Store
  Store
  Store
  Store
  Store
  Store

மது அருந்தலாமா...?




   குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களது இணையதளத்தை பலமாதங்களாக படித்துவருகிறேன் ஆன்மிகம் அரசியல் இலக்கியம் ஜோதிடமென்று அனைத்து துறையிலும் பலரும் வியக்கும் வண்ணம் எழுதுகிறீர்கள் சுத்தமான தமிழ்நடையில் சரளமாக எழுதும் பழக்கம் தமிழகத்தில் முடியாது தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது உங்கள் எழுத்துக்களை படித்த பிறகு புரிகிறது. உங்களிடம் வாசகர்கள் பல கேள்விகளை கேட்கிறார்கள் அவைகள் அனைத்தும் ஜோதிடம் சம்மந்தமானது ஆன்மிகம் சம்மந்தமானது அதற்கான தெளிவான பதிலையும் நீங்கள் தருகிறீர்கள் ஆனால் நான் இன்று கேட்கபோவது இவைகளை சார்ந்த கேள்விகள் அல்ல. மிகவும் இக்கட்டான மனநிலையில் தடுமாற்றமான சூழலில் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் இதற்கு நீங்கள் தருகின்ற பதில் என் மனசாட்சியின் பதிலாகவும் இருக்குமென்று நம்புகிறேன். 

ஐயா நான் தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். என் வேலைக்காக பலரோடும் பழகவேண்டிய சூழல் இருக்கிறது. இன்றைய நாகரீக உலகில் மேல்மட்ட விருந்துகளில் மது என்பது சர்வசாதரணமாக பயன்படுத்த படுகிறது. நான் கலந்துகொள்ளும் விருந்துகளும் அப்படிப்பட்டவைகளே ஆகும். அதில் பரிமாறப்படும் மதுவகைகளை இதுவரை நான் தொட்டதில்லை காரணம் மிகசிறிய வயதில் என் அம்மாவின் தாயாருக்கு அதாவது என் பாட்டிக்கு எந்த நேரத்திலும் மதுவை தொடமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததே ஆகும். மதுவை நான் ஒதுக்குவதால் தொழில் நிமித்தமாக பல இடைஞ்சல்களும் ஏற்படுகின்றன. இதனால் என் மனைவி மது பழக்கத்தை தொடர்ந்து வைத்தால் தானே தவறு தவிர்க்க முடியாத சூழலில் சிறிது அருந்தினால் அதல் தவறில்லை பாட்டிக்கு கொடுத்த வாக்கை விட வாழ்க்கை முக்கியம் என்கிறாள். மிகவும் தர்மசங்கடமான நிலையில் நான் இருக்கிறேன். என் சத்தியத்தை கடைபிடிப்பதா? அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு பலியாவதா? என்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு வழிகாட்டுங்கள். உங்கள் வார்த்தையை தட்டாமல் நடக்கிறேன். என் பெயரை வெளியிட வேண்டாம்.
இப்படிக்கு 
பெயர்சொல்ல விரும்பாத வாசகர்.


    பாபா ராம்தேவ், அன்னாஹசாரே போன்றோர்கள் ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது இவர்களின் போரட்டத்தின் மீது உறுதியின் மீது நம்பிக்கை இல்லை என்று எழுதினேன். சிலர் காந்தி வழியில் இவர்கள் போராடுகிறார்கள் அதில் நம்பிக்கை இல்லை என்கிறீர்களே? அப்படி என்றால் காந்திய போராட்டங்கள் தற்காலத்தில் செல்லுபடி ஆகாது என்று நீங்கள் நம்புகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் போரட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை போராடுபவர்களின் மீது தான் நம்பிக்கை வர மறுக்கிறது என்று பதில் சொன்னேன். 

ஒரு சமயத்தில் மகாத்மாகாந்தி அவர்கள் பிரிட்டிஸ் மன்னரை காண்பதற்காக லண்டன் மாநகர் சென்றார். அப்போது அரசரை சந்திப்பது என்றால் பிரத்யேகமான ஆடைகள் அணியவேண்டும் அரைகுறை ஆட்களோடு அவரை காண முடியாது எனவே வேறு ஆடைகள் உடுத்துங்கள் என்று அரண்மனை அதிகாரிகள் சொன்னார்கள். காந்தி அதற்கு மறுத்துவிட்டார் இது தான் எனது சொந்த ஆடை இப்படிதான் என் நாட்டு மக்களில் பலரும் ஆடைகள் அணிந்திருக்கிறார்கள் இந்த ஆடையில் மன்னர் என்னை காண்பதாக இருந்தால் காணட்டும் அல்லது நான் கிளம்பி இந்தியா செல்கிறேன் என்று பதில் சொன்னார். கடேசியில் அவர் தனது வழக்கமான ஆடையிலேயே மன்னரை பார்த்தாரே தவிர ஆடையை மாற்ற வில்லை. 

இதுவே காந்தியின் ஆண்மை பொருந்திய வீரம் தான் எடுத்த கொள்கையில் உயிரே போனாலும் அதை கைவிடாமல் இருப்பவன் தான் உண்மையான மனிதன். காலத்திற்காக சூழலுக்காக தனது விரதங்களை மாற்றி கொள்ள நினைப்பவன் எவனும் மனிதனாக மாட்டான். நமது தலைவர்கள் சிலர் இருக்கிறார்கள் மேடையில் ஏறி பண்பாடு கலாச்சாரம் என்று வாய்கிழிய பேசுவார்கள் பேசியதன் பயனாக மக்களின் ஆதரவை பெற்று பதவிக்கு வந்தபிறகு தான் அதுவரை பேசிய பண்பாடு காலாச்சாரம் அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு அது அறியாத காலம் இது அறிந்த காலம் என்று வியாக்கியானம் கொடுப்பார்கள். காந்திக்கும் மற்ற தலைவருக்கும் உள்ள வித்தியாசம் இதுவே ஆகும். 

யாரிடமும் இல்லாத உறுதியும் உழைப்பும் காந்தியிடம் இருந்தது அதானலையே அவர் மகாத்மா ஆனார். அது இல்லாமல் பலர் பாவாத்மாக்களாக கிடக்கிறார்கள். இவர்கள் பேசுகின்ற தத்துவமும் கொள்கையும் சுயநலத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்க முடியும். காலத்துக்கு ஏற்றவாறு இடத்திற்கு ஏற்றவாறு நிலையை மாற்றி அமைத்து கொள்வது தான் வாழ்க்கை என்றால் பச்சோந்திக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. கொடுமைகாரன் என்று பெயரெடுத்த ஹிட்லர் கூட தனது ஆசிரியருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மரணகாலம் வரையிலும் மதுவையும் சிகரெட்டையும் தொடாமலே வாழ்ந்தார். ஹிட்லர் நினைத்திருந்தால் மதுவால் குளம் வெட்டி அதில் விழுந்து நீச்சலடித்திருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யாதற்கு காரணம் லச்சியத்தில் அவருக்கிருந்த உறுதியே ஆகும். 

உத்தியோகத்திற்காக சிறிது மது அருந்தினால் தவறில்லை என்று சொல்லும் உங்கள் மனைவி அதே உத்தியோகத்திற்காக வேறொரு பெண்ணை நீங்கள் தொடுவதாக இருந்தால் சம்மதிப்பாரா? அப்போது அவர் கட்டியை மனைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணை நாடுவது சரியா என்று கேள்வி கேட்க மாட்டாரா? உங்களுக்கு தடை போட மாட்டாரா? நீங்கள் மறுத்தால் பஞ்சாயத்தில் நிற்க வைத்து தண்டனை வாங்கி தரமாட்டாரா? சுயநலத்திற்காக சத்தியத்தை கைவிடு என்று அறிவுரை கூறுவது உங்கள் மனைவியின் அறியாமையை காட்டுகிறது. மனைவி என்பவள் மதிமந்திரி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் தற்கால மனைவிகள் சதி மந்திரிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது.


Contact Form

Name

Email *

Message *