Store
  Store
  Store
  Store
  Store
  Store

எது வாஸ்து நாள்...?


   வாஸ்து நாட்கள் என்று குறிப்பிடப்படும் நாட்களில் மட்டும் தான் வீடுகட்ட துவங்க வேண்டுமா? அல்லது சுபமுகூர்த்த நாட்களில் கூட வீட்டு வேலையை ஆரம்பிக்கலாமா?

காந்திமதி
வியாசர்பாடி


   வீடுகட்டுவதும் சுபகாரியம் தானே அதை ஒரு சுபநாளில் துவங்குவதை விட்டு வாஸ்து நாளில் மட்டும் தான் துவங்க வேண்டுமென்று சொல்லபடுகிறதே அது ஏன்? சில வேளையில் வாஸ்து செய்ய உகந்த நேரம் என்று கணிக்கபட்டிருக்கும் நேரம் ராகு காலமாகவோ எமகண்டமாகவோ இருக்கிறது அந்த வேளையில் சுபகாரியத்தை செய்யலாமா? என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இதில் ஒருமுக்கியமான விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம்.

சுபநாட்கள் என்பது கிரகங்கள் சுபதன்மையோடு ஒரு லக்கினத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் நேரமாகும். வாஸ்து நேரம் என்பது பூமியின் உயிர்சக்திகள் இயக்கத்தை பொருத்து கணிக்கப்படும் நேரமாகும் இரண்டுக்கும் அதிக அளவில் சம்மந்தம் இல்லை ஒன்று ஆகாஷ கோள்களை கணிப்பது மற்றொன்று பூமியின் ஈர்ப்பு சக்தியை கணிப்பது எனவே சுபநேரம் என்பதும் சுபவேளை என்பதும் வாஸ்து நாளுக்கு தொடர்பு படுத்த தேவையற்றது. கிரகங்களின் படி அந்த நாள் கெட்ட நாளாக இருந்தாலும் வாஸ்து செய்ய அதுவே உகந்த நாளாகும்.




Contact Form

Name

Email *

Message *