Store
  Store
  Store
  Store
  Store
  Store

சதி செய்து நம்மைத் தோற்கடித்தனர்


   தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது கலைஞர் கருணாநிதி அவர்களின் தனிப்பட்ட சொத்தா என்ன?

 டாக்டர் ராமதாஸ் எழுதினால் தொண்டர்கள் குறைந்தா போய்விடுவார்கள்

 இதோ திண்டிவனம் தந்த திருவிளக்கு டாக்டர் ராமதாஸ் என்ற வன்னிய குலவிளக்கு எழுதும் கடிதத்தை சற்றேனும் படித்து பாருங்கள்

ஆனால் படிப்பதற்கு முன் ஒரு எச்சரிக்கை

 கடிதத்தில் உள்ள அவரின் ஆசையை ஆதங்கத்தை யாரவது குறை சொன்னால் நிச்சயம் அவர்கள் வீட்டுக்கு போகும் பாதையில் மரங்கள் வெட்டி போடப்படும் 




    ன்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் வன்னிய சொந்தங்களே

 புதிய வாழ்வு கிடைக்கும் என நம்பி ஏமாந்து போன அணைந்த தீப்பந்தங்களே

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல் என்ற வெள்ளப்பெருக்கில் நாம் சவாரி செய்த திமுக என்ற ஓட்டை படகு தானும் கவிந்ததோடு அல்லாமல் நம்மையும் நட்டாற்றில் தள்ளி விட்டு விட்டது

 இனமான காவலனே தமிழ் குடி தாங்கியே நம்பாதே

 திமுக என்பது வஞ்சகர் கூட்டம் நெஞ்சில் இரக்கமே இல்லாத பொய்யர்களின் கூடாரம்

 அவர்களை நம்பி பாவம் என்பதை என்ன வென்று அறியாத பாமக வை பலிகொடுத்து விடாதே என்று  காடு வெட்டி குரு போன்ற ஆன்றோர்பெரு மக்கள் இடித்து சொன்னார்கள்

 அவர்களின் பேச்சி எனக்கு அப்போது வேம்பாக கசந்தது

 எத்தனை முறை கலைஞரோடு உறவு வைத்துள்ளோம் எத்தனை முறை அவரையே உதாசீன படுத்தி உள்ளோம் அப்போது எல்லாம் அவர் உதைத்த கைகளுக்கு கூட ஒத்தடம் கொடுத்தாரே இப்போதும் அப்படி தான் செய்வார் என்று நம்பி ஏமாந்து போனேன்

 முப்பத்து மூன்று இடத்தில் இருபது இடத்திலாவது வெற்றி பெற திருமங்கலத்தில் ஜனநாயக பணி செய்தது போல செய்து எப்படியும் நம் தலையை தப்ப வைப்பார்கள் என்று நினைத்தேன்

 வஞ்சிக்கப் படுவதற்காகவே வன்னியர்கள் உள்ளார்கள் என கலைஞர் மீண்டும் நிருபித்து விட்டார்

 சிலர் சொல்கிறார்கள் மத்திய சுகாதார துறையில் அன்பு மணி மகசூல் செய்த கோடிகளை கலைஞர் குடும்பம் சந்திக்கு இழுத்து விட்டு விட கூடாது என்பதற்காகவே அலைக்கற்றை ஊழலை பற்றி நான் வாய் திறக்க வில்லையாம்


 உண்மையில் அந்த ஊழல் நீதி மன்ற விசாரணையில் இருந்ததினால் வீணாக நாம் ஏன் பேச வேண்டும் அப்படி பேசினால் நீதி மன்றத்தை அவமதித்ததாகுமே என்பதனால் தான் வாய் மூடி இருந்தேன்

 தம்பி காடு வெட்டி குருவும்,வடிவேல் ராவணனும் சொன்ன பிறகு தான் அந்த ஊழலை பற்றி உலகமே பேசுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்

  சதா சர்வகாலமும் வன்னியர் நலத்தை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதனால் செய்தி தாள்களோ மற்ற ஊடக செய்திகளோ என் காதுகளில் விழுவதே இல்லை

 பாழாய் போன தமிழ் மக்கள் பணத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பார்கள் என்று நான் கற்பணை கூட செய்ய வில்லை

 இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் அதாவது இந்த ஊழல் விஷயத்தை மக்கள் பெரிதாக கருதுவது முன்பே தெரிந்திருந்தால் நமது கொள்கை வழி நின்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் விழுந்தாவது கூட்டணி சேர்ந்திருப்பேன் 


 ஆயிரம்தான் நான் திட்டி இருந்தாலும் கூட தாய் உள்ளத்தோடு அம்மையார் அரவணைத்து இருப்பார்

எல்லாம் கெட்டு போய் விட்டது இனி பேசி பயன் எதுவும் இல்லை

 உள்ளாட்சி தேர்தலிலாவது தனித்து போட்டி இடுவோம் என மிரட்டி பார்ப்போம்

 யாரவது பயந்து நம்மை கூட்டணிக்கு அழைத்தால் போய் சேர்வதற்கு புதிய காரணங்களை கண்டு பிடித்து மேடை தோறும் பேசலாம்

 யாரும் கூப்பிட வில்லை என்றால் தமிழகத்தில் லட்டர் பேடு கட்சிகளுக்கு குறைச்சலா என்ன

 அவர்களோடு கூட்டணி வைத்து கூப்பாடு போடுவோம்

பாஜக வோடு கூட்டணி சேர ஒரு ஜனதா கட்சி இருக்கும் போது நமக்கு ஆள் கிடைக்காதா

 எப்படியோ வன்னிய மக்கள் வாழ அன்புமணி ராமதாசை மத்திய மந்திரியாக்கி அழகு பார்க்க என்ன என்ன வழிகள் உண்டோ அத்தனையையும் செய்வோம்

அதற்கு என் சொந்தங்களான நீங்கள் கொடி பிடிக்க தயராக இருப்பிர்கள் என நம்புகிறேன்

தயவு செய்து யாரும் சிந்தனை செய்து புத்திசாலியாகி என் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு விடாதீர்கள்

அப்படி யாரவது செய்தால் அந்த பாவம் உங்களை சும்மா விடாது 

     இப்படிக்கு
டாக்டர்.ராமதாஸ்

    டாக்டர்.ராமதாஸ் அவர்களின் எழுத்து நடை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாததால் எதோ தோராயமாக எழுதி விட்டோம்

 ஆனால் ஒன்று மட்டும் உண்மை அவர் இதே போலவே கடிதம் எழுதினாலும் கூட அதையும் ஏற்று கொள்ள தமிழகத்தில் சிலர் தயாராக இருக்கிறார்கள் அப்படி பட்டவார்கள் மாறும் போது தான் நாடும் மாறும்

Contact Form

Name

Email *

Message *