சபரிமலை போன்ற கோயில்களுக்கு யாத்திரை செல்ல விரதமிருப்பவர்கள் மாமிசம் உணபது கிடையாது
சாதாரண குடிமக்கள் கூட மாமிச உணவுகளை சாப்பிட்ட நாளில் ஆலையங்களுக்குள் நுழைவதில்லை
ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறுபவர்களும் அசைவத்தை தீண்டுவதில்லை
இவைகளை பார்க்கும் போது சைவ உணவை மட்டும்தான் இந்துமதம் வரவேற்கின்றதோ என பலருக்குத் தோன்றும்
உயிர்களை கொன்று தின்பதை நம்மதம் தடை செய்தால் தாவரங்களும் உயிற்பொருள் தானே
அவற்றை சமைத்துண்பது பாவமாகாதா என்றும் சிலருக்குத் தோன்றும்
ஒரு மரத்தின் கிளையை வெட்டி வேறொரு இடத்தில் நடும் போது மரம் வளர்கிறது.
அது செத்து போவதில்லை. செடிகளும் கிழங்குகளும், கீரை வகைகளும் ஏறக்குறைய அப்படித்தான்.
ஆனால் ஒரு மிருகத்தையோ, பறவைகளையோ கொன்று உணவாக கொள்ளும் போது அந்த உயிர் மீண்டும் வளர்வது இல்லை.
காய்கறிகளையும், கீரைவகைகளையும் பயிறிடும் போதும் சரி, அறுவடை செய்யும் போதும் சரி ஏராளமான உயினங்கள் செத்து மடிகின்றன.
ஆனால் அந்த சாவு இன்னொரு உயிர் பிழைக்க வழி செய்கிறது.
ஆகவே மரக்கறிகளை அறுவடை செய்வது கொலை தொழிலாகாது.
மேலும் மனித உடலின் உள்ளுறுப்புகள் தாவர வகைகளை செரிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
மாமிச வகைகளை உண்டு வளர்வதற்கான வாய்ப்புகள் மனித உள்ளுறுப்புகளுக்கு கிடையாது.
மேலும் மாமிசம் எவ்வளவு வெப்பத்தில் சமைக்கப்பட்டாலும் அதில் இருக்கும் சில கிருமிகள் சாவதேயில்லை.
அது மனித ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
செத்த மாமிசத்தை சுமப்பதற்கு நம் வயிறு ஒன்றும் மயானம் அல்ல.
ஆரோக்கியத்தையும் அகிம்சையும் விரும்புவர்கள் மரகறிகளை உண்பதே சிறந்தது.
ஆனால் நம் மதம் வழிபாட்டிற்கு சர்வ சுதந்திரம் கொடுத்திருப்பது போலவே சாப்பாட்டிற்கும் கொடுத்து இருக்கிறது.
அது நம்மை மாமிசம் உண் என்றும் சொல்லவில்லை.
உண்ணாதே என்று தடுக்கவும் இல்லை.
தொன்மை கால இந்து மத சடங்குகளில் உயிர் பலி கொடுக்கப்பட்டதையும் பலியிடப்பட்ட மாமிசம் புரோகிதர்கள் உட்பட அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டதையும் நமக்கு காட்டுகின்றன.
இன்று கூட காஷ்மீர் பண்டிட்கள் மாமிச போஜனம் செய்கிறார்கள்.
வங்காளத்தில் மீன் சாப்பிடாத பிராமணனே இல்லை என்று சொல்லலாம்.
எனவே அசைவம் சாப்பிடுவதும் சைவம் சாப்பிடுவதும் மத விஷயம் அல்ல. மருத்துவ விஷயமேயாகும்.
மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்