சாதம் வடிக்க அரிசி இருக்காது குளிருக்கும் மழைக்கும் ஒதுங்க வீட்டுக்கு கூரை இருக்காது மாற்றி கட்டுவதற்கு கந்தை துணி கூட ஒழுங்காக கிடைக்காது ஆனால் ஒரு பாலர் பள்ளிக்கூட அளவிற்கு வீடு நிறைய குழந்தைகள் இருப்பார்கள் ஒட்டி போன வயிறும் சுருங்கிய தோலும் குழிவிழுந்த கண்களும் கொண்ட அந்த மக்களை பெற்ற மகராசியை இவள் பெண்ணா அல்லது பிள்ளைகளை பெற்றெடுக்கும் இயந்திரமா என்று நமக்கு எண்ணத் தோன்றும்
இன்னொருபுறம் மூன்றடுக்கு மாளிகை வீடு நான்கைந்து கார்கள் கடைக்கு போக கார்துடைக்க சமயல் செய்ய வாசலுக்கு காவல் நிற்க எத்தனையோ வேலைக்காரர்கள் கடல் மாதிரி பறந்து விரிந்த அந்த வீட்டின் அறைகள் அமானுஷ்யமாய் அமைதியில் உறைந்து கிடக்கும் காசுகளின் சலசலப்பு கேட்குமே தவிர கால்களை கட்டிக்கொண்டு கொஞ்சு மொழி பேசும் மழலைகளின் இனிய குரலை கேட்கவே முடியாது கணவனும் மனைவியும் மட்டும் உயிருள்ள பிணங்களாக நடமாடுவார்கள்

குழந்தைகளை பெற்றுக் கொள்வதற்கு அந்த காலத்தில் மகாசிரமம் தீர்த்தயாத்திரை போனாலும் புனித நீராடினாலும் இரவு பகல் விழித்திருந்து விரதங்களை அனுஷ்டித்தாலும் நாலாபுறமும் நெருப்பை வளர்த்து தவம் இருந்தாலும் கதைகளை தவிர நிஜ வாழ்க்கையில் மக்கட் செல்வத்தை பெறமுடியாது இன்றைய நிலைமை அப்படி அல்ல
விஞ்ஞானம் வளர்ந்து விட்டது ஒரு புதிய உயிரை உருவாக்கத்தான் மனிதனால் தற்போது முடியாதே தவிர மற்றப்படி முடியாது இயலாது நடக்காது என்று எதுவுமே இல்லை ஆண் பெண் சேர்க்கை இல்லாமலே குழந்தைகளை உருவாக்கலாம் கருப்பை இல்லை என்றாலும் சோதனை குழாய்கள் இருக்கின்றன கருமுட்டை இல்லையா இரவல் வாங்கலாம் விந்தணு இல்லையா அதையும் வாங்கலாம் ஏன் தாயே இல்லை என்றாலும் கூட வாடகை தாயை அமர்த்திக் கொள்ளலாம்
இப்படிபட்ட முன்னேறிய சூழலில் பிள்ளை இல்லாமல் தனியாக வாழ்வது மடத்தனம் செத்துப்போனால் தலைமாட்டில் உட்கார்ந்து அழுவதற்கு பிள்ளை இல்லையே சிதைக்கு நெருப்பு வைக்க வாரிசு இல்லையே ஏன் அவ்வளவு தூரம் போவானேன் வெளியில் போய் களைத்து வீட்டுக்கு வந்தால் அன்பாக சிரிக்க ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தப்படுவது முட்டாள் தனம் என்று சிலர் சொல்கிறார்கள்

இப்படி மற்றவர்கள் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்ய முயற்சித்த அனைவருக்குமா வெற்றி கிடைக்கிறது பத்து பேர் முயன்றால் ஐந்து பேருக்கு தான் காரியம் பலிக்கிறது மற்றவர்களுக்கு பணச்செலவும் உடல் கெடுதியும் மட்டுமே ஏற்படுகிறது மருத்துவர்கள் மருந்துக்கான கட்டணத்தை மட்டுமே வாங்கிக்கொள்கிறார்கள் கடவுள் தான் பலனை தருகிறார் இது தான் நிஜமான நிலை விஞ்ஞானம் வளர்ந்து விட்டது இனி வானத்தை வில்லாக வளைத்து விடலாம் மணலை கயிறாக திரித்து விடலாம் என்று பேசுவது எல்லாம் பேச்சிக்கு நன்றாக இருக்குமே தவிர நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது
இயற்க்கியான முறையில் கருத்தரித்தாலும் செயற்கை முறையில் அது உருவானாலும் ஒரு சதை பிண்டத்திற்கு உயிரை கொடுத்து குழந்தையாக ஆக்கும் வேலை கடவுளுடையது அவன் விருப்பம் இல்லாமல் மனிதனால் ஒரு சிறு கடுகை கூட நகர்த்த முடியாது ஆனால் கடவுள் எனக்கு குழந்தை தருவாரா மாட்டாரா என்பதை எப்படி நான் தெரிந்துக் கொள்ள? உள்ளது உள்ளப்படி தெரிந்து விட்டால் அதற்கான முயற்சிகளை எடுப்பதா கைவிடுவதா என்று ஒரு நிலைக்கு வரலாம் அதற்கு தான் வழி தெரியவில்லையே என பலர் புலம்புகிறார்கள்

இந்த புலம்பல் அனாவசியமானது என்று யாரும் சொல்லிவிட முடியாது பக்கத்து வீட்டுக்காரனின் எண்ணத்தையே சரிவர புரிந்து கொள்ள முடியாத நமக்கு எல்லாம் வல்ல இறைவனின் திருவுள்ளத்தை புரிந்து கொள்ள முடியுமா அவர் விதித்த விதி இது தான் என அறிந்து கொள்ள தான் முடியுமா? அது மட்டும் உறுதியாக தெரிந்து விட்டால் பல விஷயங்களுக்கு போராடவேண்டிய அவசியமே இருக்காது சாதாரண மக்களை பொறுத்தவரை எதிலும் தெளிவில்லாத பதில் கிடைப்பதனால் தான் பல போராட்டங்களை வாழ்க்கை முழுவதும் சந்திக்கிறார்கள்
மனித வாழ்க்கையில் சில விஷயங்கள் இப்படி மட்டுமே நடக்குமென்று கடவுள் தீர்மானித்து உள்ளான் அவனின் தீர்மானம் கிரகங்களின் வழியாக மனிதன் மேல் செயல்படுத்தப்படுகிறது என்று நமது முன்னோர்கள் சொல்கிறார்கள் அவர்கள் அப்படி சொன்னதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரம் என்ற ஒன்றை ஏற்படுத்தியும் வைத்திருக்கிறார்கள் அதை துல்லியமாக கருத்தூன்றி ஆய்வு செய்தால் கடவுளின் சித்தம் இது தான் என்பதை தெளிவாக அனைவரும் தெரிந்துக் கொள்ளலாம் அதற்கு பொறுமை தான் மிக அவசியம்

சென்றவாரத்தில் ஒரு அம்மையார் என்னை காண வந்திருந்தார் தன்மகளின் ஜாதகத்தை கொடுத்து இவளுக்கு மூன்றாவதாக திருமணம் செய்து வைக்கலாமா? என்று கேட்டார் காரணம் அந்த பெண்ணிற்கு முதல் திருமணம் மூன்று மாதம் வரையுமே நீடித்திருக்கிறது கணவனாக வந்த புண்ணியவான் இவளை படாத பாடு படுத்திருக்கிறான் தனது நண்பர்களோடு பாலியல் தொடர்பை வைத்துக்கொள்ள சொல்லி கொடுமைபடுத்தி இருக்கிறான் எந்த பெண்ணால் தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்? சரிதான் போடா என்று விவாகரத்து வாங்கி வந்து விட்டாள் பிறகு எப்படியோ மனதை தேற்றி இரண்டாவது திருமணத்தை பெற்றவர்கள் செய்து வைத்திருக்கிறார்கள் கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கு ஒரு கொடுமை கூத்தாடியது போல் இரண்டாவது கணவன் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே சாலை விபத்தில் போய் சேர்ந்து விட்டான் இவை எல்லாம் நடந்து இரண்டு வருடத்திற்கு மேலாகி விட்டது
ஆண் பிள்ளையாக இருந்தால் எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என்று விட்டு விடலாம் இந்த கொடுமையான சமூகத்தில் பெண் பிள்ளையை தன்னந்தனியாக விடுவதற்கு எந்த பெற்றோருக்கு தான் துணிச்சல் வரும் அதனால் தான் அந்த அம்மையார் மகளின் மூன்றாவது திருமணத்தை பற்றிக்கேட்டார்கள் நான் அந்த பெண்ணின் ஜாதகத்தை நன்றாக ஆராய்ந்து இந்த பெண்ணிற்கு இனி திருமணமே நடத்தி வைக்காதிர்கள் அப்படி வைத்தால் ஜாதகப்படி பழைய கதை மீண்டும் நடக்கும் எனவே திருமணத்தை பற்றி யோசிப்பதை விட்டு விட்டு உங்கள் மகளுக்கு ஒரு வியாபாரத்தை துவக்கி கொடுங்கள் அவள் வருங்காலத்தில் பத்து பேரை பாதுகாக்கும் அளவிற்கு உயர்ந்து வருவாள் என்று சொன்னேன்

எனது பதிலால் அந்த அம்மையார் மிகவும் சந்தோசம் பட்டார் காரணம் பலரும் இவளுக்கு மீண்டும் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறினார்கள் சில ஜோதிடர்கள் கூட ஆமாம் அது சரிதான் என்றார்கள் சிலர் தோஷம் இருக்கிறது பரிகாரம் செய்தால் சரியாகி விடும் என்றார்கள் எங்களுக்கோ பயம் ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்வில் எத்தனை முறைதான் விளையாடுவது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கு வாழ்க்கை விளையாட்டு அல்ல அவள் மனது விட்டு விடடால் எல்லாம் முடிந்து விடும் யாரும் இதை இப்படி தான் செய்ய வேண்டும் என்று உறுதியாக சொன்னதில்லை நீங்கள் சொன்னதால் தெளிவான முடிவை எடுக்க முடியும் என்றார்கள்
பல ஜோதிடர்களும் ஜோதிடம் தெரிந்தவர்களும் ஜாதகரீதியாக உள்ள உண்மைகளை பட்டவர்த்தனமாக சொல்ல தயங்குகிறார்கள் அப்படி சொன்னால் ஒரு வேளை வந்தவர் மனது பாதிக்கப்படுமோ விபரீதமான முடிவகளை எடுத்து விடுவார்களோ என தயங்குகிறார்கள் அல்லது உண்மையை சொல்லி தங்களது வியாபாரத்தை கெடுத்து விட போகிறோமோ என்றும் அச்சப்படுகிறார்கள் பொருளாதார காரணக்களுக்காக உண்மையை சொல்லாமல் மறைப்பது மனிதாபிமானம் அற்ற செயலாகும் எந்த உண்மையாக இருந்தாலும் அதை இதமாக சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லிவிடுவது தான் சிறப்பு

அதை போலவே சில பேர் ஜாதகத்தில் எந்த வழியை பின்பற்றினாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காது என்ற நிலை இருக்கிறது அதாவது ஒரு ஆண்மகனுடைய ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு போய் இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது மிகவும் கஷ்டம் காரணம் சுக்கிரன் என்பது ஆணின் விந்து உற்பத்தியை குறிக்கும் கிரகமாகும் இந்த கிரகம் கெட்டு விடடால் விந்தணுவில் உயிர்ப்பு இருக்காது மேலும் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் அவர்களின் உயிர் அணுக்கள் அதிக நேரம் ஜீவிக்காது சுக்கிரனும் சந்திரனும் கூட்டாக இருந்தால் விந்து நீர்த்து இருக்கும் இதனால் ஒரு குழந்தையை உருவாக்கும் சக்தி அதற்கு கிடையாது
இதை போலவே பெண்ணின் கருமுட்டையை குறிக்கும் கிரகமும் சுக்கிரன் தான் இதுவும் வலுவாக இல்லாமலும் சூரிய சந்திர சேர்க்கை பெற்றும் இருந்தால் கருமுட்டையில் பலம் இருக்காது கருப்பையும் ஒரு குழந்தையை தாங்கும் சக்தி உடையாதாக இருக்காது இப்படி பட்ட ஆண் பெண் இருவரும் திருமணம் செய்து தம்பதிகளாக வாழும் போது குழந்தை பெறுவது குதிரை கொம்பே ஆகும் நட்சத்திரம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் நாம் கிரகங்களின் இந்த தன்மையையும் கவனிக்க வேண்டும் தம்பதியரில் யாருக்காவது ஒருவருக்கு மட்டும் இந்த குறை இருந்தால் அது தவறல்ல தாரளமாக திருமணத்தை நடத்தலாம் ஒருவரின் கிரகபலவீனம் மற்றவரின் கிரக பலத்தால் சரியாகி விடும்

இந்த மாதிரி கிரக அமைப்பு உடையவர்கள் சோதனை குழாய் மற்றும் இது போன்ற நவீன சிகிச்சைகளை ஒரு முறைக்கு இரு முறை எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும் ஆனால் சில பேர் ஜாதகத்தில் இவர்களை அம்மா அப்பா என்று அழைக்க குழந்தையே இருக்காது இருந்தாலும் அதிக நாள் வாழாது என்ற கிரக நிலை உண்டு அவர்கள் செயற்கை முறையில் குழந்தைக்கு முயன்றாலும் அது நடக்காது பல புதிய தொல்லைகளை தான் உருவாக்கும் இந்த ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று பகீரங்கமாக பல காரணக்களை முன்னிட்டு எழுத முடியாது என்னிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே தெரிவிக்க முடியும்
ஏசு கிறிஸ்து ஒரு அழகான உபதேசம் செய்வார் உன் கையே உனக்கு இடைஞ்சல் செய்தால் அதை வெட்டி போடு என்பார் கையை வெட்டுவது கடினம் கை இல்லாமல் வாழ்வதோ அதை விட கடினம் ஆனால் கை அழுகி உடல் முழுவதும் அழுகல் பரவும் போது அதை வெட்டாமல் இருப்பது அறிவீனம் அதை போல குழந்தை என்பது தேவை தான் அதன் அருகாமை என்பது அவசியம் தான் அதற்காக குழந்தை இருந்தால் தான் வாழமுடியும் என்பது கிடையாது தனக்கு குழந்தை இருக்காது என்று உறுதியாக தெரிந்த பிறகு அதை நினைத்து காலமுழுவதும் அழுதுக்கொண்டு இருப்பது பைத்தியகாரத்தனம் குழந்தை இல்லாத எத்தனையோ தம்பதியினர் தானும் சந்தோசமாக வாழ்கிறார்கள் மற்றவர்களையும் ஆனந்தமாக வாழவைக்கிறார்கள்.