நமது இந்து மதத்தை குறை கூறுபவர்கள் மிக முக்கியமாக சொல்லும் குற்றசாட்டு ஜாதி கொடுமைகளை இந்து மதம் உருவாக்கி பாதுகாத்து வருகிறது என்பது தான்.
ஆலயத்திற்குள் சக மனிதனை நுழையாதே என்பதும், ஆடு மாடுகள் கூட தண்ணீரை குடிக்கும் பொது கிணற்றை ஒரு சாரார் தொடக்கூடாது என்பதும்,
மனிதனுக்கு மனிதன் பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிப்பதும் சாதியால் தான்.
உலகத்தில் எந்த பகுதியிலுமே இல்லாத இந்த சாதிக் கொடுமை இந்தியாவில் மட்டும் இருப்பதற்கு இந்து மதம் மட்டும் தான் பலிகடா ஆக்கப்படுகிறது.
ஆனால் உண்மையில் இந்து மதத்திற்கோ, இந்து சமூக அமைப்பிற்கோ, சாதியை பற்றி எந்த சம்பந்தமும் இல்லை.
இஸ்லாம் வேதமான கூர்-ஆன் இஸ்லாமியர் அல்லாத நாட்டில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் கூட குறிப்பிட்ட நாட்டின் சம்பந்தமில்லாது உள்விவகாரங்களில் எந்த முஸ்லிம் நாடும் மூக்கை நுழைக்க கூடாது என்று சொல்கிறது.
கூர்-ஆனின் இந்த கருத்திற்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவதே ஜிகாத் என்று இன்று சிலர் இஸ்லாமியத்தை களங்கப்படுத்துவது போலவே இந்து மதமும் களங்கப்படுத்தப்படுகிறது.
இந்து மத வேதங்களில் சாதியை பற்றியோ, வர்ணமுறை பற்றியோ எந்த குறிப்புகளும் கிடையாது.
அதர்வண வேதம் துவக்கமே இது எல்லா மனிதர்களுக்கும் பொது என்ற சொல்லோடு தான் ஆரம்பிக்கிறது.
ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூத்தகம் பிராமண சத்ரிய, வைசீக, சூத்ர என்ற நான்கு பதத்தை பயன்படுத்துகிறது.
இந்த சொற்கள் கூட பிறப்பை அடிப்படையாக கொண்டது என்று பொருள் சொல்ல முடியாது.
இதற்கெல்லாம் மேலாக புருஷ சூத்தகம் பிற்காலத்தில் தான் ரிக் வேதத்தில் சேர்க்கப்பட்டதாக வரலாற்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
அப்படியென்றால் பிராமணன் முதல் சூத்திரன் வரை உள்ள வார்த்தைகள் புராணங்களிலும், இதிகாசங்களிலும் பகவத் கீதையிலும் பலமுறை பயன்படுத்தப்படுகிறதே அதன் தாத்பரியம் என்ன என்று சிலர் கேட்கலாம்.
இந்து மத வேதங்கள் மனிதனின் குணத்தை சத்வ, ராஜஸச, தாமஸ என்று மூன்று வகைப்படுத்துகிறது.
சத்வம் என்றால் சாந்தநிலை. ராஜஸம் என்றால் துரித செயல் நிலை. தாமஸம் என்றால் செயல்படாத நிலை என்பதாகும்.
உலக, மனிதர்கள், குணம் இந்த மூன்று இயல்புக்குள் அடங்கிவிடுகிறது. எனவே எவனிடம் சத்வ குணம் மேலோங்கியிருக்கிறதோ அவன் பிராமணன் ஆவான்.
எவனிடம் ராஜஸசம் பொங்கி வழிகிறதோ அவன் சத்ரியன் ஆவான்.
யார் தாமஸ குணத்தால் சோம்பி கிடக்கிறானோ அவன் சூத்ரனாவான்.
அமைதியும் செயல்பாடும் இணைந்து இருப்பவன் வைசீகன் ஆவான்.
இதை தான் பகவத் கீதையின் நான்காம் அத்தியாயத்தில் பதிமூன்றாம் சுலோகத்தில் பகவான் கண்ணன் குணத்தின் அடிப்படையிலேயே வர்ணம் அமைகிறது என தெளிவாக கூறுகிறான்.
சாந்தமான பிராமணனுக்கு சோம்பேறியான சூத்திரன் பிறக்கலாம். சோம்பேறிக்கு பிறந்தவன் குணத்தால் பிராமணனாகவோ, சத்ரியனாகவோ இருக்கலாம்.
இது தான் இந்து மதம் சொல்லும் மனித ஜாதி பிரிவுகள்
இந்த பிரிவுகளை கற்றறிந்த சில சுயநலவாதிகள் தங்களது சுய லாபத்திற்காக பிறப்பின் அடிப்படையிலேயே சாதிகள் என வகுத்து மக்களை அதில் கட்டாயப்படுத்தி பழக்கி விட்டு விட்டார்கள்.
அன்று வைத்த சாதி நெருப்பு இன்று அரசியல்வாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது.
இன்றைய இந்திய சாதிகளின் கட்டமைப்பு பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன என காரல் மார்க்ஸ் சொல்லியிருப்பது சத்திய வாக்கு.
இத்தகைய சாதிகளை ஒழிக்க பிரச்சாரத்தாலோ, போராட்டங்களாலோ, உபதேசங்களாலோ முடியவே முடியாது.
சுயசாதியில் திருமணம் செய்தால் சொத்துரிமை மற்றும் வேலை வாய்ப்பு இல்லையென ஒரு சட்டம் கொண்டு வந்தால் ஒரு மணி நேரத்திலேயே இந்தியாவிலுள்ள எல்லா சாதிகளும் செத்துவிடும்.