ஐயா நான் துலாம் ராசியில் பிறந்தேன் இப்போது நான் புதியதாக வீடு கட்ட போகிறேன் ஒவ்வொரு இராசிக்கும் ஏற்றார் போன்ற திசைகள் இருப்பதாக சொல்கிறார்கள் என் இராசி படி எந்த திசையில் வாசல் வைத்து வீடு கட்ட வேண்டும்?
ஜானகிராமன்
துபாய்
ஒவ்வொரு ராசிக்குரிய திசைகளும் அதற்க்கான பலன்களும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லபட்டிருக்கிறது அதன்படி ரிஷபம் மிதுனம் கடகம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் வடக்கு வாசல் வைத்து வீடு கட்டுவது சிறப்பு. இப்படி செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.
சிம்மம், கன்னி, துலாம் போன்ற ராசிகளில் பிறந்தவர்கள் கிழக்கு திசை பார்த்து வீடு கட்டலாம். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே தெற்கு திசையை பயன்படுத்தலாம். இதன்படி வீடு அமைந்தால் இவர்களுக்கு செல்வ வளத்தில் குறைவு இருக்காது.
விருச்சிகம், தனுசு, மகரம் ராசிகளில் பிறந்தவர்கள் தெற்கு பார்த்த மாதிரி வீடு கட்டுவது மிகவும் சிறந்தது. ஆனாலும் தலைவாசல் தென்மேற்கு பகுதிக்கு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி கவனத்துடன் வீடு கட்டினால் செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும்.
கும்பம், மீனம், மேஷம் ராசிகளில் பிறந்தவர்கள் மேற்கு பார்த்த வாசல் வைத்து வீடு கட்டலாம். இவர்களும் தலைவாசலை தென்மேற்கு பகுதிக்கு சென்றுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த விதியை கடைபிடித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.