நான் சினிமாவில் மக்கள் தொடர்பு அதிகாரி (Cinema PRO-Public & relation) இருக்கிறன்.எழுத்து துறை இல் Science Fiction அறிவியல் கதைகளில் உலக அளவில் famous ஆவேனா..? சினிமாவில் இயக்கம்,நடிப்பு துறைகளில் பிரகாசிக்க முடியுமா ? தற்போது கடன் பிரச்சினை உள்ளது.
இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத
உஜிலாதேவி வாசகர்
உங்கள் ஜாதகத்தை தெளிவாக பார்த்ததில் சில விஷயங்கள் அறிய முடிந்தது. கலையும் இலக்கியமும் உங்களோடு பிறந்தது. உங்கள் குடும்பத்தில் யாருக்குமே அந்த ஈடுபாடு இல்லை என்றாலும் தானாக முளைத்த சுயம்பு போல உங்களிடத்தில் கலை ஆர்வம் குடிகொண்டிருக்கும் அதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால் பலரின் பாராட்டுதலையும் பரிசுகளையும் வாழ்க்கைக்கு தேவையான பணத்தையும் பெற வேண்டுமானால் சில தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
இதை தியாகம் என்று சொல்வதை விட ஒழுக்கம், சரியான நெறிமுறை என்ற வார்த்தையில் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிக சுலபமாக பெண்கள் பக்கம் ஈர்க்கபடுவீர்கள் சில நேரங்களில் தடுமாற்றம் ஏற்படவும் கூடும். அதை தவிர்த்து மனதை நல்ல வழியில் செலுத்தி வாழ முயற்சி செய்தால் கலை துறையில் நிலையான வெற்றியை உங்களால் பெற முடியும் இல்லை என்றால் ஆயிரம் திறமைகள் இருந்தாலும் அதற்கு அங்கிகாரம் கிடைக்காமல் ஏங்க.வேண்டிய நிலை வரும்.
அறிவியல் கதைகளில் உலக அளவில் பெயர் பெற முடியவில்லை என்றாலும் இந்திய அளவில் அது உங்களுக்கு சாத்தியமானதாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிறுவர்களுக்கான கதை வடிவங்களில் கவனம் செலுத்தினால் நல்ல பலனை அடையலாம். இதுவல்லாமல் சகல அம்சங்கள் பொருந்திய கதைகளிலும் கவனம் செலுத்தலாம் நடிப்பு துறையை விட இயக்குனர், கதை, வசன கர்த்தா போன்ற துறைகள் நல்ல பலனை உங்களுக்கு தரும். தற்போது இருக்கும் கடன் பெரிய அளவில் பாதிப்பை தராது. விரைவில் நீங்கும் உங்களது மனம் உறுதியாக இருக்க ஸ்ரீ ஆஞ்சநேயனை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.