Store
  Store
  Store
  Store
  Store
  Store

வாஸ்து சாஸ்திரத்தின் வயது !




      ன்று வாஸ்து பார்க்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாஸ்து சாஸ்திரம் வளர்ச்சி அடைந்துள்ளது வாஸ்து சாஸ்திரம் என்பது பண்டைய இந்தியர்களின் கட்டிட விஞ்ஞானம் என்ற நம்பிக்கையும் வளர்ந்து வருகிறது. ஆனால் எனது நண்பன் ஒருவன் வாஸ்து சாஸ்திரம் என்பதே ஐநூறு அல்லது அறுநூறு ஆண்டுகளாக இருந்து வருவது தான் ஆதிகாலத்தில் வாஸ்து என்பதே கிடையாது இன்றைக்கு அதை தொழிலாக நடத்துபவர்கள் என்னவோ ஆண்டாண்டு காலமாக வாஸ்து சாஸ்திரம் இருப்பதாக பேசி கொள்கிறார்கள் என்று சொல்கிறான். உண்மையில் வாஸ்து சாஸ்திரம் ஆதிகாலம் தொட்டே இருக்கிறதா? அல்லது பாதியில் வந்தது தானா? என்பதை குருஜி அவர்கள் விளக்குமாறு வேண்டுகிறேன்.
இப்படிக்கு

கெளரிசங்கர்

சிங்கப்பூர்


    காபாரதம் தெரியாமல் யாரும் இருக்க மாட்டார்கள் அதில் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து எரித்து கொல்ல துரியோதனன் சதி செய்தான் என்பதையும் அனைவரும் அறிவார்கள். அந்த அரக்கு மாளிகை வாரனாவதம் என்ற ஊரில் அமைக்க படுகிறது. அதை கட்டுவதற்கு முன்பு எந்த வடிவத்தில் கட்டினால் உடனடியாக நெருப்பு பிடித்து கொள்ளும் என்ற விபரத்தை வாஸ்து சாஸ்திரிகளிடம் துரியோதனன் கேட்டறிந்தான் என்ற குறிப்பு இருக்கிறது.

பாண்டவர்களுக்காக இந்திர பிரஸ்தம் என்ற நகரத்தை வாஸ்து சாஸ்திர முறைப்படி மயன் என்ற நிபுணரை வைத்து ஸ்ரீ கிருஷ்ணன் அமைத்ததாகவும் அதே கிருஷணர் வடமதுரையை கடல் சீற்றம் கொண்டு அழிந்த போது வாஸ்துமுறைப்படி துவாரகா என்ற புதிய தலைநகரை கட்டியதாகவும் மகாபாரதம் தெளிவாக சொல்கிறது.

ராமாயணத்திலும் ராமன் நாட்டை விட்டு காட்டுக்கு வந்தவுடன் தனது தம்பி லஷ்மணனிடம் பஞ்சவடி என்ற குடிலை வாஸ்து படி அமைக்குமாறு கூறுவதாக தகவல் பதிவாகி இருக்கிறது. அதே ராமாயணத்தில் வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறப்படி கிழக்கு முகமாக அமர்ந்து இயற்கை உபாதையை தீர்க்க கூடாது என்ற தகவலும் இருக்கிறது.

இவற்றை எல்லாம் விட மனிதன் கண்டறிந்த முதல் நூலான ரிக் வேதத்தில் வாஸ்தோஸ்பதி என்ற சொல் வருகிறது இந்த வார்த்தைக்கான பொருள் பாதுகாப்பு மகிழ்ச்சி வளமை என்பதாகும். இதிலிருந்தே வாஸ்து என்ற சொல் உற்பத்தி ஆகி இருப்பதாக வடமொழி அறிஞர்கள் கருதுகிறார்கள் எனவே வாஸ்துவுக்கு வேத ஆதாரமும் இருக்கிறது.

இவைகளை வைத்து பார்க்கும் போது வாஸ்து சாஸ்திரம் ஐநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்தது அதற்கு முன் அப்படி எதுவுமில்லை என்று கூறுவது உங்கள் நண்பரின் அறியாமையை மட்டும் காட்டவில்லை. இந்த தேசத்து கலைகளை விஞ்ஞானங்களை கீழ்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக பல புனைவுகளை நுணுக்கமாக பரப்பி வரும் விஷ அறிவாளிகளின் வக்கிரம் மட்டுமே தெரிகிறது. நமது ஆதிகால அறிவாற்றலின் தெளிவை விபரமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்துமத சம்பிராதயங்கள் ஏன் எதற்கு என்ற எனது நூலை படிக்கவும்.


Contact Form

Name

Email *

Message *