Store
  Store
  Store
  Store
  Store
  Store

எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்?


  • பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்?
ராஜா திருவண்ணாமலை

   மது இந்து தர்மம் ஒரு குழந்தை மண்ணில் மனிதனாக பிறந்தாலும் அதன் வாழ்வு ஐந்து வயது வரை தேவவாழ்வு என்று சொல்கிறது அதாவது அந்த வயது வரை குழந்தையின் மனதில் கள்ளம் கபடம் துளி கூட வேர் விடாது

அது மட்டும் அல்ல சென்ற ஜென்மாவில் ஆன்மிக வாழ்க்கயை துவங்கி அதை எந்த காரணத்திற்காகவோ பரிபூரணமாக முடிக்காமல் இறந்து போனவர்கள் இப்போது இந்த குழந்தையாக பிறந்திருக்கலாம்

அவர்கள் அதிகபட்சமாக ஐந்து வருடம் வரை இந்த பூமி வாழ்வை மேற்கொள்ளலாம் அதனால் எந்த குழந்தையும் ஐந்து வயது வரை பெற்றோர்களுக்கு சொந்தமில்லை என்று புகழ் பெற்ற கருடபுராணம் சொல்கிறது


பல ஜோதிட வல்லுனர்கள் கூட இந்த கருத்தை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் ஐந்து வயது வரை என்பதில் மாற்றுக்கருத்துக்களை சொல்கிறார்கள்

கருடபுராணம் கணக்கு மற்ற யுகங்களுக்கு சரியாக வரலாம் கலியுகத்தில் வருடத்தின் அளவு குறையும் அது ஒருவருடம் தான் என்கிறார்கள்

பல புராண சாஷ்திரங்க்களை பகுத்து பார்த்தால் ஜோதிடர்களின் கருத்து சரியானதாகவே தெரிகிறது எனவே ஒரு குழந்தை பிறந்து ஒருவருடம் முழுமையாக நிறைவு பெற்ற பிறகு ஜாதகம் எழுவதுவது தான் சரியான முறை அதற்குள் அவசரப்பட்டு எழுத வேண்டிய அவசியம் இல்லை

அப்படி எழுதினால் என்ன நடக்கும் குழந்த்தைக்கு எதாவது பாதிப்புகள் ஏற்படுமா என எண்ணம் உதயமாவது இயற்க்கை

என் அனுபவத்தை பொறுத்தவரை பிறந்து சில மாதங்களில் ஜாதகம் கணிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நோய் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதை அறிவேன்


காரணம் நாம் ஜாதகம் எழுதுவதோடு நின்றுவிடுவது இல்லை பலனையும் பார்க்கிறோம் அந்த பலன் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் குழந்தையை காணும் போதெல்லாம் ஜோதிடர் கூறிய பலனை பற்றி நினைக்க தோன்றும்

அந்த நினைவுகள் குழந்தையை அதனுடைய சூட்ச்சம சக்தி திறனை பாதிக்கிறது

இதனால் குழந்தைக்கு பல இடைஞ்சல்கள் ஏற்படுகின்றன

எனவே இத்தகைய பல காரணங்களுக்காக ஜாதகம் எழுதுவதை ஒரு வயதுக்கு மேல் வைத்து கொள்வது சிறப்பு என்கிறேன்

ஐந்து வயதுவரை காத்திருந்தால் இன்னும் சிறப்பு என்பதில் ஐயமில்லை.




Contact Form

Name

Email *

Message *