Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஈழத்தின் மீது ஜெயலலிதா திடிர் பாசமா...?

  • தற்போதைய தமிழக அரசின் செயல் பாடுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

   லங்கை அதிபரை போர் குற்றவாளியாக அறிவிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருப்பதும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என ஆலோசனை சொல்லி இருக்குப்பதும் நல்ல அறிகுறிதான்

 ஆனால் அதை கேட்கின்ற மத்திய அரசின் காதுகள் செவிடு மட்டும் அல்ல இல்லாத பொருளும் ஆகும் திருமதி சோனியா காந்தி ஒருமுறை குஜராத் முதல்வர் திரு நரேந்திர மோடியை மரண வியாபாரி என்ற வார்த்தையால் வர்ணனை செய்தார் அந்த வர்ணனை மோடிக்கு மட்டும் அல்ல சோனியாவுக்கும் பொருந்தும்

 சட்டத்துக்கு புறம்பான வகையில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் திட்டமிட்டு படுகொலை செய்ய படும் போது வேடிக்கை பார்த்தவர் மட்டும் அல்ல சோனியா கொலைகாரன் கையில் வலுவான ஆயுதத்தையும் தூக்கி கொடுத்து கொலையை ஊக்கப் படுத்தியவர் அவர் 
 அவருடைய குமாஸ்தா நடத்தும் ஆட்சியில் இந்த கருத்துக்கள் எடுபடும் என்று யாரும் நம்ப வில்லை இருப்பினும் தமிழக அரசின் செயல் பாடுகள் ஒரு நல்ல துவக்கம் என்றே சொல்ல தோன்றுகிறது

  • ஈழத் தமிழர்கள் மீது ஜெயலலிதா கொள்ளும் பாசம் தீடிரென வந்தது தானே?

மேலோட்டமாக பார்க்கும் போது இந்த கேள்வி சரியானதாகவும் நடைமுறையில் நடை பெற்றதாகவும் நமக்கு தோன்றும் ஆனால் மிக ஆழமாக சிந்திக்கும் போது இதை ஓரளவு தான் சரி என சொல்ல இயலும்

 ஈழ போராட்டத்தில் புலிகளின் மரணத்தை பற்றியும் அப்பாவி மக்களின் படுகொலை பற்றியும் கருத்து தெரிவிக்கும் போது ஒரு முறை செல்வி ஜெயலலிதா அவர்கள் போர்க்களம் என்று வந்துவிட்டால் சில அப்பாவிகள் மடிவது தவிர்க்க முடியாதது என்று சொல்லியதை அடிப்படையாக கொண்டே இத்தகைய கேள்விகள் கேட்கப் படுகின்றன

ஆனால் இதன் வரலாற்று காரணத்தை சிந்திக்க வேண்டும் திருமதி இந்திரா காந்தி அரசு புலிகள் தவிர மற்ற போராளி குழுக்களுக்கு நேசக்கரம் நீட்டிய போது உண்மை நிலையை மத்திய அரசிடம் எடுத்து சொல்லி உதவிகளை பெற்று தந்ததும் தனிப்பட்ட ரீதியில் உதவியதும் அதிமுக வும் எம்.ஜி.ஆறும் தான்
  அதிமுகவின் தொடர் முயற்சியால் தான் ஈழ விவகாரம் ஐநா மன்றம் வரை போனது அதன் பிறகு ராஜுவ் காந்தியின் படுகொலைக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் நாடே புலிகளை மாற்று கண்ணோடு பார்க்க ஆரம்பித்தது புலிகளின் தமிழ் தேசிய தீவிர வாதிகளின் தொடர்பும் தமிழக மக்களால் வெறுக்கப் பட்டது

அதிமுக என்பது மக்கள் இயக்கம் எனவே அது மக்களின் கருத்தை தான் பிரதிப்பலிக்க வேண்டும் அதை தான் ஜெயலலிதா சொன்னார் ஆனால் அதன் பிறகு நடந்த ஒட்டு மொத்த இனப் படுகொலை புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல மொத்த ஈழ மக்களுக்கே எதிரானது ஆகும்

 இதை மனசாட்சி உடைய யாரும் சகிக்க முடியாது அதனால் தான் ஜெயலலிதா தனது பழைய கருத்தை மாற்றி இருக்கிறார் இது இப்படியே தொடர்ந்தால் நிச்சயம் ஈழ பிரச்சனை புதிய உத்வேகத்தோடு கிளம்பும் நல்லதும் நடக்கும்

  • ஜெயலலிதா கச்சத் தீவை இந்தியா திரும்ப பெற வேண்டும் என கேட்பது நடக்க கூடியதா?

ச்சத் தீவு என்ற தனியார் சொத்தை யாருடைய அனுமதியும் இல்லாமல் மத்திய அரசு ஒரு அந்நிய அரசிடம் தூக்கி கொடுத்தது பெரிய தவறுதான்
 ஆனால் சட்டப்படி கொடுக்கப் பட்ட பிறகு அதை திரும்ப பெற ஒரு அரசு மட்டும் முயற்சிப்பது பயன் தராத செயலாகும் வேண்டுமானால் இலங்கை திருப்பி தந்தால் உண்டு இது நடக்காது

அதனால் இந்தியா கொடுத்ததை கேட்பது சர்வதேச சட்டப் படி சரியாகாது வேண்டுமானால் மீனவர்கள் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு வழி செய்யலாம் அதற்கு தமிழக அரசு இன்னும் அதிக நெருக்குதல் கொடுக்க வேண்டும் 



  • நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றதற்கு பிராமணர்கள் காரணம் என கருணாநிதி அவர்கள் சொல்லியிருப்பது பற்றி...?

மிழ் நாட்டு மக்கள் தொகையில் பிரமணர்கள் கைப்பிடி அளவு கூட தேற மாட்டார்கள் ஆக அவர்கள் ஓட்டு போடாததினால் திமுக தோற்று விட்டது என கலைஞர் சொன்னால் அது அவர் குழந்தை தனமாக விளையாடுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்

 பிராமணர்கள் பிரச்சாரம் செய்து மற்ற ஜாதிகாரர்களை தூண்டி விட்டு விட்டார்கள் என்று அவர் நம்பினால் பிராமணர்கள் அல்லாத அனைவருமே அறிவு வளர்ச்சி அற்றவர்கள் என்று அவர் நம்புவதாக பொருள் கொள்ள வேண்டும்

 ஒரு தோல்விக்கான நிஜ காரணத்தை ஆராய தெரியாதவன் நல்ல தலைவனாக இருக்க முடியாது கலைஞரை பொறுத்தவரை அவர் திமுகவின் நல்ல தலைவர் அவருக்கு தோல்விக்கான காரணம் நிச்சயம் தெரியும்

துரைமுருகனோ விழுப்புரம் பொன்முடியோ காரணம் என்றால் வைக்கோவை தூக்கி வீசியது போல் வீசி விடுவார் தனது குடும்பமே முழுப் பொறுப்பாளி என்று தெரிந்த பிறகு பாவம் அவரால் என்ன செய்ய முடியும்

 என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் கேள்வி கேட்டு கொடி பிடித்து கல் வீசாத ஜாதி பிராமணர்கள் தான் போகிற போக்கில் அவர்கள் மீது பழியை தூக்கிப் போட்டால் கழக கண்மணிகள் தலைவர் சொல்வது சரியாக இருக்குமோ என மெய் மறந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

 அதற்குள் எதையாவது செய்து தப்பித்து விடாலாம் என கருணாநிதி திட்டமிட்டு இப்படி பேசுகிறார் 

  • கலைஞர் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து எப்போது வெளிவருவார்?

ருணாநிதி பனங்காட்டு நரி என்றால் காங்கிரஸ் பாலைவனத்து நரியாகும்  அவரை நாமாக வெளியனுப்பி விட்டால் சோனியா காந்தி வரை புதிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்

 அதனால் மகளை விடுங்கள் மகளை விடுங்கள் ஐயோ மகளை விடுங்கள் என அவர் கூப்பாடு போடும் வரை போட்டு ஒய்ந்து தானாக போகட்டும் அப்படி போனால் ஊழல் செய்த மகளை காக்க காங்கிரஸ் துணை வர வில்லை அதனால் தான் வந்து விட்டார் என மக்கள் பேசுவார்கள் என காங்கிரஸ் மேலிடம் கணக்கு போடுகிறது

 கருணாநிதியோ ஒட்டும் வரை ஒட்டி இருந்து பிழைக்கும் வழியை பார்ப்போம் கழற்றி விடுவதாக தெரிந்து விட்டால் அதற்கு முன்னாலேயே சொல்லாமல் கொள்ளாமல் வந்து விடலாம் என கருதுகிறார் இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு பின்புலமாக சுயநலமே இருக்கிறது 
  • தீவிரவாதம் இல்லாத சூழலை எற்படுத்துங்கள் என பாக்கிஸ்தானிடம் இந்தியா கேட்டிருப்பது பற்றி...?

ன்மோகன் சிங்கிடம் சுகந்திரமாக செயல் படுங்கள் என சொல்வதும்

 சோனியாவிடம் ஊழலை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதும்

 கலைஞரிடம் குடும்ப பாசத்தை கைவிடுங்கள் என சொல்வதும்

 ஜெயலலிதாவிடம் சசி கலா நட்பை முறித்து கொள்ளுங்கள் என சொல்லுவதும்

 சுப்பிரமணிசாமியிடம் தடாலடியை விடுங்கள் என சொல்வதும்

 எப்படி முட்டாள் தனமோ அப்படி தான் பாக்கிஸ்தானிடம் பயங்கர வாதத்தை ஒழித்து கட்டுங்கள் என சொல்வதாகும்

ஒரே ஒரு நாள் மட்டும் தீவிரவாதம் பாக்கிஸ்தானில் இல்லாமல் இருந்தால் அந்த நாடே அழிந்து விடும்

 பயங்கர வாதம் என்பது அதன் தேசிய வியாபாரம் அதை அவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் 

Contact Form

Name

Email *

Message *