Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

   எந்தவொரு செயலுக்கும் பெண்களேயே குற்றம் சொல்லுவது ஆணாதிக்க உலகத்தின் வேலையாய் போச்சி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழியை எடுத்துக் கொள்ளுங்கள் பெண் நினைத்தால் எல்லாவற்றையும் அழித்து விடுவாளா? அல்லது அழிவுக்குத்தான் காரணமாகி விடுகிறாளா ஆண்களின் ஆதிக்க வெறியாலேயே சாம்ராஜ்யங்கள் சரிந்தன வீழ்ந்தன இதன் இடையில் பெண்கள் பகடைக் காய்களாகக்கப் பட்டார்கள் என ஒரு அம்மையார் கோபப்பட்டார்

 அதற்கு நான் எந்த அர்த்தத்தை புரிந்து கொண்டு நியாயமா? என்று கேட்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது, நீங்கள் எடுத்துக் கொண்ட அர்த்தம் சொல்லப்பட்ட பழமொழிக்கான விளக்கமல்ல, அதற்கான விளக்கம் ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து. புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பொழுது மணமகன் வீட்டார்க்கு எச்சரிக்கையாக சொல்லப்பட்ட பழமொழி இது, அதாவது இரு வீட்டாருடைய அடுத்த தலைமுறையைக் கருவாக்கி உருகொடுப்பதும். கருவை சிதைத்து உருகலைப்பதும் இரண்டும் இந்த பெண்ணாலேயே நிகழ்கிறது, ஆகவே தங்கள் தலைமுறை தழைக்க வேண்டுமென்றால் மனநிறைவோடு வைத்துக் கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொண்டால் தான் சுகமான பிரசவத்தை அவள் அனுபவித்து அவர்களின் வாரிசை பெற்றெடுப்பாள்,


இதைதான் ஆவதும் “பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்று குறிப்பிட்டார்கள், இந்த பழமொழி சொல்லப்பட்ட காலக்கட்டத்தில் பெண்கள் ஒரு சிறு துன்பத்தையும் தாங்கிக் கொள்ளாமல் வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருந்தாலும் ஆற்றிலோ. கிணற்றிலோ. ஒரு முழக்கயிற்றிலோ தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வார்கள், இதை தடுக்கவே இந்த பழமொழி சொல்லப்பட்டது,

இப்பொழுது சோதித்து பாருங்கள் இந்த பழமொழி தவறா? என்று இன்று முதல் நீங்களும் இந்த பழமொழியை தலைநிமிர்ந்து சொல்லிக் கொள்ளலாம் “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று”என பழமொழிக்கு விளக்கம் சொன்னேன் இந்த விளக்கம் சரியானதுதான் என நான் நினைக்கிறேன் அல்லது வேறு யாதாகினும் விளக்கம் உண்டா?





Contact Form

Name

Email *

Message *