அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்குமா?
- இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்ச்சிக்கு செல்வாக்கு என்பதே கிடையாது தமிழகத்தில் எப்படி அவர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டிருக்கிறதோ அதே போல தான் எல்லா இடத்து கதையும் இருக்கிறது பல ஊழல் குற்ற சாட்டுகளினாலும் தேச பாதுகாப்பில் அக்கறை மிகுந்த நடிவடிக்கை எதுவும் எடுக்காததினாலும் பிரதமரின் கோழைத்தனமான செயல்பாடுகளினாலும் சோனியாவின் அராஜக அத்துமீறல்களாலும் மிகப்பெரிய சரிவை நோக்கியை சென்று கொண்டிருக்கிறது இந்த நிலைமை எதிர்கட்சியான பாஜகவிற்கு புத்துணர்ச்சியை கொடுத்திருக்க வேண்டும் ஆனால் நமது காதுகளை பாஜக வீட்டுப் பக்கம் சற்று திருப்பினோம் என்றால் பானை சட்டி உடைகின்ற சத்தமும் மேஜை நாற்காலிகள் பறக்கின்ற சத்தமும் அலங்கார கண்ணாடிகள் நொறுங்குகின்ற சத்தமும் கிழிந்த வேட்டியும் கலைந்த தலையும் குடுமி பிடி சண்டை போட்டு வேர்த்து விறுவிறுத்து போன முகம்களையும் தான் காண முடிகிறது அதாவது உட்கட்சி சண்டை தான் அங்கே உற்சாகமாக நடைபெறுகிறதே தவிர ஆட்சியை பிடிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுத்ததாக இந்த நிமிஷம் வரை நம்மால் அறிய முடிய வில்லை இப்படியே சூழல் போனால் காங்கிரஸ் கோட்டையில் தான் வெற்றி கொடி பறக்கும் என்று நமது நீலா பாட்டி பேரன் கூட குச்சி மிட்டாயை சூப்பி கொண்டே சொல்வான்
குமாரப்பா எடியூரப்பா இருவரும் பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டது எதைக் காட்டுகிறது?
- நான் சின்ன குழந்தையாக இருந்த போது என் பாட்டி ஒரு கதை சொல்லுவாங்கள் அது உண்மையோ பொய்யோ நடந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் அது இந்த விஷயத்திற்காக நடை முறையில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை நிரபராதிகள் என நிரூபிக்க கொப்பரையில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைத்து கையை உள்ளே விட சொல்வார்களாம் சுத்தவாளி என்றால் சுடதாம் குற்றவாளி என்றால் சுட்டு விடுமாம் அதே போல ஒரு ஏற்பாட்டை செய்து இருவரையும் கைவைக்க சொல்லியிருக்க வேண்டும் இரண்டு பேருமே அந்த பக்கம் தலைவைத்து படுத்திருக்க மாட்டார்கள் கிராமத்தில் யதார்த்தமாக சொல்வார்கள் சாமி முன்னால் பொய் சத்தியம் செய்தால் குலம் விளங்காது என்பார்கள் இரண்டு பேருமே இதை மறந்து விட்டதனால் வருங்காலம் நல்ல பதிலை சொல்லும்
ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி வந்துவிட்டதாக கங்கிரஸ் காரர்கள் சொல்கிறார்களே நிஜமாகவே ராகுலுக்கு அந்த தகுதி வந்துவிட்டதா?
- என்னை கேட்டால் இந்தியாவில் இதுவரை தகுதியான பிரதமர்கள் என்று லால்பகதூர் சாஸ்திரி,இந்திரா காந்தி,மொரார்ஜி தேசாய்,நரசிம்மராவ்,வாஜ்பாய் என்று தான் சொல்வேன் மற்றவர்கள் அனைவரும் பிரதமர் பதவியை ஒரு அலங்கார பொம்மையாக அலங்கரித்தார்களே தவிர நாட்டிற்கு உருப்படியாக எதையும் செய்தது இல்லை சரண்சிங்,சந்திரசேகர்,தேவகவுடா,மன்மோகன்சிங் போன்றோர்களை பிரதம ஜோக்கர்கள் என்று கூட அழைக்கலாம் இப்படி பட்ட சூழலில் ராகுல் காந்தி ஒரு வேளை பிரதமராக வந்தால் இந்த ஜோக்கர்கள் வரிசையில் ஒருவராக இருப்பாரே தவிர வேறு எதையும் அவரிடம் எதிர் பார்க்க இயலாது துரதிஷ்டவசமாக அப்படி ஒரு நிலை இந்தியாவிற்கு வந்தால் அது இந்தியா சந்தித்த பல இருண்ட காலங்களில் ஒன்றாக இருக்கும்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகபோவதால் ஏற்பட கூடிய விளைவு எப்படி இருக்கும்?
- அமெரிக்க தலைவர்கள் எப்படியோ ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்கள் நாட்டு படைவீரர்கள் அந்நிய தேசத்தில் ரத்தம் சிந்துவதை விரும்ப மாட்டார்கள் அந்த வகையில் படைகளை வாபஸ் பெறுவதால் அதிபர் ஒபாமாவிற்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் ஆனால் அது ஆப்கான் அரசியல் களத்தை முற்றிலுமாக மாற்றி போடக்கூடிய விளைவாகவும் அமையலாம் ஆப்கான் மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வில்லை அதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம் அதுவரை அடிப்படைவாத சக்திகள் தலை எடுக்காமல் இருக்க வேண்டும் ஆப்கானை விட்டு அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதால் இந்தியாவில் கூட பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் மேலோங்கலாம் இதை நமது அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டும்