Store
  Store
  Store
  Store
  Store
  Store

பகையை கொல்லும் பரிகாரம் !



   குருஜி அவர்களுக்கு வணக்கம். எவ்வளவு தான் பணிந்து நடந்தாலும், பாசமோடு இருந்தாலும் மற்றவர்கள் குறை காணுவதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. எதாவது ஒரு வகையில் எதிரிகள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள். இதனால் மன உளைச்சல் அதிகமாக ஏற்படுகிறது. எதிரிகள் இல்லாமல் இருக்க என்ன பரிகாரம் செய்யலாம்? 

இப்படிக்கு, 
சேதுராமன், 
திருச்சி. 



    பாதையில் நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு எது சாட்சி? காலிலே குத்துகிற கல்லும், முள்ளும் தான் சாட்சியாகும். சோதனைகளை சந்திப்பது தான், நாம் செயல்படுகிறோம் என்பதற்கு ஆதாரமாகும். அதே போல நீங்கள் மற்றவர்களோடு உறவாடுகிறீர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டே எதிரிகள் இருப்பதாகும். இதில் உங்கள் அணுகுமுறையிலும் குறை இருக்கலாம். மற்றவர்கள் உங்களை அணுகுவதிலும் குற்றம் இருக்கலாம். எது எப்படியோ எல்லா மனிதர்களின் வாழ்விலும் எதிர்ப்பும் உண்டு, எதிரிகளும் உண்டு. 

எதிரிகளே இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைப்பது நல்ல எண்ணமே. ஆனால் அது என்றும் நிறைவேறாத ஆசையாகும். ஒருவனுக்கு வெளிப்புறத்தில் பகை இல்லை என்றாலும் உள்புறத்தில் பகை இல்லாமல் இருக்காது. அதாவது பலருக்கு தங்களுக்கு தாங்களே பகைவர்களாக இருப்பார்கள். வெளிப்பகையை பாரதி சொன்னது போல் மோதி மிதித்து விடலாம், முகத்தில் உமிழ்ந்து விடலாம். உள்ளுக்குள் உருவாகும் அதாவது நமக்கு எதிராக நமக்குள்ளயே உருவாகும் ஆசை, களவு, காமம் போன்ற பகைகளுக்கு யாரை மிதிப்பது? யாரை உமிழ்வது? கண்ணாடியை பார்த்து நம் முகத்தை நாமே துப்பி கொள்ள வேண்டியது தான். 

உள்பகையை தீர்த்து கொள்ள சத்திய சோதனை மட்டுமே பரிகாரம் என்று கூறிய நமது முன்னோர்கள் வெளிப்பகையை நிவர்த்தி செய்ய பல பரிகாரங்களை கூறி இருக்கிறார்கள். அவற்றில் மிக முக்கியமானது பைரவர் சன்னதியில் வேப்பெண்ணையின் தீபம் ஏற்றி சனிக்கிழமை தோறும் வழிபாடு நடத்துவதே ஆகும். அதை செய்யுங்கள் பகைவர்களின் தொல்லை சிறிது சிறிதாக குறைந்து விடும். 



Contact Form

Name

Email *

Message *