- கனவுகளில் வரும் சம்பவங்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? விடியற்காலையில் காணுகின்ற கனவு பலிக்கும் என்கிறார்களே அது உண்மையா?
முத்துகுமார்,தாம்பரம்
நம்மால் தூங்காமல் எப்படி ஆரோக்கியமாக வாழமுடியாதோ அதே போலவே கனவுகள் காணாமல் நம்மால் உறங்க முடியாது பல கனவுகள் நமது நினைவுக்கு வருவதில்லை பல கனவுகள் அர்த்த புஷ்டியோடும் இருப்பதில்லை அதனாலேயே அவைகளை நம்மால் நினைவு படுத்தி பார்க்க முடிவதில்லை
கனவுகள் பலவகை பட்டதாக இருந்தாலும் அவைகளில் பெரும்பாலானவைகள் நமது கடந்த கால வாழ்க்கையின் நிறைவேறாத பதிவுகளாகவோ அல்லது வருங்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளாகவோ இருக்கும் எனவும் சில கனவுகள் நமக்குள் ஆழமாக பதிந்து கிடக்கும் அச்ச உணர்வின் வெளிப்பாடாகவோ இருக்கும் என்று மனோதத்துவ நூல்கள் சொல்லுங்கின்றன கனவுக்கும் மனித வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை அதில் வருவது எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளாகவோ எச்சரிக்கைகளாகவோ ஒரு போதும் அமையாது என்று விஞ்ஞானபூர்வ ஆர்வலர்கள் சொல்கிறார்கள்
நிச்சையமாக கனவுக்கும் நமது வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது நாம் பெற போகின்ற கஷ்ட நஷ்டங்களை இன்ப துன்பங்களை கனவுகள் நமக்கு முன்கூட்டியே சொல்கின்றன என்று நம்பிக்கை வாதிகள் பலர் வாதிடுகிறார்கள் விஞ்ஞான வாதம் சரியானதா? நம்பிக்கை வாதம் சரியானதா என்று நம்மால் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை காரணம் ஆய்வாளர்களும் புத்தகங்களும் ஆயிரம் விளக்கங்களை ஆணித்தனமாக எடுத்து சொன்னாலும் கூட அதற்கு நமது அனுபவபூர்வமாக முழு ஒப்புதலை கொடுக்க முடியாத நிலையிலேயே இன்று நாம் இருக்கிறோம்
கனவுகளுக்கு இன்ன பலன் என்று சொல்லுகின்ற கனவு சாஸ்திரத்தில் நமக்கு வேண்டப்பட்ட ஒருவரை திருமண கோலத்தில் கண்டால் சம்பந்தப்பட்ட அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தாற்குக்கோ அசுபம் நிகழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது நானும் இப்படி பல திருமண கனவுகளை நிறையை கண்டிருக்கிறேன் அதில் மணக்கோலத்தில் பார்த்த எவரும் அல்லது அவரது குடும்பத்தாரும் இன்று வரையில் நல்ல ஆரோக்கியமான முறையிலேயே இருக்கிறார்கள்
வீடு கட்டுவது போல கனவு கண்டாலும் நிர்வாணமாக இருப்பது போல கனவு கண்டாலும் அசுபமே நிகழ்கிறது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்ட கனவுகள் சொல்லும்படியான விளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை என்று என் அனுபவபூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும் இதை வைத்து பார்க்கும் போது கனவுகள் என்பது கலைந்து போகும் கனவுகள் மட்டும் தான் அது நிஜமாகாது பலிக்காது என்று சொல்லவேண்டிய சூழல் ஒருபுறம் வருகிறது
அதே நேரம் கனவுகள் பலித்ததற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் சிலவற்றையும் என்னால் சொல்ல முடியும் எனது நண்பர் ஒருவர் தினசரி காலையில் வாக்கிங் போகும் பழக்கம் உடையவர் அப்படி போகும் போது ரயில் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்று சுவர் ஓரமாக நின்று ஓய்வெடுப்பார் ஒரு நாள் அவர் தீடிர் என்று இனி நான் அந்த கிணற்றடியில் ஓய்வெடுக்க போவதில்லை அதன் மூலம் எதோ ஒரு வம்பு வரும் என்று நினைக்கிறேன் என்றார் எதைவைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் கனவு கண்டேன் அந்த கிணற்றுக்குள் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடைக்கிறது அதில் முதலில் பார்த்த நான் போலிசுக்கு தகவல் தருகிறேன் அவர்கள் என்னை கோர்ட் வரையிலும் இழுத்தடிக்கிறார்கள் இது தான் அந்த கனவு என்று பதில் சொன்னார்
இது என்ன ஐயா சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது கனவில் பிணத்தை பார்த்தால் பணம் கிடைக்கும் என்று தானே கனவு சாஸ்திரம் சொல்கிறது நீங்கள் சொல்கிரப்படி வம்பு வழக்கு வருவதாக ஒரு தவவலும் இல்லையே உடல் களைப்பால் இந்த கனவு வந்திருக்கும் அதை நம்பி கொண்டு வீணாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை சொன்னேன்
நல்ல வேளை அவர் எனது அறிவுரைப்படி நடக்க வில்லை அவர் சொன்ன பத்து பதினைந்து நாட்களுக்குள்ளேயே குறிப்பிட்ட அந்த கிணற்றில் யாரோ ஒருவரை கொலை செய்து வீசி விட்டு போய்விட்டார்கள் இவர் மட்டும் நான் சொன்னூப்படி கிணற்று பக்கம் வழக்கமாக போயிருந்தால் வகையாக மாட்டிக்கொண்டு தவித்திருப்பார் அந்த நண்பர் அத்தி பூத்தார் போல இப்படி சில கனவுகளை என்னிடம் சொல்வார் அவற்றில் பல கொஞ்சம் கூட பிசங்க்காமல் நடந்திருக்கிறது இன்றும் அவரது கனவுதகவகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது
எனது இந்த வாழ்க்கையிலே பல கனவுகள் பலித்திருபபதை நான் சொல்ல முடியும் சிறிய வயதில் எனது உடல் நோய் காரணமாக ஐந்தாம் வகுப்பிற்கு மேல் என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது அந்த ஐந்தாம் வகுப்பு கூட ஆசிரியர்கள் என் மீது கருணை வைத்து தூக்கி போட்டது தானே தவிர நானாக பரிச்சை எழுத பாஸ் பண்ணிய சரித்திரம் எல்லாம் கிடையாது இந்த நிலையில் எனக்கு தமிழ் பேச வருமே தவிர எழுதவோ படிக்கவோ சரிவர தெரியாது ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்றால் எழுத்து கூட்டி முட்டி மோதி படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்
எனக்கு வைத்தியம் பார்த்த மருத்துவ மனைகள் கேரளாவில் உள்ளது என்பதாலும் எனது இளம்பிராயம் பெரும்பகுதி அந்த மருத்துவ மனைகளிலே கழிந்தது என்பதனாலும் தமிழ் பேசினால் எப்படி புரியுமோ அப்படியே மலையாளம் பேசினாலும் புரியும் ஆனால் பதிலுக்கு பதில் மலையாளம் பேச தெரியாது மலையாள எழுத்துக்களை கோடு கிழித்து வரைந்தது கூட கிடையாது ஆக எனது பத்து வயது வரையில் நான் முழுமையான எழுத்தறிவு இல்லாதவனாகவே இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும் எல்லோரும் படிப்பது பார்க்க எனக்கு ஆவலாக இருக்கும் ஆனால் முடியாது இதற்காக நான் வறுத்த பட்டேன் என்று சொன்னால் அதுவும் தவறு ஏனென்றால் அந்த வயதில் பொம்மை கிடைக்க வில்லை என்று தான் வருத்தம் வருமே தவிர படிக்க முடியவில்லை என்று வருத்தம் வராது
இந்த நிலையில் பதிமூன்று வயதோ அல்லது அதைவிட சிறிது அதிகமாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறேன் அது கனவா அல்லது நினைவில் நிஜமாக நடந்ததா என்று இதுவரை என்னால் உறுதியான முடிவுக்கு வரமுடியவ்வில்லை இளமையான ஒரு அம்மா குளித்து முடித்து நெற்றி நிறைய குங்குமம் வைத்து ஈர தலை முடியை நுனியில் சிறிய முடிச்சு போட்டு சந்தன வண்ணத்தில் பட்டு புடவை கட்டி என் பக்கத்தில் வந்தார்கள் அவர்கள் எனது கை கொள்ள முடியாத அளவிற்கு நிறைய புத்தகங்களை எனக்கு தந்து தலையில் கைவைத்து எல்லாவற்றையும் படி என்று சொன்னார்கள் அவ்வளவு தான் இப்போது எனது நினைவில் இருக்கிறது
அதன் பிறகு எனக்குள் இருந்து எதோ ஒரு ஆர்வம் என்னை படிக்க தூண்டியது எழுத்துகூட்டி படிக்க முயற்சித்த நான் வெகு விரைவிலே சரளாமக வாசிக்க கற்றுக்கொண்டேன் வாசிக்க மட்டுமல்ல படித்தவைகள் அனைத்தும் நினைவில் பதிய துவங்கியது படிப்பின் மீது ஒரு வெறியை எனக்கு ஏற்பட்டது எனலாம் படித்தேன் படித்தேன் ஏராளாமாக படித்தேன் இது அது என்று பேதம் பாராட்டாமல் கையில் கிடைத்த எல்லா புத்தகங்களை படித்தேன் இன்றும் படித்து கொண்டே இருக்கிறேன்
இது மட்டும் அல்ல இப்படி நிறையே கனவுகள் எனது வாழ்க்கையில் பலித்துள்ளது பல பலிக்காமலும் இருந்துள்ளது இதுதவிற விடியற்காலை கனவு பலிக்கும் என்றோ பகல் கனவு பலிக்காது என்றோ என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஏனென்றால் அதை பற்றி எனக்கு தெரியாது