- தியானம் செய்யும் போது மனது ஒரு நிலைப் பட சிறப்பு வழிகள் எதாவது உண்டா?
செல்லத்துரை கொடாவிளை
ஒரு குரங்கு இருந்ததாம் குரங்கு என்றாலே சேட்டை செய்வதில் கில்லாடி என்பதுதான் பொருள் அந்த குரங்குக்கு பேய் வேறு பிடித்து விட்டதாம்
பேய் பிடித்த குரங்கு கலசம் நிறைய இருந்த மதுவையும் குடித்து விட்டதாம்
போதை தலைக்கு எரிய உடன் மரப் பொந்திற்குள் கை விட்டதனால் ஒரு தேள் வேறு கடித்து விட்டதாம்

நிலைமை எப்படி இருக்கும்? சற்று எண்ணி பாருங்கள்
அந்த குரங்கு மாதிரி ஆயிரம் குரங்குக்கு சமானமானது நமது மனது
அதை ஒரு வேலை செய்ய சொன்னால் இன்னொன்றுக்கு தாவும்
மூன்றாவதாகும் ஒரு கிளையை பிடித்து ஊஞ்சலும் ஆடும்

சும்மா இருக்காது நம்மை சும்மா இருக்கவும் விடாது
அடங்காத மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போன்றது தான் தியானம் ஆகும்
ஆனால் அந்த தியான நேரத்தில் கூட கண்களை மூடி பகவானை நினைப்போம் என்று உட்கார்ந்தால் மூடிய கண்களுக்குள் கடன்காரனும் வந்து நிற்கிறான் பதினாறு வயதில் காதலித்த பெண்ணும் வந்து நிற்கிறாள்
இது தான் மனித மனதின் இயல்பான நிலை

இப்படி பட்ட மனதை தொடர்ச்சியான விடாப்பிடியான பழக்கத்தால் மாற்றி விடலாம் என்று கண்ண பெருமான் கீதையில் சொல்கிறான்
எனவே மனம் ஒரு நிலைப்பட நீங்கள் எந்த வகை தியானத்தை செய்பவராக இருந்தாலும் அதை சோர்வில்லாமல் ஆர்வத்தோடு தொடர்ந்து செய்யுங்கள்
நிச்சயம் மனது ஒரு நிலைப் படும்
அவ்வப்போது ஏற்படும் சின்ன சின்ன தடைகளை கண்டு கலங்காமல் மயங்காமல் தொடர்ந்து செல்லுங்கள்
மனம் குவிந்து கடவுள் தரிசனத்தை கண்டிப்பாக பெறலாம்