- கர்ம வீரர் காமராஜருக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன?
இருவருமே கஷ்டமான குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவருமே தமிழ் நாட்டின் வரலாற்று நாயகர்கள் முன்னவர் தமிழ் நாட்டை தன்குடும்பமாக கருதினார் பின்னவர் தன் குடும்பத்திற்கு தமிழ் நாட்டை பத்திரம் எழுத முயன்றார் முன்னவர் எப்படி ஆளவேண்டும் என்பதற்கு இலக்கணம் பின்னவர் எப்படி ஆளக்கூடாது என்பதற்கு அடையாளம்
- மாகத்மா காந்திக்கும் சோனியா காந்திக்கும் என்ன வித்தியாசம்?
மாகத்மா காந்தி அந்நியரை எதிர்த்து போராடினார் சோனியா காந்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறார் மாகத்மா காந்தி பொது பணத்தை பொதுகாரியங்களுக்காக மட்டுமே செலவழித்தார் சோனியா காந்தி பொது பணத்தையும் தனதாகவே கருத்துகிறார் மகாத்தமா காந்தி இந்தியாவின் குரலாக பேசினார் சோனியாகாந்தி இந்தியாவை விலை பேசுகிறார்
- புரட்சி தலைவருக்கும் புரட்சி கலைஞருக்கும் என்ன ஒற்றுமை?
எம்ஜிஆர் காரண காரியத்தோடு பேசுவார் விஜயகாந்த் காரணமே இல்லாமல் பேசுவார் எம்ஜிஆர் நடிப்பதை திரைப்படத்தோடு நிறுத்தி கொண்டார் இவரோ எல்லா இடத்திலும் நடிக்கிறார் எம்ஜிஆரின் குடும்ப உறுப்பினர்களை தொண்டர்கள் யாருக்கும் தெரியாது விஜயகாந்த் விஷயத்திலோ குடும்ப உறுப்பினர்கள் தான் தொண்டர்களின் வழிகாட்டிகள்
- இந்திரா காந்திக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன வித்தியாசம்?
புகழ்ச்சிக்கு மயங்காதவர் இந்திரா அதற்கு எப்போதுமே அடிமை ஜெயலலிதா இந்திரா காந்தி சர்வதிகாரத்திற்கு ஆசைப்பட்டதற்கு காரணம் இந்தியா வளரவேண்டும் என்று ஜெயலலிதா சர்வதிகாரியாக இருப்பதற்கு காரணம் யாரும் வளரக்கூடாது என்று இந்திரா காந்தியின் தீர்மானங்களை அவர் மட்டுமே எடுப்பார் ஜெயலலிதாவின் தீர்மானங்களை யார் யாரெல்லாமோ எடுப்பார்கள் முன்வைத்த காலை பின்வைக்காதவர் இந்திரா முன்னே பின்னே எங்கு வேண்டுமானாலும் வைப்பார் ஜெயலலிதா அவர் காரிய புலி இவர் சுய காரிய புலி அவர் நிஜ சிங்கம் இவர் பொம்மை சிங்கம்.