குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு இருபத்தி நான்கு வயதாகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை வீட்டில் திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள். எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசையுண்டு ஆனாலும் பல காரணங்களை சொல்லி திருமணத்தை தள்ளிபோட்டுகொண்டே வருகிறேன். அதற்கான காரணம் மிகவும் விசித்திரமானது எனது உடல் திடகாத்திரமானது நல்ல சம்பளமும் வாங்குகிறேன் எனக்குள்ள ஒரே குறை வாய் துருநாற்றம் சில வருடங்களாக இந்த குறை எனக்குள்ளது இந்த குறையால் மனைவியின் கேலி கிண்டலுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயமிருக்கிறது. ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். எந்த பயனும் இதுவரை தெரியவில்லை சித்த மருத்துவத்தில் எதாவது மருந்துண்டா? தயவு செய்து அதை சொல்லி என் குறையை தீர்க்குமாறு வேண்டுகிறேன்.
சேஷகோபாலன்,மதுரை
சிறிய குறைகள் கூட பெரிதாக தெரிவது தான் இளம்வயத்தின் இயல்பு ஓரளவு முதிர்ச்சி பெற்ற வயதும் அனுபவமும் வந்துவிட்டால் இந்த குறைக்காகவா கவலைப்பட்டோம் என்று நமக்கே வேடிக்கையாக இருக்கும். உங்களுக்குள்ள இந்த குறைப்பாடு பயப்பட வேண்டிய அவசியமே இல்லாதது.
பொதுவாக உங்களுக்கு மலச்சிக்கல் அதிகமிருக்கலாம் காரமான உணவு வேளைதவறிய உணவு அகால நேரத்தில் உறக்கம் போன்ற பழக்கம் உங்களுக்கு இருக்க கூடும். மேலும் மலச்சிக்கல் வர வேறு சில காரணங்களும் உண்டு குறிப்பாக சொல்வது என்றல்லாம் நார்ச்சத்துள்ள உணவு வகைகளை தவிர்த்து வருகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.
முதலில் மலசிக்களுக்கான காரணத்தை கண்டுபிடித்து அதை விலக்க பாடுபடுங்கள் காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மலையில் கடுக்காய் என்று வழக்கபடுத்தி கொண்டால் விருத்தரும் இளைஞர் ஆவர் என்பது முன்னோர் வாக்கு. இஞ்சி சுக்கு கடுக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்தால் செரிமான குறை வராது இதனால் மலச்சிக்கல் ஏற்படாது ரத்தம் சுத்தமாக இருக்கும் என்பது இதன் பொருளாகும்.
மலச்சிக்கல் ஏற்படுவதனால் வாய்நாற்றம் வருவதற்கு வழியுண்டு அதை நீங்கள் சரிபடுத்தி விட்டாலே பிரச்சனையை தீர்ந்துவிடும். அதையும் தாண்டி பிரச்சனை இருந்தால் கவலையே படவேண்டாம் கொய்யா இலையில் சற்று இளசாக இருப்பதை பறித்து நன்றாக மென்று சாற்றை விழுங்கி விட்டு சக்கையை துப்புங்கள் தினசரி இரண்டு வேளை இப்படி செய்தால் குடல் வாயு பிரச்சனை செரியாமை தொல்லை விலகி வாய்நாற்றம் முற்றிலும் முப்பது நாளில் ஓடியே போய்விடும். மனக்குழப்பத்தை விட்டு வாழ்க்கையை சந்தோசமாக துவங்குங்கள் இறைவன் அருளால் அனைத்தும் நல்லபடி நடக்கும்.