- மதிப்பிற்குறிய சுவாமிஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் நான் ஒரு காலத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தவன் லட்சரூபாய் என்பது அப்போது எனக்கு ஒரு பொருட்டாக கூட தெரியாது தொழிலில் ஏற்பட்ட படிப்படியான வீழ்ச்சியும் சிலரின் நம்பிக்கை துரோகமும் என்னை கடன்காரனாக தெருவில் நிறுத்திவிட்டது வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் இன்று தலைமறைவாக வாழ்கிறேன் வயதும் ஐம்பதை தொட்டு விட்டது இனியும் ஓடி ஒழிய உடம்பிலும் மனதிலும் தெம்பு இல்லை என் வாழ்க்கை இப்படியே போய் விடுமா? அல்லது விடிவு காலம் என்று எதாவது உண்டா எனக்கு எதுவும் புரியவில்லை தாங்கள் தயவு செய்து வழிகாட்டும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன் தயவு செய்து எனது பெயரை வெளியிட வேண்டாம்
பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
குதிரை குப்புற தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்தது என்பார்கள் வியாபாரம் என்பதும் ஒரு குதிரை மாதிரி தான் அதை சரிவர நாம் கவனிக்காவிட்டால் சண்டிக்குதிரையாக மாறி உதைக்க ஆரம்பித்து விடும் வேளாவேளைக்கு உணவு கொடுத்து தண்ணீரும் கொடுத்து குதிரையை பராமரிப்பது போல வியாபாரத்தையும் உழைப்பு கவனிப்பு சிக்கனம் போன்றவற்றை ஊட்டசத்தாக கொடுத்து பாதுகாக்க வேண்டும்
உங்கள் ஜாதகத்தில் உள்ள பத்தாமிடத்து குரு உச்சமடைந்துள்ளார் அதனால் உங்களுக்கு அபாரமான வியாபாரம் அமைந்தது அதே நேரம் சுக்கிரனின் தன்மை உங்களுக்கு உல்லாசத்தின் மீது நாட்டத்தையும் தகாத நண்பர்களின் சேர்க்கையையும் ஏற்படுத்தி கொடுத்து நாடோடியாக அலையவைத்து விட்டது நல்லவேளையாக தற்போது நடந்த சனிபெயர்ச்சி கோச்சாரப்படி நல்ல பலனை உங்களுக்கு கொடுக்க போகிறது அதனால் விட்ட பொருளை மீண்டும் பெற்றிட வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறது
உங்களிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டு போன பலரில் ஒருவர் உங்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் சூழல் இன்னும் ஒரு மாதத்தில் ஏற்படும் அதை வைத்து நீங்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு கிழக்கு திசையில் சிறிய அளவில் வியாபாரத்தை துவங்குகள் ஒன்றரை வருட காலத்திற்கு நல்ல வளர்ச்சியை சந்திப்பிர்கள் ஐந்து வருடத்திற்குள் பழைய நிலையை எட்டிபிடித்து விடலாம் எதாவது அம்மாவசை தினத்தில் பவானி கூடுதுறைக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.