பகவான் கண்ணனுக்கு துளசிமாலை அணிவிப்பது போல ஸ்ரீ ராமபிரானுக்கும் துளசிமாலை சாற்றி வழிபாடு செய்யலாமா?
இப்படிக்கு ,
ரேணுகாதேவி ,
அமெரிக்கா .
துளசியும் துளசியின் நிழலும் கூட எனக்கு மிகவும் பிடித்தமான இடமென்று கண்ணன் சொல்கிறான். நீ வழிபாடு செய்கிறபோது எனக்கு படைப்பதற்கு எதுவுமே உனக்கு கிடைக்கவில்லையா கவலைப்படாதே ஒரு காய்ந்த துளசியிலை இருந்தாலும் போதும், அது கூட இல்லையா துளசி வளர்ந்த இடத்தில் இருக்குமே மண் அந்த மண்ணின் ஒரு சிறு துளியை கூட எனக்கு அர்ப்பணம் செய்து நீ வழிபடலாம். என்று கண்ணன் நமக்கு தனது எளிமையை மிக அழகாக சொல்லி நான் ஆடம்பரங்களை விரும்புவன் அல்ல அன்பை மட்டுமே நேசிப்பவன் என்று காட்டிவிடுகிறார்.
அப்படிப்பட்ட கண்ணபெருமானுக்கு எந்த துளசி இலையாக இருந்தாலும் ஏற்றது தான் என்றாலும் கருந்துளசி இலை அவனுக்கு மிகவும் பிடித்தது. அதே போல வெண்துளசி ராமனுக்கு ஏற்றது என்று சொல்வார்கள் வெண்துளசி என்பது இளம் பச்சை நிறத்தில் இருக்கும் இதுதவிர செந்துளசி என்ற துளசி உண்டு இது மிகவும் அரிதானது இந்த துளசி அன்னை மகாலஷ்மிக்கு மிகவும் பிடிக்குமாம் இதை கொண்டு பூஜை செய்தால் மகாலஷ்மி மகிழ்ந்து செல்வ வளத்தை வாரித்தருவாளாம் இறைவனுக்காக உள்ளன்போடு அர்ப்பணம் செய்தால் எல்லாம் கிடைக்கும்.