Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருட்டை போக்கும் பைரவ வழிபாடு




      ன்புள்ள குருஜி அவர்களுக்கு கோவையிலிருந்து உங்கள் வாசகி கவிதா எழுதுவது என்னவென்றால் எங்கள் வீட்டில் அடிக்கடி சிறிய பொருள்கள் திருடு போகின்றன. தினசரி திருட்டு நடப்பது வாடிக்கையாகி விட்டது. என் வீட்டிற்கு வெளி மனிதர்கள் நிறைய பேர் வருவார்கள் யார் மீதும் குற்றம் சொல்ல இயலாது. அது நாகரிகமும் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இப்படி திருட்டு நடப்பது நல்லதல்ல என்று உங்களுக்கு தெரியும். எனவே இதை தடுப்பதற்கு நல்ல வழி எதாவது இருந்தால் சொல்லுங்கள் அதை கடைப்பிடித்து பயனை பெறுகிறோம்.

உங்கள் வாசகி, 
கவிதா, 
கோவை. 



   வெளி மனிதர்கள் வீட்டுக்கு வருவதும் போவதும் தவிர்க்க முடியாதது யாருமே எங்களுக்கு வேண்டாம் என்று ஒதுங்கி இருக்க வேண்டுமானால் மலை உச்சியில் சென்று தான் வீடு கட்ட வேண்டும். ஆனால் பத்துபேர் வந்துபோகும் இடத்தில் பொறுப்பில்லாமல் பொருள்களை தாறுமாறாக போட்டு வைத்திருப்பது சரியான பழக்கம் அல்ல.

ஜைன மதத்தை உருவாக்கியவர்களில் முக்கியமான ஞானிகளில் ஒருவரான ஆதிநாத் பகவான் தான் தவம் செய்வதற்கு காட்டுக்கு போகும்  முன் கட்டியிருந்த பட்டு வேட்டியில் பாதியை கிழித்து ஒருவனுக்கு தானம் கொடுத்தார் வேட்டியை தானமாக பெற்ற மனிதன் அதிலிருந்த தங்க ஜரிகையை கண்டு மீதமுள்ள வேட்டியும் தனக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அதையும் வாங்க ஆதிநாத் பகவானை தேடினான்.

அதற்குள் அவர் காட்டுக்கு வந்து தவம் செய்ய துவங்கி விட்டார் தேடி வந்தவன் அவரை பார்த்தான். தன்னைமறந்து தியானம் செய்து கொண்டிருப்பவர் விழித்து வந்து கட்டிய வேட்டியை அவிழ்த்து கொடுப்பாரா? ஒருவேளை கொடுக்காவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்த அவன் அவர் தியானத்தில் இருக்கும் போதே இடுப்பிலிருந்த வேட்டியை அவிழ்க்க துவங்கிவிட்டான்.

தன் மீது வேறொரு கைபடுவதை உணர்ந்த ஆதிநாத் பகவான் கண்விழித்து பார்த்தார். நிலைமையை புரிந்து கொண்டார் வேட்டியில் ஒருபாதியை கொடுத்து மறுபாதியை நான் வைத்து கொண்டதனால் ஒருவனை வீணாக திருடனாக்கி விட்டேனே என்று வருத்தப்பட்டு கட்டியிருந்த வேட்டியை அவனுக்கு கொடுத்துவிட்டு நிர்வாணமாக தவம் செய்ய துவங்கினார்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் திருடர்களை உருவாக்குவது வேறு யாருமல்ல நமது ஆசையும், அசட்டுத் தனமும் தான். நாம் சரியாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சரியாக இருப்பார்கள். ஆனால் இது நமக்கு பல நேரங்களில் புரிவதில்லை.

வீட்டில் நடக்கும் திருடுகளை தடுக்க சிவன் கோவில்களில் சனிமூலையில் இருக்கும் பைரவ சன்னதிக்கு சென்று மண் அகலில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வாருங்கள். மூன்று சனிக்கிழமைகள் இப்படி தொடர்ந்து செய்தால் பிரச்சனை விலகி நல்லது ஏற்படும்.



Contact Form

Name

Email *

Message *