- ஐயா நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களும் பெற்றோர்களும் படி படி என்று கட்டாயப்படுத்துகிறார்கள் நானும் மூச்சை பிடித்து படித்து பார்க்கிறேன் படிக்கும் எவையும் படித்தவுடன் மறந்து விடுகிறது அதனால் படித்த விஷயங்கள் உடனடியாக மனதில் பதிவதற்கு என்ன செய்ய வேண்டும் ?
கலைச்செல்வன்,சாத்தூர்
ஆர்வமுள்ள விஷயங்கள் படிக்கப்படும் போது இயல்பாகவே நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்ற முயற்சி இல்லாமலே அது மனதில் தங்கி விடும் ஆனால் ஆர்வம் இல்லாதவைகள் எப்படி எவ்வளவு தான் இடித்தும் பொடித்தும் மண்டைக்குள் ஏற்றினாலும் ஏறவே ஏறாது
உதாரணமாக சின்ன குழந்தைகளுக்கு சினிமா பாடல்கள் வரிக்கு வரி மனப்பாடம் ஆகி விடும் ஆனால் திருக்குறளும் நாலடியாரும் வேம்பாக கசக்கும் எனவே நாலு விஷயங்கள் மனதில் பதியவேண்டும் என்றால் எல்வற்றின் மீதும் ஆர்வம் செலுத்துங்கள் ஆர்வம் மட்டுமே நினைவாற்றலுக்கு பரம ஒளசதம் யோகாசனம் பிரணாயமம் வல்லாரை கீரை என்பவைகள் எல்லாம் அதற்கு பின்னால் தான்
ஒருமுறையேனும் கஷ்டப்பட்டு படித்து பள்ளியிலும் வீட்டிலும் சிறிய பாராட்டையாவது வாங்கி பாருங்கள் அந்த சுகம் உங்களை படிப்பின் மீது ஆர்வம் கொள்ள செய்து விடும் மனிதன் வெற்றி பெற அவனை யாரவது ஒருவர் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்பது இதற்காகத்தான்.