Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளை சுமப்பவன்

   ந்துமத கடவுள் உருவங்களைப் பார்த்து கிண்டலடிப்பது சிலருக்கு பொழுது போக்கு சிலருக்கு மலிவான வியாபாரம்

இந்தமாதிரியான மனிதர்களின் வாயில் அகப்பட்டு பல நேரங்களில் அவதிப்படுவது பிள்ளையார் உருவமாகும்

அவரின் யானை முகத்தை கேலிசெய்வது ஒருபுறம் என்றால் யானை அளவுள்ள விநாயகர் எலிவாகனத்தில் இருப்பது பெரிய அளவில் கிண்டலடிக்கப் படுகிறது

அந்தக் கேலியை கேட்கும் நமக்கும் மனதில் சஞ்சலம் ஏற்படும் அது எப்படி எலியின் மீது யானை வரும் என்றும் தோன்றும்

உயிர்கள் எல்லாமே பரம் பொருளுக்கு வாகனம் தான்.

உயிர்களில் யானையின் உயிர் பெரியதென்றும் எலியின் உயிர் சிறியது என்றும் கிடையாது. எல்லா உயிர்களும் சமமானவைகள் தான்.

உருவத்தில் தான் பெரியது என்றும் சிறியது என்றும் வேற்றுமைகள் தெரிகிறது.

பிரம்மாண்டமான யானையின் ஒற்றை விரல் கூட எலியை நசுக்கி பசையாக்கி விடும்.

அப்படிப்பட்ட யானையை எலி தாங்குகிறது என்றால் இந்த உருவ வர்ணனையில் எதாவது சூட்சமம் இருந்தே ஆக வேண்டும்.

நாம் அனுபவிக்கின்ற வேதனை என்பது யானை போல பிரம்மாண்டம் ஆனைவை தான்.

ஜீவாத்மா என்ற எலி யானையின் பாரத்தை பொறுமையுடன் தாங்ககுவது தான் முக்திக்கான வழியாகும் என்பதை இந்த சித்திரத்தின் ரகசிய தத்துவமாகும்.

ஆத்மாவை பற்றி பகவத் கீதையில் ஒரு விளக்கம் சொல்லப்படும். ஆத்மா பெரியனவற்றில் மகா பெரியது என்றும், நுண்ணியதில் மிக நுண்ணியது என்றும் சொல்வதே அந்த விளக்கமாகும்.

உடல் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும், ஆத்மா தன்னளவில் ஒரே மாதிரியானது தான்.

பரம் பொருளான இறைவன் ஆத்மாவின் வடிவத்தை மட்டுமே காண்கிறான்.

உடலையோ அதை சார்ந்த மற்ற பொருளையோ கடவுள் கவனிப்பது இல்லை.

இறைவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்ட ஆத்மாவின் பலம் ஆயிரம் யானைக்கு சமமானது.

பிள்ளையாரை சுமக்கும் எலி நாம் வீட்டில் தினசரி பார்க்கும் சாதாரண பெரிச்சாளி அல்ல.

இறைவனிடம் தனது ஆசாபாசங்களை வெற்றி, தோல்விகளை, கண்ணீரையும், சிரிப்பையும் முழுவதுமாக அர்பணித்து விட்ட ஆத்ம எலியாகும் அது.

கடவுளிடம் தன்னை கொடுத்து விட்டவன் கடவுளாக மட்டும் மாறுவதில்லை.

கடவுளை தாங்குபவனாகவே ஆகிவிடுகிறான். இது தான் பிள்ளையார் எலியின் தத்துவமாகும்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *