- ஒருவரோடு ஒட்டி உறவாடி அவருக்கு துரோகம் செய்வதை எந்த தர்மமும் ஏற்காது எந்த நாட்டு சட்டமும் அதை ஒத்துக்கொள்ளாது இது தான் நாகரீக சமூகத்தின் மனித நேய நிலை தமிழனும் அவன் பண்பாடும் மிக உயர்ந்தது என்று நாம் கருதுகிறோம் அப்படி பட்ட தமிழனே பகைவனை உறவாடி கெடு என்று பழமொழி பேசுகிறான் எதிரியை நேருக்கு நேராக மோதி வெற்றி கொள்வது தான் வீரமே தவிர தோளின் மேல் கைபோட்டு கழுத்தை நெரிப்பது சரியான வீரத்திற்கு அழகல்ல எனவே தமிழனின் பகைவனை உறவாடி கெடு என்ற பழமொழியை ஒழித்து கட்டுவது சரி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்
புலவர்.புவியரசன் M.A Med ,மேட்டுப்பாளையம்
வரப்பின் மீது நடந்து போகும் போது நம்ம மாணிக்க நாடாரை பாம்பு கடித்துவிட்டது சரியான வைத்தியம் செய்வதற்கு முன்பே முக்கால் பங்கு பயத்தாலும் கால்பங்கு விஷத்தாலும் மனிதன் போய் சேர்ந்துவிட்டார் என் அப்பாவை பாம்பு கடித்து கொன்றுவிட்டது அதனால் ஊரில் உள்ள பாம்புகளை எல்லாம் கொல்லபோகிறேன் என்று மாணிக்க நாடார் மகன் கிளம்பி விட்டால் அவனை புத்திசாலி என்று நம்மால் ஏற்று கொள்ள முடியுமா?
பாம்பாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த விஷ பூச்சிகளாக இருக்கட்டும் ஒவ்வொரு படைப்பிற்கும் அர்த்தம் இருக்கிறது பயனும் இருக்கிறது ஒரு நாடு வளமாக இருக்கிறதா இல்லையா என்பதை அந்த நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வைத்து சொல்லிவிடலாம் என்பார்கள் மனுஷயனை பார்த்தால் கடித்து குதறும் புலிக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்குகிறது என்று நமக்கு தோன்றும் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அவைகள் வேட்டையாடும் மான்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கவேண்டும் அதிகமாக இருக்கும் மான்கள் செழிப்பாக வளர நிறைய புற்களும் நல்ல தண்ணீரும் வேண்டும் இவை இரண்டும் பஞ்சமில்லாமல் கிடைக்கிறது என்றால் அந்த பகுதியில் மழைக்கு குறைவில்லை என்று அர்த்தம் மழை வந்தால் மகசூல் பெருகும் அது தானே நாட்டின் வளர்ச்சி

அதே போலவே உலகில் உள்ள அனைத்தும் எதாவது ஒரு காரணத்திற்க்காக படைக்கபட்டிருக்கிறது எனக்கு அது தொல்லையாக தெரிகிறது என்பதற்காக ஒவ்வொன்றையும் அழிக்க போனால் கடேசியில் எதுவும் மிஞ்சாது அதுவும் குறிப்பாக பண்பாடு கலாச்சாரம் போன்ற நுணுக்கமான விஷயங்களில் சீர்திருத்தம் பண்ணுகிறேன் புதுமையை செய்திறேன் மனித நேயத்தை வளர்கிறேன் என்று ஏடா கூடமாக எதாவது செய்ய போனால் கடேசியில் எந்த பண்பாடும் மிச்சமில்லாமல் அழிந்து போகும் எனவே ஒன்றை மாற்றி இன்னொன்றை செய்வதற்கு பதிலாக புதிதாக ஒன்றை உருவாக்க பாருங்கள் அது பழமையை விட பயனுள்ளதாக இருந்தால் எல்லோரும் ஏற்று கொள்வார்கள் பழமையும் அழியாமல் வாழும்
தமிழன் எப்படி பண்பாட்டில் கெட்டிக்காரனோ அதே போலவே ஒன்றை தப்பாக புரிந்து கொள்வதிலும் தான் புரிந்து கொண்டது சரி என்று வாதிடுவதிலும் கெட்டிக்காரன் எந்த ஊரிலாவது பெரியமனுஷன் என்று பெயரெடுத்தவன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணு நம்ப வச்சி கழுத்தறு என்று சொல்வானா? அப்படி சொன்னால் அவன் பெரிய மனுஷனா நம்ம பழைய கால தமிழன் இருக்கானே அவன் நிஜமாகவே பெரிய மனுஷன் அவன் இப்படி பட்ட குதர்க்க புத்தியை யாருக்கும் சொல்லித்தர மாட்டான் என்னென்றால் அவனுக்கு அது தெரியாது

பல பழமொழிகளை தப்பாகவே நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பயன் படுத்தியும் வருகிறோம் அப்படி பட்ட ஒன்றுதான் பகைவர் குடியை உறவாடி கெடு என்ற பழமொழியாகும் உதாரணமாக அடியாத மாடு படியாது என்ற பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கிறோம் இதற்கு அர்த்தம் சண்டித்தனம் பண்ணுகின்ற மாட்டை திருத்த வேண்டுமென்றால் அடித்து உதைக்க வேண்டும் அப்போது தான் வலிக்கு பயந்து வேலையை ஒழுங்காக செய்யும் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம் உண்மையில் இந்த பழமொழிக்கு இது அர்த்தமல்ல
அடியாத மாடு படியாது என்றால் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனித்தனி பொருளை காண வேண்டும் அடி என்பது உதைப்பதை மட்டும் குறிக்காது நீளம் முடிவு என்ற பொருட்களோடு கஷ்டம் பாடுபடுதல் என்ற பொருளையும் குறிக்கும் அதே போல பழமொழியின் அடுத்த வார்த்தை மாடு என்பது நாலு காலுள்ள ஜீவனை மட்டும் சுட்டிக்காட்டாது மனித வாழ்க்கைக்கு தேவையான பொருள் வளத்தையும் அதாவது செல்வத்தையும் மாடு என்ற வார்த்தை குறிக்கும் அடுத்தது படியாது என்றால் அது பணிந்து போகாது என்று பொருள் கொள்ள கூடாது நிலைக்காது பதியாது என்பது அர்த்தமாகும் அதாவது கஷ்டப்பட்டு சேர்க்காத செல்வம் நிலைக்காது என்பது தான் அடியாத மாடு படியாது என்ற பழமொழியின் உண்மை பொருள் அதை விட்டு விட்டு தமிழன் ஜீவகாருண்யமே இல்லாமல் போதனை செய்கிறான் என்பது அறிவுடைமை ஆகாது

வேறொரு உதாரணத்தையும் இங்கு சொல்ல வேண்டும் நாயை கண்டால் கல்லை காணோம் கல்லை கண்டால் நாயை காணோம் என்ற பழமொழியை எடுத்து கொள்வோம் இதற்கு நாயும் கல்லும் ஒரே நேரத்தில் கிடைக்காது என்பதா பொருள்? அப்படி பட்ட பழமொழியை சொல்வதனால் என்ன பயன் இருக்கிறது நிச்சயம் இந்த பழமொழியின் பொருள் இதுவல்ல ஆலயத்தில் சிலையாக இருக்கும் இறைவனை கல்லாக பார்த்தால் அது கல்தான் உலகத்தை படைத்த இறைவனான நாயகனை பார்த்தால் அது கல்லாக தெரியாது கடவுளாகவே தெரியும் நாயகன் என்ற வார்த்தை நாய் என்று மருவி விட்டதே இதன் அர்த்தம் அனர்த்தனம் ஆன கதை
அதே போன்று தான் பகைவர் குடியை உறவாடி கெடு என்ற பழமொழியும் நம்மால் தவறுதலாக பொருள் கொள்ளப்படுகிறது ஒருவன் உன்னை பகைவனாக எதிரியாக நினைத்து வன்மம் பாராட்டினால் அவன் மீது பதிலுக்கு பதில் நீயும் வன்மம் பாராட்டாதே மாறாக அவனோடு உறவாடு அவன் உன்னை சரியாக புரிந்து கொள்ளுமாறு அவன் மனதிற்குள் வளர்ந்து நிற்கும் பகைமை என்ற தீய எண்ணம் கெடுமாறு அதாவது இல்லாது போகுமாறு அன்பு பாராட்டி அவனையும் நல்வழி படுத்து என்பதே இந்த பழமொழியின் உண்மை பொருள் இதில் வருகின்ற குடி என்ற வார்த்தை பகைவரின் குடும்பத்தாரையும் சேர்த்து அவர்களுக்குள்ளும் பகமை இல்லாதவாறு செய் என்று தான் பொருளே தவிரே அவர்கள் குடும்பத்தையே அழித்து விடு என்று என்பதல்ல
நம் நாட்டிலும் சரி வீட்டிலும் சரி பல பிரச்சனைகள் உருவாவதே தவறுதலாக சில விஷயங்களை புரிந்து கொள்ளுதலே ஆகும் நின்று நிதானமாக சிந்தித்து சரியாக எதையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தோம் என்றால் எந்த இடத்திலும் சண்டை சச்சரவுகள் வராது ஆனால் இதை பல நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம் இதனாலேயே அவஸ்தையும் படுகிறோம்.