எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்வேன் ஆனால் அவர்களிடமிருந்து உதவிகளை பெறுவதில் நான் ஆர்வம் காட்டுவது கிடையாது. இந்த நிலையிலும் என்னிடம் உதவி பெற்ற நண்பர்கள் என்னை இளிச்சவாயன் என்றே பேசுகிறார்கள் ஐஸ் வைத்தால் உருகிவிடுவான் என்கிறார்கள் யார் நல்ல நண்பர்கள் என்பது தெரியவில்லை எனவே நல்ல நண்பர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?
கதிரேசன்
மும்பை
எதிரிகளிடமிருந்து என்னை நான் காப்பாற்றி கொள்கிறேன் நண்பர்களிடமிருந்து என்னை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தனை செய்து கேட்கும் அளவிற்கு நண்பர்களின் தகுதிகள் மிகவும் குறைந்து போய்விட்டது.
அப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பில் துவங்கிய நட்பு கல்லூரியையும் தாண்டி மயானம் வரையிலும் கூட வரும் இப்போதைய நட்பு கடன் வாங்கும் வரை தான் வருகிறது. காரணம் எல்லாமே பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு சிந்திக்கும் சுபாவம் மனிதனுக்கு வளர்ந்து விட்டதே ஆகும்.
உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவது உயர்ந்த நட்பு என்று வள்ளுவர் சொல்வார். இது வள்ளுவர் காலத்திற்கு மட்டும் பொருந்த கூடிய கருத்தல்ல இன்று வரையிலும் இது தான் நட்புக்கு வைத்திருக்கும் இலக்கண அளவுகோல்.
சாலையில் அடிபட்டு கிடக்கும் போது கண்டும் காணமல் போய்விட்டு மருத்துவமனைக்கு வந்து பழம் கொடுக்க கூடிய நட்பு எந்த நிலையிலும் அபாயகரமானது. எனவே துயரத்தில் கூடவருபவனையே நண்பராக கொள்ள வேண்டும். மற்ற அனைவரும் பஸ் பயணிகளே.