Store
  Store
  Store
  Store
  Store
  Store

தூங்க சொல்லித்தரும் மதம் !



      ரவில் உறங்குவதற்கு கூட இந்துமதத்தில் இலக்கணம் இருப்பதாக எனது பாட்டி சொல்கிறார் அதை கேட்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. இப்படித்தான் உறங்க வேண்டும் என்பதற்கு கூட மத சம்பிரதாயம் உண்டா? மனிதனின் ஒவ்வொரு செயலையும் அப்படி இருக்கக்கூடாது, இப்படி இருக்க வேண்டும் என்று வரன்முறை செய்தால் தனிமனித சுதந்திரத்திற்கு இடம் இல்லாமலே போய்விடும் அல்லவா? என்னை போன்ற இளைஞர்களை மனதில் வைத்து இதற்கான பதிலை நீங்கள் சொன்னால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.


இப்படிக்கு 
கமலேஷ்யாதவ் 
ராமேஸ்வரம் 





   இந்து மதத்தில் உள்ள வரைமுறை இலக்கணம் ஒழுக்கவிதிகள் என்பவைகள் எல்லாம் கட்டாயப்படுத்த வேண்டும் கட்டளையிட்டு பணிய வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல. நீ இதை இதை செய்யவில்லை என்றால் நரகத்திற்கு போவாய் கடவுள் தண்டிப்பார் என்று இந்துமதம் எந்த இடத்திலும் கூறுவது கிடையாது. ஒரு காரியத்தை இப்படி செய்தால் நல்லதாக இருக்கும் உனக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு வராது உலகமும் ஷேமமாக இருக்கும் என்றே இந்துமதம் பெருவாரியான ஒழுக்க நியதிகளை மனிதனுக்கு கூறுகிறது. அவைகளை கடைபிடித்தால் அல்லது கடைபிடிக்காமல் போனால் நல்லதும் கெட்டதும் நமக்கு தானே தவிர கடவுளுக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால் கடவுள் உனது புறச்செயல்கள் எவைகளையும் கவனிப்பது இல்லை உனது அகத்தை மட்டுமே பார்க்கிறார் என்பதே இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடு.''


அந்த வகையில் உறக்கம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை ஒத்துக்கொள்ளும் நமது மதம் உறக்கத்தின் தத்துவத்தை கூட நமக்கு காட்டுகிறது. மரணம் என்பதும், உறக்கம் என்பதும் பெரிய வித்தியாசம் கொண்டது அல்ல. உறங்கி விழிப்பவன் பழைய உடம்பிலேயே விழிக்கிறான் மரணத்திற்கு  பிறகு விழிப்பவன் புதிய உடம்பில் விழிக்கிறான் அல்லது பிறக்கிறான் என்று கூறி மரணத்தின் மேலே மனிதனுக்கு இருக்கும் அச்சத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது இந்துமதம். இந்த தத்துவத்தை உறங்குவது போல் சாக்காடு உறங்கி விழிப்பது போல் பிறப்பு என்று நமது ஞானிகள் மிக அழகாக சொல்கிறார்கள்.

உறக்கம் தேவை எனும்போது அந்த உறக்கம் ஆரோக்கியமானதாகவும் அமைதியானதாகவும் இருக்க வேண்டும். நமது உடம்பை போட்டது போட்டபடி தாறுமாறாக படுத்து உறங்குவோம் என்றால்  தசைகளும் நரம்புகளும் பிசகி நமக்கு வலியை கொடுக்கும். சரியான முறையில் படுத்து உறங்கினால் தூக்கம் கூட நல்ல உடல் பயிற்சியாக அமைந்துவிடும். அதனால் தான் நமது மத பெரியவர்கள் உறங்கும் போது இடதுபுறமாக ஒருக்களித்து படுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். அதாவது இடது புறமாக படுக்கும் போது நமது மூச்சுக்காற்று வலது நாசி வழியாக போய்வரும். வலது நாசியில் மூச்சு ஓடும் போது உடம்பு மிதமான வெப்பத்தில் இருக்கும். இதனால் இரத்த ஓட்டமும் நுரையிரலும் நல்ல முறையில் இயங்கி நோய் எதிர்ப்பு சக்தியும் நீடித்த ஆயுளையும் நமக்கு தரும். மாறாக இடது நாசியில் மூச்சு ஓடினால் உடம்பில் சீதளம் அதிகமாகி சுவாசகோசம் சளியினால் பாதிப்படைந்து தேவையில்லாத உபாதைகளை தரும்.

வடக்கில் தலை வைத்துப்படுப்பதை நமது மதம் கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நமது பூமி வடக்கு மூலையில் சற்று தாழ்ந்து இருப்பது நமக்கு தெரியும். அப்படி பள்ளமான பக்கத்தில் தலை வைத்து மேட்டு பக்கமாக கால் நீட்டினால் இரத்த ஓட்டம் முழுமையாக சிரசை நோக்கி செல்லும். இதனால் மூளை கோளாறும் மன அழுத்தமும் அதிகரிக்கும். சாதாரண நிலையில் மூளை இருந்தாலே விபரீதமாக நடக்கும் நாம் கோளாறான மூளையை பெற்றால் என்ன செய்வோம். நம்மையும் கெடுத்து நாட்டையும் கெடுத்துவிடுவோம். இதனால் தான் நமது இந்து மதம் உறங்குவதற்கு சரியான இலக்கணம் வகுத்து தந்திருக்கிறது. அதை கடைபிடித்தால் கெடுதி ஒன்றும் ஏற்படாது.






Contact Form

Name

Email *

Message *