Store
  Store
  Store
  Store
  Store
  Store

உயிரைக் காக்க கொலை செய்யலாம்!

ர்மம் என்ற வார்த்தையை அன்றாடம் பயன்படுத்துக்கின்றோம்

    அதன்வழியில் தவறாமல் நடப்பதாகவும் பலர் சொல்லிக் கொள்கிறார்கள்


   ஆனால் அப்படியென்றால் என்ன அதன் அனுபவப் பொருள் எப்படி இருக்கும் என்று எத்தனைப் பேருக்குத் தெரியும்?


    உலகிலேயே தர்மத்தைப்பற்றி பேசுவது இந்துமதம் மட்டும்தான் மற்றமதங்களுக்கு அதன் அரிச்சுவடியே தெரியாது

     எனவே இந்துமத சாஸ்திரங்கள் தர்மத்தைப்பற்றி என்ன சொல்கிறது என்பதை சிறிது ஆராய்வோம்
      

       சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும் என்றால்

       

       தர்ம சாஸ்திரங்கள் தினசரி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மத்தை சாமானிய தர்மம் என்றும்

        வெளியூர் பயணம், உடல் நோய், நாட்டில் அமைதியின்மை நிலவும் காலங்களில் கடைபிடிக்கவேண்டிய தர்மத்தை விஷேச தர்மம் என்றும்


       மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிருக்கும் போது கடைபிடிக்கும் தர்மத்தை ஆபத்து தர்மம் என்றும்,

        அபாயகரமான நிலை விலகிய உடன் அறத்திற்கு விரோதமான செயல்கள் செய்யப்பட்டிருந்தால் அதற்கான பரிகார தர்மத்தை பிரயசித்த தர்மம் என்றும்

         வாழ்க்கையின் இறுதி லட்சியமான இறைவனோடு ஐக்கியமாவதை உறுதிபடுத்தும் தர்மத்தை மோட்ச தர்மம் என்றும் வகைபடுத்துகின்றன.

         இந்த தர்மங்களில் ஆபத்து தர்மம் என்பதை காணும் போது,

       அது என்ன தர்மம்?

         அதற்கு எதற்கு பிரயசித்தம் என்று தோன்றும். 

        ஒரு புலி ஒருவனை துரத்தி வருகிறது என்று வைத்து கொள்வோம்.

        அந்த நேரத்தில் கொல்லாமை என்பது தான் சிறந்த அறம் என கைக்கட்டி நின்றால் ஒரு மனித உயிர் போய்விடும்.

         எனவே நன்மைக்காக கொலையும் செய்யலாம் என்பது தான் ஆபத்து தர்மத்தின் முழு அர்த்தமாகும். அப்படி என்றால் தர்மத்திற்கு விரோதம் எது?



        தேவையில்லாது பிற உயிர்களை இம்சித்தல், உண்மைக்கு புறம்பானதை பேசுதல், அளவுக்கு அதிகமான பொருளை சேர்த்தல், புலனடக்கம் இல்லாமல் வாழ்தல் ஆகியவைகள் தர்மத்திற்கு விரோதமானது என்று சொல்லலாம்.


       பகவத் கீதையில் பகவான் கண்ணன் தர்மவழியில் நடக்கும் போது கிடைக்கின்ற சந்தோஷமே நான் என்று கூறுகிறார்

      கடவுள் இன்பவடிவானவர் என்பது இதனால்தான்




Contact Form

Name

Email *

Message *