பூணூல் அணிவது முதுகு சொறிவதற்கு மட்டுமே என்று என் நண்பன் சொல்கிறான் அது சரியா?
இப்படிக்கு
கார்த்திக்
மலேசியா
மத சுதந்திரத்தை பற்றி இந்தியாவில் இருப்பவர்களுக்கு அதிகமாக கவலை இல்லை. காரணம் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வழிபாட்டு சுதந்திரம் இந்தியாவில் இருக்கிறது அதனால் அந்த மக்களுக்கு மதத்தை பற்றிய மகத்துவமும் அக்கறையும் தெரியாது என்று நேற்று வரை நினைத்து வந்தேன். குறிப்பாக சொல்வது என்றால் மலேசிய நாட்டில் மதம் சம்மந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அதிகப்படியான கெடுபிடிகள் உண்டு. அங்கே இந்துவாக வாழ்வதற்கு பல சிக்கல்கள் உண்டு அதனால் அவர்கள் மத்தியில் இந்து மதத்தை பற்றிய தவறான அபிப்பிராயம் அதிகமாக இருக்காது என்றும் நினைத்தேன். அது உங்கள் கடிதத்தால் முற்றிலும் தவறு என்பதை புரிந்து கொண்டேன்.
ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே, ஊரில் மட்டுமே, மன நோயாளிகள் அதிகமாக இருப்பார்கள் என்று கூற முடியாதது போல அவர்கள் உலகம் தழுவியதாக இருப்பார்கள் என்பது போல தனது சொந்த மதத்தை கிண்டல் செய்வதில் ஆனந்தம் மிகுந்த இந்துக்கள் எந்த நாட்டிலும் இருப்பார்கள் என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டாகும் ஒரு முஸ்லீமோ ஒரு கிறுஸ்தவனோ தன் மதத்தை பற்றி ஒரு வார்த்தை கூட களங்கப்படுத்தி பேசுவதை எங்கேயும் கேட்டிருக்க முடியாது. இவ்வளவு சொல்வானேன் மத நம்பிக்கைகள் இல்லாத அரசியல் கட்சிகளில் கூட அவர்கள் அதிகமாக அக்கறை காட்ட மாட்டார்கள் ஆனால் இந்து மட்டும் எப்படியும் இருப்பான் இது அவனின் சாபக்கேடு.
சில பைத்தியங்கள் கூடி கடலின் தண்ணீர் தித்திக்கும் என்று தீர்மானம் போட்டால் அதை நம்மால் ஏற்றுகொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது அதே போன்றது தான் உங்கள் நண்பர் பூணூல் பற்றி சொன்ன கருத்தாகும் பூணூல் என்பது வெறும் சமய சடங்கிற்காக அணியப்படும் பொருள்கள் அல்ல அதில் பலவிதமான தத்துவங்கள் அடங்கி இருக்கிறது அதே எல்லாம் தெரிந்து கொண்டால் பலருக்கு வாய் பேச கூட துணிச்சல் வராது. கல்லாமல் கற்றதை உணராமல் உணர்ந்ததை உண்மை என்று நம்பாமல் எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள் அத்தனை பேருமே திருந்துவார்கள் என்று எதிர்பார்ப்பது நமது பயணத்தை தடுத்து முடமாக்கி விடும் எனவே இதே போன்ற விமர்சனங்களை தூக்கி ஒரு மூலையில் வைத்து விட்டு ஆகும் வேலையை கவனிப்போம் அடுத்த கட்டத்தை ஸ்ரீ ராமன் கவனித்து கொள்வான்.