Store
  Store
  Store
  Store
  Store
  Store

யார் உயர்ந்தவன்...?



   உயர்ந்த பதவிகள் தேடி வரும் போது மனிதன் எதை நினைத்து கொள்ள வேண்டும்? 

இப்படிக்கு, 
சாருமதி, 
சென்னை.



    தை உயர்ந்த பதவி என்று சொல்கிறீர்கள்? ஜனாதிபதி பதவிகூட மக்களுக்கு சேவை செய்யும் வேலைக்கார பதவிதான். தர்க்கப்படி பார்த்தால் இந்த உலகத்தில் உயர்ந்த பதவிகள் என்று எதுவுமே கிடையாது தாழ்த்த பதவிகளும் கிடையாது. 

பதவி வந்து விட்டால் மனிதனுக்கு என்ன மாறுதல் வர போகிறது? இரண்டு கைகளுக்கு பதிலாக ஐந்து கையா விநாயகரை போல வரப்போகிறது அல்லது மூன்று வேளை என்று இல்லாமல் ஒருநாளையில் ஆறு வேளையா சாப்பிட போகிறோம். உண்பது மூன்றுபிடி உடுப்பது இரண்டு முழம் அவ்வளவு தான் மனிதனுக்கு வைத்தது 

ஆனால் சிலபேர் பதவி வந்தவுடன் கொம்பு முளைத்து விட்டதாக நினைக்கிறார்கள். இவர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கும். ஒரு நாய், நரி செத்து போனால் கூட செத்த நாய், செத்த நரி என்று அழைப்போம். மனிதன் செத்து போனால் செத்த மனிதன் என்று யாராவது சொல்வார்களா? பிணம், சவம் மற்றும் பிரேதம் என்று வேறு வேறு பெயர்கள் வந்துவிடுகிறது. மனிதன் என்ற பதவி கூட நமக்கு சொந்தமில்லை. 

பார்க்க போனால் அசோகமரமும், தென்னை மரமும் உயரமாக தான் வளருகின்றன ஆனால் இரண்டும் ஒரே விதமாகவா பயனை தருகிறது. உயர்ந்தோம், தாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல. எப்படி மற்றவர்களுக்கு பயன்படுகிறோம் என்பது தான் முக்கியமானது. எனவே உயரும் போது சற்றேனும் பிறருக்கு உதவ முடியுமா? என்று நினைப்பவனே உண்மையில் உயர்ந்தவன்.




Contact Form

Name

Email *

Message *