Store
  Store
  Store
  Store
  Store
  Store

கோவணம் வாங்க காசு இல்ல ஆராரோ ஆரிராரோ...


ராரோ ஆரிராரோ யாரும் அடிக்காம 
ஏது சொல்லும் சொல்லாம 
தானாக தொட்டிலிலே தூங்குகின்ற தங்கமே
கண்களை தொறக்காம கனவுகளை காணாம 
அப்படியே தூங்கு ஐயா 
அம்மா நான் எழுப்பும் வரைக்கும் 

விளக்கு ஏற்ற எண்ணெய் இல்ல
வெளிச்சம் போட கரண்டு இல்ல 
ஒழுகிவிடும் வியர்வை காய 
காற்றாடி சுற்றிச்சினா கரண்டு பில்லு ஏறிவிடும் 
கட்டுறதுக்கு காசு இல்ல 

வேலைக்கு நான் போனாதான் 
வீட்டுல அடுப்பெரியும்
மேஸ்திரியும் கூப்புடுறார் 
பஸ் ஏற வக்கு இல்ல 
பத்துரூபா டிக்கட்டு பலமடங்கு ஆயாச்சு 
கூலியெல்லாம் டிக்கெட்டா போச்சினா 
சோத்துக்கு நான் என்ன செய்வேன் 

அதனாலே மகனே நீ 
அப்படியே தூங்கு 
பதறி போய் கண் விழிச்சா 
பசியால் தான் அழவேண்டும்

நீவந்து பொறப்பதற்கு 
காரணமா ஆன அப்பன் 
பாதாள சாக்கடைக்குள் 
பாட்டில் போட்டு தூங்குகிறான்
பத்துரூபா சம்பாதிச்சா பறிச்சிகிட்டு போயிடுகிறான் 
பொம்பளையா பொறந்த என்ன 
கட்டியவனும் மிதிக்கிறான் 
டாஸ்மார்கு கடபோட்டு விக்கிறவனும் மிதிக்கிறான் 

அண்ணாச்சி இருந்தாக்கா 
அடிமாடா போவோம்னு 
அம்மாவ கொண்டு வந்தோம் 
அப்படியும் விடியல 
குடிச கஷ்டம் முடியல 
எப்போது முடியும்னு 
பாவி எனக்கு தெரியல 
ஆண்டு நூறு ஆகலாம் 
அது வரைக்கும் நீ தூங்கு 

கோபுரத்தில் நீ பிறந்தால் 
குரல்கொடுத்து கேட்கலாம் 
குப்பையிலே பிறந்ததனால் 
மூச்சி இழுத்து சத்தமா 
முனகலாய் நீ விட்டாலும் 
அந்நிய ஏஜன்டுன்னு அடிச்சு உதைப்பாங்க
கோவணம் வாங்க காசு 
தந்தது யாருன்னு ஆளுவச்சி கேட்பாங்க 

சித்தாளு வீட்டுக்குள்ள 
சித்தெறும்பும் வராது 
செத்து அலுகினாலும் 
காக்கா வந்து கொத்தாது 
பணம்படைச்சவன் கையில 
சின்னமுள்ளு குத்தினாலும் 
சீமையிலே இருந்து நூறு 
ஏரோப்பிளேன் பறந்து வரும் 

வக்கில்லாத ஆத்தாவுக்கு 
வந்துதிச்ச மகராசா 
கொடுமைகளை காணாம 
சொகமா நீ கண்ணுறங்கு ஆராரோ ஆரிராரோ.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCAwzxeRuGcMhVu5ZS5871oEWWb56mzihiKmW0q9kzYye_GRgiKYx-KXOBIXGb2N1A3VSUnJ3-_LElDG1n_-sG8w3cCR4s_zT60ZuvEZSZ6aQZac-LgAT-lBuGTaD0dE-K1HjfeeKSBXQ/s1600/sri+ramananda+guruj+3.JPG

Contact Form

Name

Email *

Message *