Store
  Store
  Store
  Store
  Store
  Store

முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும்

  ல ஆலயங்களில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது

பெரிய பணக்காரர்களுக்கும் பதவியில் இருப்பவர்களுக்கும் முன்வரிசை தரப்படுகிறது

ஏழைகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்

ஆண்டவனின் சன்நிதானத்தில் ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படலாமா? இது சரிதானா? என்ற கொதிப்பு பலருக்கு உண்டு

இந்த மாதிரியான செயல்களை சுட்டிக்காட்டியே பலர் இந்து மதம் என்பதே மனிதர்களை தரம்பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து கீழே தள்ளுகிறது என விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள்

இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள வேற்றுமைகள் ஏற்றத் தாழ்வுகள் ஆத்மாவின் தன்மையை பொறுத்ததே தவிர உடலை பொறுத்தது அல்ல.

உடல் நிலையில்லாதது அழியக் கூடியது என்றே நமது மதம் கூறுகிறது.

உடலை சார்ந்த நிறம், சாதி, குடும்ப பாரம்பரியம், செல்வ நிலை ஆகியவைகளுக்கு மதிப்பளிப்பதை நமது மத சாஸ்திரங்கள் ஏற்றுக் கொள்வதே கிடையாது.

 ஒருவனது திறமைக்கு பாராட்டும் பதக்கமும் கிடைக்கும் போது அவன் எந்த சாதியை சேர்ந்தவன் எத்தகைய செல்வாக்கு உடையவன் என்ற யாரும் பார்ப்பது கிடையாது.


அவனது தனிதிறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது சமூக வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

அரசியல் தலைவர்களுக்கு முதலிடம் கொடுப்பதும் நிறைய பணம் கிட்டியவனுக்கு சிறப்பு தரிசனம் வழங்குவதும் ஆண்டவன் சந்நிதானத்தை அவமானம் படுத்துவதாகும்.

கடவுள் முன்னால் கோவணம் கட்டியவனும் கோமகனும ஒன்று தான்.

சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா முஸ்லிம்களுக்கு புனித ஷேத்திரம் என்பது நமக்கு தெரியும்.

மெக்காவிலுள்ள பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நேரத்தில் சவுதி அரேபிய மன்னரே தாமதமாக வந்தால் கூட அவருக்கு கடைசி இடம் தான் கொடுக்கப்படும்

ஒரு சாதாரண குடிமகன் முன் வரிசையிலும் அரசன் பின் வரிசையிலும் கடவுள் முன்னால் நிற்க வேண்டும் என்ற கொள்கை யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதை எந்த மக்கள் பின்பற்றினாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே ஆவார்கள்.

இஸ்லாம் மதத்திலுள்ள இந்த சிறப்பு தன்மை நமது வழிபாட்டு இடங்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் நந்தனார் கதையை பாடியுள்ளதை கோபால கிருஷ்ண பாரதியார் சற்று மாற்றி பாடியுள்ளார்.

மூலக்கதையில் நந்தனார் தீ குளிப்பதற்கு முன்னால் அவரை அந்தணர்கள் போற்றி புகழ்ந்ததாகவும் மிகுந்த மரியாதையுடன் சந்நிதிக்கு அழைத்து சென்றதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பல வடமொழி சங்ககால தமிழ் இலக்கிய நூல்களில் ஆலையத்திற்குள்ளும் இலக்கிய மன்றங்களிலும் மக்களும் மன்னரும் ஒரே தரமானவர்களாகவே மதிக்கப்பட்டுள்ளதாக பல ஆதாரக் குறிப்புக்கள் உள்ளன

இதை வைத்து பார்க்கும் பொழுது பண்டைய கால இந்து மதத்தில் அனைவரையும் சமம் என பார்க்கும் மனோபாவம் இருந்ததாக தெரிகிறது.

தற்போது தான் மனங்கள் செல்லரித்து போய் வக்கிரமாக மாறிவிட்டது

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *