எனக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் முடிந்துவிட்டது இத்தனை நாளில் ஒருமுறை கூட எனது கணவர் என்மனமறிந்து நடந்ததில்லை
மனமிட்டு சொல்வதாக இருந்தால் என்னை படுக்கையறை பொருளாகத்தான் பாவிப்பார்
ஊர் உலகத்தை மனதில் கொண்டு என்தகப்பனான் நிலையும் அறிந்து அவருடன் பல்லைக்கடித்து வாழ்கையை ஓட்டிவிட்டேன்
இந்த நிலையில் சமீப காலமாய் அவருக்கு இன்னொறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது
அதை என்னிடமே கூறிவிட்டு அந்தப் பெண்ணை பல நாட்கள் வீட்டுக்கே கூட்டிவந்து இரவுப்பொழுதை கழிக்கிறார்
இன்னும் அவருடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை
ஆனால் கட்டியவனை பிரிவது பாவம் அவன் எத்தனை கொடுமை செய்தாலும் கீழ்தரமாக நடந்தாலும் அதை சகித்துக் கொண்டு வாழ்வதுதான் இந்துப் பண்பாடு இந்தியக் கலாட்சாரம் என மனது சொல்கிறது
அறிவு சொல்வதைப்போல் பிரிந்து வாழ்வதா? மனம் கூறியப்படி இணைந்து வாழ்வதா
வேதம் அறிந்த நீங்கள் சரியானப் பாதையை எனக்கு காட்டுங்கள் அது எதுவாக இருந்தாலும் ஏற்று நடக்கிறேன்

உங்கள் பதிலை எதிர்பார்க்கும்
பெயர் சொல்ல விரும்பாத வாசகி
பெயர் சொல்ல விரும்பாத வாசகி
பெண் என்பவளை இந்து சமூகம் மட்டுமல்ல உலக சமுதாயமே போகப் பொருளாகத்தான் பார்கிறது
மனித கூட்டத்தில் சரிபாதி என்பதை இன்னும் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை
இறைவன் அருளால் இந்த நிலை விறைவில் மறையும்
நமது இந்துமத வேதங்களோ உபநிஷதங்களோ பெண்ணடிமைத்தனத்தை நிச்சயம் வரவேற்கவில்லை
இயற்கையையும் இறைவனையும் ஆண்பாலாகவும் பெண்பாலாகவும் சமநோக்கில் தான் காணுகின்றன
எந்த ஒருமனிதனும் ஒழுக்க நெறிமுறைக்கு விரோதமாக நடப்பதை நிஜமான வாழ்வு என அவைகள் ஒத்துக்கொள்ளவில்லை
மேலும் வேதகால பண்பாட்டை வரலாற்று நோக்கில் பார்க்கும் போது அங்கே ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியாக நடந்ததாகவும் ஒரே செயலை செய்ததாவும் தான் அறிய முடிகிறது
பலதார மணம் இருந்தலும் வைப்பாட்டி வைப்பவனை கடைத்தரமானவனாகத்தான் மதித்து ஊதாசீனம் செய்திருக்கிறது
ரிக் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஒழுக்கம் தவறிய ஆண்மகனிடம் வாழ விரும்பாதப் பெண் அவனை புறக்கணிக்கலாம் என்று வெளிப்படையாகவே சொல்கிறது
கணவனை கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு தாசிவீடு போன புராணங்கள் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற பழமொழிகள் எல்லாம் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டதுதான்
உங்களுக்கு கணவனாக வாய்த்திருக்கும் ஆண்மகனின் செயல்களை மனித நேயமுடைய எவராலும் ஏற்க இயலாது
எனவே தயங்காது பிரிந்து வாழுங்கள் அது பண்பாடல்ல என்று யார் சொன்னாலும் கவலையில்லை
காரணம் இத்தகைய நேரத்தில் பிரிவதை வேதங்கள் எதிர்க்க வில்லை
இன்னுமொறு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்
கணவனிடமிருந்து பிரிவது பெரிய சாதனையில்லை பிரிந்து வந்தப் பிறகு கோர முகம்கொண்ட சமூகத்தின் நெறுக்கடியை துணிச்சலுடன் சாமாளிக்க வேண்டும்
இந்த சமுதாயம் மிரட்டும் பயங்காட்டும் பசப்பு மொழிபேசும் பாசத்துடன் நடிக்கும் பதுங்கி இருந்து பாயவும் செய்யும்
சில அன்புக்கரங்களும் அடையாளம் தெரியாமல் மறைந்துக் கிடக்கும்
அத்தனையும் அறிவுத் தெளிவோடும் ஆண்டவன் அருளோடும் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்
நிச்சயம் உங்களால் முடியும்
நான் வணங்கும் திருபாற்கடல் நாயகன் பள்ளிகொண்ட பெருமான் திருவரங்கத்து இறைவன் துணை செய்வான்
மேலும் வாசகர் சந்தேகம் படிக்க இங்கு செல்லவும்