Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதர்களை விட நாங்கள் மட்டமா?


ந்து மதத்தில் பசு என்ற கோமாதாவை தெய்வமாக வழிப்படுகிறோம்

இது என்ன ஒரு மாட்டை பூ போட்டு பூஜை செய்யும் பைத்தியகாரத்தனம் என சிலர் கிண்டல் செய்கிறார்கள்

மாடு பால் தரும் சுவையான மாமிசம் தரும் அது அருள் தருமா? என்றும் நம் மனதை புண் படுத்துகிறார்கள்

 ஆனால் உண்மை நிலை என்ன ஒரு மனிதனால் கிடைக்கும் சுற்று புற சூழலுக்கான நன்மையை விட பசுவால் கிடைக்கும் நன்மை பல கோடி மடங்காகும்

நமது நாட்டில் பசுக்களுக்கு மரியாதை இருந்த வரையில் மக்கள் அனைவருமே வளமையோடு இருந்தார்கள்.
 
 
  ஒரு காலத்தில் அதாவது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் இந்தியாவில் யார் வீட்டிற்காவது சென்று குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டால் பால் தான் தருவார்களாம்.

  நமது இந்தியாவிற்கு வந்த சீன பயனி பாகியான் தனது நூலில் இதைப் பற்றி குறிப்பிடுகிறார்.

  தண்ணீராக பால் கொடுக்கப்பட்டது மட்டுமல்ல பணத்திற்காக பசும் பாலும் தானியங்களும் விற்க படவில்லையாம். 

  வணக்கத்திற்குய பசுவை உணவு ருசிக்காக என்று கொலை செய்ய ஆரம்பித்தார்களோ அன்றே நமது நாடு கெட துவங்கியது.

 பசுவை பற்றி ரிக் வேதம் செழுமை என்ற வார்த்தையால் போற்றுகிறது.
 
 
   யஜுர் வேதம் காமதேனு என்ற பட்டத்தை கொடுக்கிறது.

  அதர்வண வேதம் செல்வத்தின் விளை நிலம் என்கிறது.

  மகாபாரதமோ சொர்க்கத்திற்கு செல்லும் படிக்கட்டு பசு என்கிறது.

  கந்த புராணம் பிரம்ம புராணம் போன்றவைகள் பசுவின் சிறப்பை பலவாறு புகழ்கிறது.

  விஞ்ஞான ஆராய்ச்சிபடி இரண்டு பசு மாடுகளில் இருந்து நாப்பது ஏக்கர் விவசாய நிலத்திற்கு தேவையான இடும்பொருள்களையும், ஜீவாமிர்தம், கனஜீவமிர்தம், விஜாமிர்தம், அமிர்த கரைசல் மற்றும் பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்களையும் தருகிறது.

 பசுவினடத்திலிருந்து பெருகின்ற சாணம், மூத்திரம், பால் போன்ற பொருட்கள் மனிதனுக்கு தேவையான எத்தனையோ அருள் கொடைகளை வழங்குகின்றன.
 
 
   தினசரி நாம் வீணாக்கும் பசு மூத்திரத்தில் புற்று நோயை கட்டுப்படுத்தும் திறனும், ரத்த அழுத்ததை சீராக்கும் திறனும் இருப்பதோடு மட்டுமல்ல தசை இறுக்கும், சிவப்பணு உற்பத்தி, மாதவிடாய் பிரச்சனை, ஆறாத காயங்களை ஆற்றுதல் ஆகிய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன

  நம் நாட்டு பசு வகைகள், கீர், ரத்தி, சிந்தி, சாகிவால், கில்லார், தார்பார்கள், அமிர்தமால், பாச்சூர், பாங்கி, கேதிகர், கில்லா, காங்கேயம், தென்கதா, கில்லா, நகோ, பன்வார், துக்கனோர், உப்பரசே, வாசூர், தியோனி கோலா, ஹயனா, காங்கரேச், கிருஷ்ணவேணி, மால்வி என்று நூற்றுக்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன.

  இத்தகைய நாட்டு பசுக்கள் தான் மனிதனுக்கும் மண்ணுக்கும் நலத்தை தருமே தவிர நிறைய பால் தருகிறது என்பதற்காக வளர்க்கப்படும் சிமை பசுக்களால் எந்த வித பலனும் கிடையாது.

  மாறாக சீமை பசும் பாலால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களே ஏற்படும்.

  நாட்டு பசு இறந்து விட்டால் அதை உணவிற்காக கிராம புறங்களில் கொடுத்து விடுவார்கள்.
 
   உண்மையில் அப்படி கொடுப்பது பெரிய பாவமாகும்.

   இறந்து போன பசு உடலை நமது கழனிகளில் புதைத்து விடுவது தான் நல்லதாகும்.

  காரணம் பசு புதைக்கப்பட்ட நிலத்தின் சுற்று புறங்கள் நுண்ணுயிர்களால் வளம் பெறுகிறது.

  யானையை தான் இருந்தாலும் ஆயிரம் பொன்.  இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள்.

  இந்த பழமொழி யானைக்கு பொருந்துகிறதோ இல்லையோ பசுவிற்கு நிச்சயம் பொருந்தும்.

  ஒரு பசுமாடு இருந்து விட்டால் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பம் நன்றாக வாழ இயலும்.

  அதனால் தான் பசுவை கேட்டதெல்லாம் தரும் காமதேனு என்றார்கள்.

 அதன் உடம்பில் முப்பது கோடி தேவர்களும் வாசம் செய்வதாக சொன்னார்கள்.

 தேவர்கள் வாசம் செய்கிறார்களோ என்னவோ அதன் வயிற்றில் நூற்று பத்து கோடியே பத்து லட்சத்து பத்தாயிரத்து நூறு நுண்ணுயிர்கள் உள்ளன

  அந்த நுண்ணுயிர்கள் கலந்து வரும் பசுவின் கழிவு கூட அமிர்தத்திற்கு ஒப்பானது என்பதனால் தான் கோமாதா வழிபாட்டை இந்து மதம் வலியுறுத்துகிறது.
 

Contact Form

Name

Email *

Message *