கிறிஸ்துவ வேதம் மனிதப் பிறப்பை பாவம் என்கிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது.
கடவுளுக்கு அஞ்சி நடப்பதன் மூலம் பாவத்தின் பிடியிருந்து விடுபடலாம் என்கிறது.
ஆனால் உண்மையில் மனிதனோ அவனது பிறப்போ பாவமுடையது அல்ல.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் நல்ல குணங்களும், நல்ல சக்திகளும் இன்பமும் அறிவும் மறைந்து கிடக்கிறது.
தனக்குள் இருக்கும் பலத்தை அறியாது சிங்கத்தை பார்த்த யானை நடுங்குவது போல் மனிதனும் பாவச் சூழலில் கிடந்து உழல்கிறான்.
அவனுக்குள் இருக்கும் உயரிய பண்பை சரியான முறையில் தட்டி எழுப்பினால் அவன் வாழும் காலத்திலேயே சொர்க்க இன்பத்தை அனுபவிக்கலாம் என இந்து மதம் சொல்கிறது.
அதே நேரம் புளியம் பழத்தை சுற்றி கடினமான தோல் மூடியிருப்பது போல மனிதனை சுற்றி மாய வளையம் கிடக்கிறது.
இந்த வளையத்திற்குள் அகப்பட்டு கொண்டவன் காமத்தாலும், பேராசையாலும் அலகழிக்கப்படுகிறான்.
இதனாலேயே உலகம் எங்கும் துன்ப ஓலம் காதை செவிடாக்குகிறது.
ரிக்வேதம் மனிதனை அழியாத அமிர்தத்தின் புதல்வர்கள் என்கிறது. ஆகவே நாம் பாவிகள் அல்ல.
காற்றடிக்கும் போது கண்ணில் தூசி விழும். எரியும் விளக்கு தடுமாறி அணைந்து விடும்.
காம குரோத அலைகள் வீசுகின்ற போது மனித மனம் பாவ குழியில் விழுவது இயற்கை தான்.
விழுந்தாலும் இறைவனின் கரங்கள் உன்னை தாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று நம்பி பள்ளத்திருந்து மேல் எழும்ப முயற்சி செய்.
உன் மனதை ஆசை வயப்பாடாமல் பார்த்துக் கொள். பாவம் செய்யாமல் இருக்க ஒரு சுலப வழி இருக்கிறது.
உனது தாயாரிடம் சொல்ல கூசுகின்ற எந்த செயலையும் செய்யாதே.
இந்த உறுதி உனக்குள் வருமேயானால் நீ ஜெயிப்பது நிஜம்.