வீட்டு மனையில் சனிமூலையில் கிணறு அல்லது போர்வெல் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள் அவைகள் மிக சரியாக சனிமூலையிலேயே இருக்க வேண்டுமா? அல்லது சற்று முன்னும் பின்னும் நகர்ந்திருந்தால் தவறா என்பது விளங்கவில்லை குருஜி அவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.
செல்லத்துரை, அமெரிக்கா
வீடுகட்ட வேண்டிய மனையை மிகசரியான சதுர வடிவிலோ அல்ல்லது நீள்சதுர வடிவிலோ திருத்தி அதில் வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீர் சேகரிக்கும் பகுதி அமைக்க வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரம் வரையறை செய்கிறது. அதனடிப்படையில் சரியான சனிமூலையிலையே கிணறு மற்றும் தொட்டியை அமைக்க வேண்டுமென்று சிலர் நினைக்கிறார்கள் இது மிகவும் தவறு வாஸ்துபடி அப்படி அமைக்க கூடாது. சனிமூலையிலிருந்து சற்று மேற்குபுறம் தள்ளியோ அல்லது தெற்குப்புறம் தள்ளியோ அமைக்க வேண்டும். சரியாக சனி மூலையிலையே அமைந்தால் அந்த பகுதி விஷபகுதியாக மாறிவிடும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.