் அவருக்கு குறையில்லை இன்று சட்டையை பிடித்து சண்டை போடும் மக்களில் ஒருவர் கூட அவர் நேருக்கு நேராக பேசியது இல்லை அப்பாவின் வார்த்தையே வேதம் என்றார்கள் ஆனால் உயிர் பிரிந்த பிறகு தான் அவர்களின் நடிப்பு ஊருக்கு தெரிகிறது நான் அவருக்கு உறவு அல்ல அவரை தாத்தா என்று அழைக்கும் பல பேர பசங்களில் நானும் ஒருவன் குழந்தைகள் என்றால் அவருக்கொரு அன்பு தத்து பித்தென்று எதை கேட்டாலும் முகம் சுளிக்காமல் பதில் சொல்வார் ஒருமுறை அவரிடம் அதிகபிரசங்கி தனமாக ஒரு கேள்வியை கேட்டேன் தாத்தா உனக்கு மட்டும் இத்தனை சொத்தும் பணமும் எப்படி வந்தது? மேலும் கீழும் என்னை பார்த்தார் தோள்களை பிடித்து அனைத்து பிள்ளையார் கோவில் படிக்கட்டில் உட்கார வைத்தார் 

என் அப்பனும் பாட்டனும் நிறைய சம்பாதித்தார்கள் ஒன்றை கூட வீண் செலவு செய்யவில்லை நான் அவர்களுக்கு ஒரே மகன் எல்லா சொத்துக்கும் நானே வாரிசு இத்தனை சொத்து இருக்கிறதே என்று ஒருநாள் கூட நான் ஓய்வாக இருந்ததில்லை ஒவ்வொரு நாளும் ஓடினேன் உழைப்பு உழைப்பு என்று ஓடினேன் உழைப்பதில் தான் எனக்கு சுகமிருந்தது அதில் தான் எனக்கு இளைபாருதலும் இருந்தது இப்போது தாத்தாவுக்கு வயதாகி விட்டது அதனால் ஓய்வெடுக்கிறேன் நீயும் இப்படி ஓடி ஓடி வேலை செய் மகனே பணம் உன்னை நாய் குட்டி போல தொடர்ந்து வரும் என்று சொன்னார். அன்று அதன் அர்த்தம் புரியவில்லை மீசை முளைத்து வாலிபம் வந்தபிறகு தாத்தாவின் பொன் மொழிகள் விளங்க ஆரம்பித்தது 

இவ்வளவு சம்பாதித்து என்ன பயன்? யாருக்கு அவருடைய அருமை தெரிகிறது அவர் ஒருவர் இல்லை என்றால் இன்று நாமும் நமது சுகமும் இல்லை என்று யாருக்கு புரிகிறது? யாருமே புரிந்து கொள்ளாத வாழ்க்கைக்காக எதற்க்காக ஓட வேண்டும் ஓடி ஓடி உழைக்க வேண்டும் மூச்சு நின்று உடம்பு சாய்ந்து விட்டால் கூட வருவது என்ன? ஒன்றுமே இல்லையே இதற்கு எதற்காக போட்டி பொறமை அடிதடி சண்டை ஆர்பாட்டம் ஆடம்பரம் ஒரு விரக்கதி வந்தது யாரோ ஒருவர் தோள்களை தொட்டார்கள் இதை படித்து பார் வாழ்க்கை புரியுமென்று ஒரு காகிதத்தை கைகளில் அழுத்தி விட்டு நகர்ந்து போனார் கூட்டத்தை விலக்கி வெளியே வந்து காகிதத்தை பிரித்து படித்து பார்த்தேன் 

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்த 
பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான் - அதில் 
எட்டடுக்கு மாடிவைத்து 
கட்டடத்தை கட்டி விட்டு 
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணை 
கொட்டியவன் வேலி எடுத்தான் 

-அழகான கண்ணதாசன் பாட்டு இதை கண்ணதாசனை தவிர வேறு யார் வந்து தந்திருக்க முடியும் அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு நூலுக்கும் ஆடைக்கும் உள்ள உறவு என் மனது கல்லடிபட்ட கண்ணாடி கூண்டை போல சிதறி போகும் நேரத்தில் எங்கிருந்தோ ஓடோடி வந்து என்னையும் என் இதயத்தையும் காப்பவன் அவன் ஒருமுறை நெருங்கிய அன்புகள் என்னை வஞ்சம் செய்த போது வானொலி வடிவில் வந்து ஆறுதல் சொன்னான் 

உலகத்தில் திருடர்கள் சரிபாதி 
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி 
கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம் 
கலங்காதே மதி மயங்காதே 

-அந்த ஆறுதல் வார்த்தை என்னை வயிரம் போல உறுதியாக்கியது இப்போது கூட ஒரு மரணத்தால் ஏற்பட்ட விரக்தியும் வாழ்வில் மீது ஏற்பட்ட சலிப்பையும் அவன் கையில் தந்த காகிதம் பாதி தீர்ததென்றால் முன்பொருநாள் கேட்ட 

மனதுக்கும் மட்டும் பயந்து விடு 
மானத்தை உடலில் கலந்துவிடு 
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு 
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு 

-என்ற பாடல் நரம்புகளில் புதிய ரத்தத்தை ஓட செய்தது நாம் இறந்த பிறகு நடக்க போவதை நினைத்து இருக்கிற வாழ்க்கையை பறிகொடுத்துவிட முடியுமா? பரிகொடுக்கத்தான் வேண்டுமா? நிச்சயம் வேண்டாம் வாழும் வரை வாழுவோம் வாழ்வு முடிந்தால் கூட மீண்டும் வந்து வாழ்வோம் இது தான் கண்ணதாசன் என்ற மகாகவி எனக்கு தந்த பாடம் அது எனக்கு மட்டுமா பாடம்?





Contact Form

Name

Email *

Message *