Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிரதமர் மேல் விழுந்த ராஜ பார்வை

  துரை மேலமாசி வீதியில் கருப்பண்ண செட்டியார் பாத்திர கடை வைத்திருக்கிறார் அங்கு எடுபிடி வேலை செய்ய சேகர் இருக்கிறான்

 பாத்திர வியாபாரம் என்றாலே புதிய பாத்திரம் விற்பதோடு மட்டும் நிற்பது இல்லை

பழைய பாத்திரங்களை வாங்குதல் ஈயம்,பித்தளை வியாபாரம் என்று எல்லாமே இருக்கும்

 நம்ம சேகர் பலர் திருடி கொண்டுவரும் மின்சார இலாக்காவின் அலுமினிய ஒயர்களை சட்ட விரோதமாக வாங்கி விட்டான் என கைது செய்யப்படுகிறான்

 போலீஸ்காரர்கள் சேகர் தான் திருட்டு பொருளை வாங்கிய குற்றவாளி என்று வழக்கு பதிவு செய்யலாம் பத்திரிக்கைகளும் அதை செய்தியாக போடலாம் மக்களும் நம்பலாம்

ஆனால் உண்மை நிலையை ஆராய்பவர்களுக்கு தான் சேகர் மட்டும் தன்னைந்தனியாக இந்த வேலையை செய்திருக்க முடியாது

கருப்பண்ண செட்டியாரின் கண்ணசைவும் கையசைவும் இல்லாமல் ஒரு துரும்பு கூட நகர முடியாது என்பது தெரியும்

அலைக்கற்றை ஊழலிலும் நடந்திருப்பது இது தான்

தேசிய அரசியலில் திமுகவின் பலம் என்பது பாத்திர கடை பையனுக்கு சமமானது தான்

கங்கிரஸ் என்ற முதலாளியின் பலம் தன்னோடு இருக்கிறது என்ற இறுமாப்பில் திமுக பெரிய பேயாட்டம் போட்டதே தவிர தனது சொந்த பலத்தால் அல்ல

 இவ்வளவு பெரிய ஊழல் மேலிடத்து ஆசிர்வாதம் இல்லாமல் நடைபெற்றிருக்கவே முடியாது

திரு.ராசா ,சிதம்பரம் மற்றும் பிரதமரை மட்டும் தான் இப்போது சந்திக்கு இழுத்திருக்கிறார்

 ஆனால் இவர்களது கைகளுக்கு மேலே இன்னும் உயரத்தில் நிஜமான ஆசிர்வாதம் வழங்கிய கை இருக்கிறது

கால நேரம் கூடி வரும் போது எவ்வளவு உயரத்தில் தவறு செய்தவன் இருந்தாலும் அவன் தரைக்கு வந்து ஆக வேண்டும்

அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை

 அப்போது தீர்ப்பு எழுத போவது நீதிபதிகள் மட்டும் அல்ல மக்களும் கூட தான்


Contact Form

Name

Email *

Message *