- சிறு வணிக சந்தையில் அந்நிய முதலிடுகள் அனுமதிக்கப்படுவது மூலம் காங்கிரஸ் நாட்டுக்கு தொண்டு செய்திருக்கிறதா?
நமது நாட்டை ஆளுகின்றவர்களிடமும் ஆளப்போகிறவர்களிடமும் ஒரு கொடிய வியாதி சுந்திரம் பெற்ற நாள் முதலே ஆட்டிப்படைத்து வருகிறது அது என்னவென்றால் எப்பாடு பட்டாவது இந்த நாட்டின் சுய தொழிலையும் அடித்தட்டு மக்களையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பது தான் அந்த எண்ணத்தின் இன்னொரு பிரதிபலிப்பே சிறு வணிகத்தில் அந்நிய முதலிட்டுக்கு அனுமதி கொடுப்பதாகும்
நமது அரசாங்க கனவான்கள் பொருளாதார மேதைகள் எல்லோருமே இந்த அனுமதியால் அடித்தட்டு வியாபாரிகள் எந்த பாதிப்பையும் அடையப்போவதில்லை என்கிறார்கள் அதாவது பத்துலட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டும் தான் இந்த முதலீடுகளுக்கு அனுமதி மற்ற இடங்களில் இல்லை என்கிறார்கள் இந்த சமாதான மொழிகளை சில அரசியல் லாவணி பாடகர்கள் ஊர் முழுவதும் பாடவும் போகிறார்கள்
எந்த நேரத்திலும் மத்திய அரசின் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை முதலில் பத்துலட்சம் மக்கள் உள்ள இடங்கள் மட்டுமே என்பார்கள் கடேசியில் ஐயாயிரம் மக்கள் வாழும் பகுதிகளுக்கும் படிப்படியாக வந்துவிடும்
அந்நிய முதலிடு வரட்டுமே வியாபாரத்தில் போட்டி ஏற்பட்டால் தாரமான பொருட்கள் மக்களுக்கு கிடைக்கும் அல்லவா என்று சிலர் நினைக்க கூடும் ஆனால் இதில் எள்ளளவும் உண்மை இல்லை காரணம் அந்நிய முதலிடு உள்ளே வந்தால் கிராம பகுதியில் சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தும் பல்லாயிர கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களையே இழந்து விடுவார்கள் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டது போன்ற சம்பவங்கள் சிறு வணிகர்கள் வரை நடை பெரும் நிலை வந்து விடும் எனவே ஆரம்பத்திலேயே புத்தி உள்ள மக்கள் இதை எதிர்க்க வேண்டும் .
- பால்விலை மின்சாரக்கட்டணம் பேருந்து கட்டணம் போன்றவைகளை அரசாங்கம் உயர்த்தி இருப்பது சரியான முடிவு தானா?
கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற தில்லுமுல்லுகளால் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவங்கள் கடுமையான நெருக்கடியில் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது அந்த நிறுவங்களை இழுத்து மூடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு அதற்காக சில சீர்திருத்த பணிகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது
அதற்காக அவைகளை பயன்படுத்துபவர்கள் மீது மட்டுமே சுமைகளை ஏற்றுவது பொறுப்புள்ள அரசாங்கம் செய்யும் வேலையல்ல போக்குவரத்து துறையில் வாகனங்களை பழுது பார்த்தல் எரி பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றின் நடைபெறும் முறைகேடுகளை கண்காணித்து நீக்கினாலே கட்டணம் உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது ஆவின் நிறுவனமும் ஏறக்குறைய இதே நிலையில் தான் உள்ளது அவைகளை எல்லாம் சரிபடுத்துவதை விட்டு விட்டு மக்களை கஷ்டப்படுத்துவது கண்டிக்க தக்கது
தற்போதைய ஆட்சியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் வெகுதொலைவில் இருக்கிறது அது வருகின்ற வரை மக்களை தாஜா செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் திமுக காரர்களை போலவே இருக்கிறது ஆடும்வரை ஆட்டம் ஆட்டம் நின்றால் ஓட்டம் என்ற பழைய கதையை அம்மையார் நினைத்து பார்க்க வேண்டும்.
- உத்திர பிரேதேச மாநிலத்தை மாயாவதி நான்காக பிரிக்க போவதாக அறிவித்திருப்பது எதை காட்டுகிறது?
இப்போது நாட்டில் இருக்கும் அரசியல் வாதிகள் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு எத்தகைய ஒழுங்கீனமான காரியங்களையும் செய்வார்கள் என்பதை காட்டுகிறது மாயாவதி மாநிலம் பெரிதாக இருப்பதினால் அதிகாரபரவலுக்கு தடை ஏற்படுகிறது என்கிறார் அவர் பேச்சை கேட்டால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை
ஒரு மாநிலத்தின் அதிகாரம் பரவலாக செயல்படுவதற்கு பஞ்சாயத்து அமைப்புகள் வலுவோடு இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்த சங்கதி ஆனால் மாயாவதி ஐந்து வருடமாக உத்திரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்களையே நடத்த வில்லை நீதி மன்றம் அறிவுறுத்திய பிறகும் தேர்தல் நடத்துவது பற்றி அவர் சிந்திக்க வில்லை அப்படி பட்ட மாயாவதி தான் அதிகார பரவலுக்கு மாநிலத்தை நான்காக பிரிக்க போகிறாராம் நல்ல வேடிக்கை
இந்திய அரசியல் வாதிகள் மக்களை அறிவு பூர்வமாக சிந்திப்பதற்கோ செயல்படுவதற்கோ எப்போதும் விட மாட்டார்கள் உணர்வுகளை கொம்பு சீவி விட்டு குளிர்காயவே விரும்புவார்கள் அது தான் இப்போது உபியில் நடைபெற்று கொண்டிருக்கிறது அற்பமான காரணங்களுக்காக உணர்வுகளை தூண்டிவிடும் அரசியல்வாதிகள் சட்டப்படி தண்டிக்கப்படும் நிலைவந்தால் தான் இவர்களின் ஆட்டம் அடங்கும்.