அன்புள்ள குருஜிக்கு பணிவான வணக்கம். என் குழந்தைக்கு மூன்று வயதாகிறது. அவன் பிறந்த நாள் முதலே சளி, இருமல் என்று அவதிப்படுகிறான் மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது வளர வளர சரியாகிவிடும் என்கிறார்கள். என்றாலும் குழந்தைபடுகிற அவதி எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அவன் ஜாதகத்தை பார்த்து எளிய பரிகாரங்கள் எதாவது நான் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள் செய்கிறேன் நீங்கள் வழிகாட்டினால் சரியாக இருக்கும் தயவு செய்து எனக்கு உதவுங்கள்.
உங்கள் வாசகி,
ஹேமலதா,
கலிபோர்னியா.
சளிபிடித்தால் சனிபிடித்தது என்பார்கள் அவ்வளவு தொல்லை சளியால் படவேண்டியது உள்ளது. உலகில் முக்கால் பங்கு மனிதர்கள் மூச்சு பிரச்சனைகளாலே மரணமடைகிறார்கள். பெரியவர்களாக இருந்தால் மூச்சு பயிற்சி பிராணயாமம் என்று பல வழிகளை சொல்லலாம். குழந்தைகளுக்கு எதை சொல்வது மருந்து மாத்திரை என்று பார்ப்பதை தவிர வேறு வழி கிடையாது.
ஜாதகத்தில் எட்டாவது இடத்தில் சந்திரன் அமைந்துவிட்டால் அவர்களுக்கு கண்டிப்பாக சளி தொல்லை இருந்தே தீரும் அதுவும் அந்த எட்டாம் இடம் விருச்சிக இராசியாக அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் ஈளை,இருமல் என்று அவர்களை பாடாக படுத்திவிடும் நான் பார்த்தவரையில் பெருவாரியான காச நோயாளிகளுக்கு எட்டாமிடம் விருச்சிகமாக இருக்கும். அதில் சந்திரன் வேறு ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் இப்படி இருந்தாலே தலைவலியும் திருகுவலியும் ஒன்றாக வந்த கதைதான்.
இருந்தாலும் சந்திரனின் ஆற்றலை நல்வழி படுத்தவதற்கு வழி இல்லாமல் இல்லை. பச்சரிசிக்கு சந்திர ஆற்றலை ஈர்க்கும் வல்லமை நிறைய உண்டு எனவே பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தாயத்து வாங்கி அதனுள் அடைத்து குழந்தையின் கழுத்தில் கட்டிவிடுங்கள் சந்திரனால் உருவான சளி தொல்லை விரைவிலே அடங்கும் இதை பெரியவர்களும் செய்யலாம்.
பெளர்ணமி அன்று சந்திரபகவான் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் மிகவும் நல்ல பலனை தரும் இறை வழிபாடு ஒன்றே மனிதனுக்கு சகல நன்மைகளையும் தருவதாக இருக்கிறது எனவே நம்பிக்கையோடு கடவுளை வழிபடுங்கள் கைவிட மாட்டான்