Store
  Store
  Store
  Store
  Store
  Store

வசியப்படுத்துவது தவறல்ல !


     ந்த மனிதருக்கு எழுபது வயது இருக்கும் ஒரு காலத்தில் ராஜபோகமாக வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கண்களிலும் பேச்சிலும் தெரிந்தது ஆனால் பார்ப்பதற்கு கண்ணக்கள் ஒட்டி தோல் வறண்டு தலைமுடியை கூட ஒழுங்காக வாராமல் வறுமையான தோற்றத்தோடு என் முன்னால் நின்றார் எத்தனையோ இடங்களின் கதவுகளை தட்டி விட்டேன் எங்கேயும் எனக்கு நிவாரணம் கிடைக்கவில்லை கடேசியாக உங்களிடம் வந்திருக்கிறேன் நீங்களும் எனக்கு நிவாரணம் தரவில்லை என்றால் வராத எமனை வலிய வரவழைப்பதை தவிர வேறு மார்க்கம் எனக்கில்லை என்றார் 

அவர் சொற்களில் வெளிப்பட்ட விரக்தியும் குரலில் காணப்பட்ட நடுக்கமும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்யும் என் மனமும் அவர்பால் திரும்பி உங்களுக்கு என்ன பிரச்சனை அதற்கு என்ன நிவாரணம் வேண்டும் என்று கேட்டேன் என் முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்த அவர் சட்டை பையில் இருந்து ஒரு போட்டோவை எடுத்து என்னிடம் கொடுத்தார் அது ஒரு அழகான இளம் தம்பதியின் போட்டோ யார் இவர்கள் என்று கேட்டேன் 



படத்தில் மாலையும் கழுத்துமாக சிரிப்பது என் மகனும் மருமகளும் இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த போது எடுத்த படம் இது என்று கூறிய அவர் தான் வந்த காரணத்தை என் முன்னால் விவரிக்க ஆரம்பித்தார் அவர் சொல்ல சொல்ல என் கண்முன்னால் இன்றைய யதார்த்தமான தமிழ் சமூகத்தின் நிலை எழுந்து நின்று கோர சிரிப்புடன் என்னை முறைத்தது

ஐயா எனக்கு திருவாரூர் பக்கத்தில் ஒரு கிராமம் காவேரியின் கருணையால் என் கிராமம் இன்று கூட பசுமையாகத்தான் இருக்கிறது பழங்கால கோவிலும் பழகுவதற்கு இனிய மக்களும் எங்கள் கிராமம் பெற்ற வரப்பிரசாதமாகும் என் தந்தையார் ஒரு திண்ணை பள்ளி ஆசிரியர் நல்ல விவசாயி நானும் என் அண்ணனும் இரண்டு அக்கா மாறும் அவருக்கு குழந்தைகள் இப்போது அவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன்

என் தந்தையாருக்கு தமிழ் மீது நிறைய ஈடுபாடு இருந்ததால் என்னை தமிழ் படிக்க வைத்தார் நான் தமிழில் முதுகலை பட்டம் வரை பெற்று ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயமும் பெற்றேன் தஞ்சாவூரில் ஒரு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக வாழ்வை துவங்கினேன் எனது தாயாரின் தம்பி மகளையே திருமணம் செய்தேன்


எனக்கு மனைவியாக அமைந்தவள் மானிட பெண்ணே அல்ல தேவலோகத்தில் இருந்து வந்த மாதரசி என்று சொன்னால் அது மிகையில்லை எனக்கு மதி சொல்லும் மந்திரியாக தொண்டு செய்யும் சேவகியாக தவறுகளை சுட்டிகாட்டுவதில் தோழியாக என்னை கவனித்து கொள்வதில் தாயாக தவறு செய்யும் போது தண்டிக்கும் அதிகாரியாகக் அவளிருந்தாள் நாங்கள் இருவரும் ஒருநாள் கூட சண்டை போட்டுக்கொண்டு முகத்தை திருப்பிகொண்டது கிடையாது

ஏனோ தெரியவில்லை எங்கள் திருமணம் முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகே ஒரு மகன் பிறந்தான் அவன் மட்டும்தான் எங்களுக்கு குழந்தை வேறு குழந்தைகள் எதுவம் கிடையாது ஒரே மகன் என்பதனால் அவன் மீது நாங்கள் இருவரும் உயிரையே வைத்திருந்தோம் அவன் சிரிப்பது அழுவது நடப்பது ஓடுவது என்று அவன் சம்பந்தப்பட்ட எல்லாமே எங்களுக்கு சொர்கமாகத்தான் தெரிந்தது என்று சொன்ன அவர் நீண்ட பெருமூச்சி விட்டு சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார் மூடிய கண்களுக்குள் குழந்தையான மகன் விளையாடிய மழலை சொல் பேசிய சம்பவங்கள் திரைப்படம் போல் ஓடுயிருக்க வேண்டும் அவர் முகத்தில் தெரிந்த மந்தகாச புன்னகை அதை சொல்லாமல் சொல்லியது

என் மகனை நாங்கள் தரை மீது நடக்க விட்ட காலம் மிக குறைவு புதிய புதிய ஆடைகள் கண்ணை கவரும் வண்டி வாகனங்கள் என்று அவன் எதை கேட்டானோ எதை விரும்பினானோ அத்தனையையும் உடனுக்குடன் செய்து கொடுத்தோம் ஒரே பிள்ளை செல்ல பிள்ளை என்பதற்காக அவன் படிக்காமல் ஒழுக்கமில்லாமல் ஊர் சுற்றியது ஒருநாள் கூட கிடையாது படிப்பில் என் அப்பா போல அவன் மாக கெட்டிக்காரன் டாக்டருக்கு தான் படிப்பேன் என்றான் பூர்விக சொத்தில் என் பங்கையும் சேமிப்பில் இருந்த பணத்தையும் போட்டு மெடிக்கல் சீட் வாங்கி கொடுத்தேன்


பெற்றவர்களின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படித்தான் ஆனாலும் நாங்கள் எங்கள் சிரமத்தை அவனிடம் எப்போதுமே காட்டியது இல்லை அவனுக்கு கொடுக்காத பணம் எங்களுக்கு எதற்கு அதனால் அவன் சில நேரங்களில் அதிகப்படியாக செலவு செய்தால் கூட அதை கண்டிப்பதில்லை அவன் படிக்கும் காலம் முழுவதும் அவன் எங்களோடு இல்லையே என்று வருத்தபட்டோமே தவிர வேறு எந்த கஷ்டமும் கிடையாது

கடவுள் அருளால் நல்லவிதாமாக படித்து முடித்து வெளியில் வந்தான் வெறும் எம்.பி.பி.எஸ் படித்தால் போதாது இன்னும் மேலே படிக்க வேண்டும் என்று விருப்ப பட்டான் அதனால் நான் கடன் பட்டேன் கவலை பட வில்லை பையனை மேலும் படிக்க வைத்தேன் அதையும் அவன் நல்ல விதமாக முடித்து விட்டு சென்னையில் பெரிய மருத்துவ மனை ஒன்றில் பணிக்கு சேர்ந்தான் இந்த நேரத்தில் தான் தன்னோடு பணி புரியும் ஒரு பெண்ணை விரும்பி இருக்கிறான் அவளும் டாக்டர் தான் தனது விருப்பத்தை எங்களிடம் சொன்ன போது நாங்கள் அதை மறுக்க வில்லை அந்த பெண்ணையே கட்டி வைக்கிறோம் என்று சொல்லி அதற்க்கான வேலைகளை கவனித்தோம்

அந்த பெண் எங்கள் ஜாதி அல்ல அவள் சொந்த ஊர் நாகர்கோவில் அவள் தந்தையார் அந்த பகுதியில் புகழ் பெற்ற மருத்துவர் என் பையனுக்கு பெண்ணை தர அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க வில்லை பல்வேறு நிற்பந்தங்களுக்கு பிறகே திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது


இந்த வேளையில் என் மனைவியை கொடுமையான புற்று நோய் தாக்கியது ஒவ்வொரு வினாடியும் அவஸ்தை பட்டு என்னையும் வேதனையில் துடிக்க விட்டு புண்ணியவதி போய் சேந்து விட்டாள் நான் பணி ஓய்வு பெற்ற போது கிடைத்த பணம் எல்லாமே பையனின் படிப்பிற்கு போய் விட்டது மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதற்கு கூட என்னிடம் அப்போது பணமில்லை என் வாழ்வில் முதல் முறையாக என் மகனிடம் என் கஷ்டத்தை பேசினேன் எப்படியும் அம்மா சிகிச்சைக்கு பணம் பார்த்து விடலாம் கவலை படாதீர்கள் என்று ஆறுதலாக பேசினான் எனக்கு நான் சாய்ந்து கொள்ள வலுவான தோள் கிடைத்திருக்கிறது என்ற சந்தோசம் பிறந்தது

ஆறுதலாக பேசிய மகன் இரண்டு நாளில் முற்றிலுமாக மாறுபட்டு என்னோடு பேசினான் அப்பா அம்மாவுக்கு வந்திருக்கும் நோய் நிச்சயம் குணமாகாது தீராத நோயை தீர்பதற்கு கடன்பட வேண்டுமா? என்னால் முடியாது என்று நினைக்கிறேன் நீங்கள் நன்றாக யோசித்தால் நான் சொல்வதை சரி என்பீர்கள் என்றான் என் இதயத்தில் சம்மட்டி கொண்டு அடித்தது போல் இருந்தது என் மகனா நான் பெற்ற மகனா என் மனைவியின் உதிரத்தில் வளர்ந்த மகனா இப்படி பேசுகிறான் என்னால் நம்பவே முடியவில்லை அவன் சொற்களை ஜீரணிக்கும் சக்தி எனக்கில்லை


பெற்ற பிள்ளை தாயை கைவிட்டது போல் கட்டிய கணவன் மனைவியை கைவிட முடியுய்மா எப்படியும் சாகபோகிறாள் என்பதற்காக நோயோடு போராடாமல் இருக்க முடியுமா மனம் தான் பொறுக்குமா? மகன் படிப்பிற்காக கடன்காரனாக நின்ற நான் என் மனைவிக்காக பிச்சை எடுக்கவும் தயாராகி விட்டேன் போகாத இடமெல்லாம் போனேன் கேட்காதவர்களிடமெல்லாம் கேட்டேன் என்னால் முடிந்த வரை மனைவியை காக்க போராடினேன் ஆனாலும் தோற்று போனேன் இப்போது தனிமரமாக நிற்கிறேன்

கடனுக்கு காரணமான மனைவி போய்விட்டாள் கடன் பட்ட நான் இருக்கிறேன் அல்லவா அதனால் கொடுத்தவர்கள் கேட்பார்கள் என் சொற்ப ஓய்வூதியத்தை வட்டிகொடுக்க மட்டுமே பயன்படுத்துகிறேன் கடனை முழுமையாக அடைக்க வழி தெரியவில்லை வெட்கத்தை விட்டு மகனிடம் மீண்டும் கேட்டேன்

அவன் இறக்கமே இல்லாமல் பத்து பைசா கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டான் பற்று பாசத்தோடு இருந்த மகன் பண்பாட்டோடு வளர்ந்த மகன் எப்படி இப்படி மாறினான் என்று எனக்கு தெரியவில்லை நான் என் தகப்பனுக்கு சோறு போட மறுத்திருந்தால் அவர் கஷ்டங்களுக்கு தோள்கொடுக்க தயங்கியிருந்தால் என் மகன் என்னிடம் இப்படி நடப்பதில் ஞாயம் இருக்கிறது நான் முறைதவறிய மகனாகவும் இல்லை பண்படாத தகப்பனாகவும் இல்லை பிறகு எப்படி எனக்கிந்த அவல நிலை வந்தது கடவுளுக்கு தான் அதன் காரணம் தெரியும்


என் மருமகள் அவன் மனதை மாற்றிவிட்டாள் அவன் பெண்டாட்டி தாசனாகி விட்டான் பணத்திற்கு அடிமையாகி பெற்றவர்களை கை கழுவி விட்டான் என்று எல்லோரும் பேசுகிறார்கள் நான் என் மருமகளை குறைசொல்ல மாட்டேன் அப்படியே அவள் தடுத்திருந்தாலும் கெட்ட மதியை இவனிடம் புகுத்திருந்தாலும் இவன் தான் அதை தடுத்திருக்க வேண்டும் பெற்றவர்களுக்கு உதவுவது தன கடமை என்று வலியுருத்திருக்க வேண்டும் அதை இவன் செய்ய வில்லை அதனால் இவன் தான் குற்றவாளி

அம்மா இல்லாமல் அப்பா மட்டும் தனியாக ஊரில் அவதி படுகிறாரே அவருக்கு சாதம் வடித்து கொடுக்க உடம்புக்கு சரியில்லை என்றால் மருந்து வாங்கி கொடுக்க யாரும் இல்லையே என்று அவன் நினைத்து கூட பார்க்க வில்லை நண்பர்களோடு மணிக்கணக்காக செல்போனில் பேச தெரிந்த அவனுக்கு என்னிடம் ஒரு வார்த்தை பேச கூட நேரமில்லை அவனை மகனாக பெற்றதற்கு நான் கஷ்டத்தை அனுபவிக்கலாம் அதற்காக வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் சாக நான் விரும்பவில்லை அதற்கு நீங்கள் எதாவது வழி கூறுங்கள் என்று தழுதழுத்த குரலில் என்னிடம் பேசினார்

அவருடைய கஷ்டத்திற்காக வருத்தப்படுவது மனிதாபிமானமாக இருக்கலாம் ஆனால் அந்த வருத்தம் மட்டுமே அவர் குறையை தீர்க்காது எனவே ஒரு முடிவுக்கு வந்த நான் அவரிடம் ஒரு மூலிகை உருண்டையை கொடுத்து இதை வீட்டில் வையுங்கள் நாலு மாதம் கழித்து என்னை வந்து பாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்

சரியாக ஐந்தாவது மாதத்தில் என்னை காண அவர் வந்தார் வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது சுவாமி நீங்கள் கொடுத்ததை நம்பிக்கை இல்லாமல் தான் கொண்டு போனேன் ஆனால் அதிசயம் பாருங்கள் பதினைந்தே நாட்களில் என் மகன் என்னை காண வந்தான் என்னிடம் பாசமாக பேசினான் தாயாருக்காக பட்ட கடனையும் அடைத்து விட்டான் உடனே ஓடோடி வந்து உங்களை பார்த்திருப்பேன் ஆனால் விஷஜுரம் தாக்கியதால் என்னால் வரமுடியவில்லை அவன் திரும்பி திருந்தி நல்ல பையனாக வருவதற்கு நீங்கள் என்ன மாயம் செய்திர்கள் என்று என்னிடம் கேட்டார்

எல்லாம் கடவுள் சித்தப்படி நடந்தது அதில் என் பங்கு எதுவும் இல்லை மகனோடு சந்தோசமாக வாழுங்கள் என வாழ்த்தி அவரை அனுப்பி வைத்தேன் ஆனால் அவருக்கு தெரியாது நான் அவரிடம் கொடுத்தது மனித வசிய மூலிகை மருந்து என்று ஒரு மனிதனை வசியப்படுத்த மருந்துகளை பயன்படுத்துவது தவறு என்று எனக்கு தெரியும் இருந்தாலும் உடம்பில் புடைத்து கொண்டு கிளம்பும் கட்டியை அகற்ற வெட்டி எரிய கொலைக்கு பயன்படும் கத்தியை கூட பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம் இத்தகைய வசிய மூலிகைகளின் ரகசியங்களை இதற்காகத்தான் சித்தர்கள் கண்டறிந்தார்கள்.


 முகவரி
                 ஸ்ரீ குருஜி ஆசிரமம்,
                 விழுப்புரம் சாலை
                 காடகனூர் அஞ்சல் 605755
                 விழுப்புரம் மாவட்டம்
                 தமிழ்நாடு
                 cell no = +91-9442426434



Contact Form

Name

Email *

Message *