குருஜி அவர்களுக்கு, வணக்கம். எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் அமையவில்லை. என் மனைவியின் ஜாதகத்தையும் இத்தோடு இணைத்துள்ளேன். எங்கள் இருவருக்கும் ஜாதகப்படி குழந்தை உண்டா? இல்லையா? என்பதையும், அப்படி இல்லை என்றால் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ளலாமா? என்பதையும் தெளிவாக கூறி எங்களை வழி நடத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
காளிதாசன்,
சிவகங்கை.
ஆண்களுடைய ஜாதகத்தில் சூரியனும், சுக்கிரனும் ஒரே ராசியில் இருந்தால் அதில் சுக்கிரனை விட, சூரியனுக்கு அதிகமான பலமிருந்தால் அந்த ஆண் விந்தணுவில் ஒரு குழந்தையை உருவாக்குகிற சக்தி இருக்காது. அதே போல பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனும், சந்திரனும் ஒரே ராசியில் இருந்தால் அவளுடைய கர்ப்பபை குழந்தையை தாங்கும் சக்தியை பெற்றிருக்காது. உங்கள் இருவரின் ஜாதகங்களும் அப்படி இல்லை மிக நன்றாகவே இருக்கிறது. எனவே சிறிது காலதாமதம் ஆனாலும் குழந்தை கண்டிப்பாக இருக்கிறது அவசரப்பட்டு தத்தெடுக்க வேண்டாம்.