Store
  Store
  Store
  Store
  Store
  Store

மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம்



    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்கள் எழுத்துக்களை சில மாதங்களாக படித்து வருகிறேன். நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு கருத்தும் அறிவுபூர்வமாகவும் அனுபவபூர்வமாகவும் இருக்கிறது. அதை எப்படி பாராட்டுவது என்று எனக்கு தெரியவில்லை

சில மாதங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் கோயில் திருவிழா நடந்தது அதில் கபடி போட்டி வைத்தார்கள் கபடி விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு இளைஞன் தவறுதலாக கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்து இறந்து போய்விட்டார் உற்சாகமாக நடந்த ஊர்த்திருவிழா சோகத்தில் முடிந்தது.

இளைஞன் இறந்தது ஒருவித சோகம் என்றால் வேறொரு சோகமும் அங்கே நடந்தது இளைஞரை பறிகொடுத்த அவர் குடும்பம் தங்களுக்கு கோவில் மைதானத்தில் சாமி முன்னிலையில் பெரிய இழப்பு நடந்து விட்டது இப்படி தங்கள் குடும்பத்திற்கு சோகத்தை கொடுத்த சாமியை கும்மிடமாட்டோம் இந்து மத்தத்தை விட்டே நாங்கள் மாறபோகிறோம் என்று அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் மதமாறி விட்டார்கள்

இப்படி மதம் மாறுவது அவர்களது சொந்த விஷயம் அதை பற்றி நாம் பேச கூடாது என்று நீங்கள் சொல்வீர்கள் நான் அதை கேட்க வரவில்லை தங்களுக்கு ஒரு துயரம் வந்துவிட்டால் அதற்கு காரணம் தாங்கள் சார்ந்திருக்கும் மதமே அத்தகைய மதத்தை விட்டு விடுவோம் என்று வேறு மதத்திற்கு மாறுவது சரியானது தானா? என்பதை பற்றி தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

சின்னசாமிதேவர்,மதுரை


   துயரம் இல்லாத மனிதனே பூமியில் கிடையாது. கடவுள் மனிதனாக பிறந்தாலும் துன்பத்தை அனுபவிப்பதிலிருந்து தப்பிக்க முடியாது. மகான்களும் முனிவரும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல ராமன் காட்டுக்கு போனான் கிருஷ்ணன் திருட்டுபட்டத்தை சுமந்தான் ராமகிருஷ்ணரும் ரமணரும் புற்றுநோயால் அவதிபட்டார்கள் அவர்களுக்கே அந்த நிலைமை என்றால் நம்மை போன்ற சாதாரண ஜீவன்களின் கதி என்ன? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

எறும்பிற்கும் எண் ஜான் உடம்பு என்று சொல்வார்கள் அதாவது அவரவர் தரத்திற்கு ஏற்ற துயரம் என்பது தவிர்க்கவே முடியாது. சிலநேரம் தரத்திற்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டு கூட துன்பங்கள் வரும். வந்த துன்பத்திற்கு காரணம் என்னவென்று யோசிக்க வேண்டுமே தவிர அதற்காக மற்றவர்களின் மீது பழிபோட முயற்சிக்க கூடாது

பொதுவாக மனிதன் தனது செயல்களே தனது துன்பமாக வருகிறது என்பதை ஒத்துகொள்ள மாட்டான் மற்றவர்களால் தான் தனக்கு துன்பம் வந்தது என்று பிறர் மீது பொறுப்பை சுமத்தி தட்டிகழிக்கவே விரும்புகிறான். இது மனிதனின் பொதுவான இயல்பு ஆனால் இங்கே நீங்கள் குறிப்பிடும் அந்த குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு ஒரு விபத்தால் வந்தது என்றே சொல்லவேண்டுமே தவிர யாராலையும் திட்டமிட்டு வந்தது என்று கூற இயலாது.

மரணம் என்பது விதிப்படி நடப்பது. அது இந்த இடத்தில் தான் நடக்கும் இங்கு நடக்காது என்று கூற முடியாது. எங்கு வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் மரணம் நிகழலாம். அது ஆலயமாக இருக்கலாம். அரசமரத்தடியாக இருக்கலாம். ஒருவன் புளியமரத்தில் மரத்தில் தூக்கு போட்டு செத்து விட்டான் என்றால் நாங்கள் சமையலில் புளியே சேர்க்க மாட்டோம் என்று சொல்வது எத்தகைய முட்டாள் தனமோ அத்தகைய முட்டாள் தனமே மதமாற்றம் என்பது

பக்தியால் கொள்கை ஈர்ப்பால் ஒருவன் தாய்மதத்தை விட்டு அந்நியமதம் போகிறான் என்றால் அதை குறை கூறுவதற்கோ தடுப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை மாறாக சில்லறை தனமான சுயகாரியங்களுக்கு மதமாருகிறான் என்றால் அவனை வரவேற்கும் புதிய மதத்திற்கு ஆள்பிடிக்கும் வேலையே தவிர வேறு எதுவும் அதனிடம் உருப்படியாக இல்லை என்று அர்த்தமாகும். பொதுவாக இந்த மாதிரி விஷயங்களுக்கு மத மாறுகிறார்கள் என்றால் அவர்கள் சொந்த மதத்தையும் நம்பவில்லை மாறுகின்ற மதத்தையும் மதிக்கவில்லை என்பதே அர்த்தமாகும்.

இன்று இந்தியாவில் நடக்கும் மதமாற்றம் என்பது மிக சிறந்த வியாபாரம். யார் அதிகமாக மதமாற்ற வைக்கிறார்களோ அவர்களுக்கு அந்நிய தேசங்களிலிருந்து அன்பு பரிசுகள் அதிகமாக கிடைக்கிறது. பணத்திற்காக வேலை செய்யும் மத போதகர்களிடமிருந்து நியாத்தையும் தர்மத்தையும் அறிவையும் எதிர்பார்ப்பது கடல் தண்ணீர் இனிக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு சமமாகும்.

மரணத்திற்காக மதம் மாறியவர்கள் தாங்கள் சென்ற மதத்தில் யாருமே சாவது கிடையாதா? என்பதை சற்று சிந்தித்து பார்த்தார்கள் என்றால் அவர்கள் மடத்தனம் அவர்களுக்கே புரியும். பொதுவாக இப்படிப்பட்ட மதமாரிகள் உறுதியான அறிவு இல்லாத அரைகுறை ஜீவன்கள் இவர்களுக்கு புத்தி சொல்வதை விட அவர்களை ஊதாசீனபடுத்தினால் புத்தி வருமென்று நினைக்கிறேன். அவர்களை கண்டுகொள்ளாமல் புறம்தள்ளுங்கள் கெஞ்சாத குழந்தை அழுவதை நிறுத்திவிடும்.





Contact Form

Name

Email *

Message *