Store
  Store
  Store
  Store
  Store
  Store

சிவன் ஏகே47 பிடிப்பார்

   ராவணனாலும், துரியோதனனாலும் அதர்மங்கள் நடைபெற்ற போது அதை தடுக்க கடவுள் அவதாரம் எடுத்து வந்தார்.

   இன்று வீதியெங்கும் இராவண, துரியோதனன்கள் மலிந்து விட்ட நிலையில் அதை தடுக்க எந்த ராமனும் பிறக்கவில்லையே ஏன்?

  கடவுள் மனிதனை கைவிட்டு விட்டாரா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு அடிக்கடி எழும்

        கடவுள் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்ததை அவதாரம் என்கிறோம்.

   ‘அவதாரம்’ என்ற சொல்லுக்கு இறங்கி வருதல் என்பது பொருளாகும்.

   தெய்வ நிலையிலிருந்து இறங்கி வந்து மனிதனை கைதூக்கி விட கடவுள் செய்யும் முயற்சியே அவதாரமாகும். 

    கடவுள் மனிதனாக வருவதனால் அவர் தரம் என்றும் குறையவே குறையாது.  மாறாக மனித தரமே உயர்வடைகிறது. 

    கடவுளின் அவதாரம் ஒரு புதிய சூழ்நிலையை தோற்றுவித்து தாழ்வுற்று கிடக்கும் தர்மத்தை நிலை நாட்டுவதேயாகும்.

   கடவுள் அவதாரம் நிகழும் போது தர்மத்தின் வழியில் நின்று சற்றேனும் மாறாத வாழ்க்கையை எப்படி வாழ்வதுயென மனிதன் கற்றுக் கொள்கிறான்.

   அதர்மம் என்ற நாகபாம்புகள் எவ்வளவு மூர்க்கமாக படமெடுத்து ஆடினாலும், சீறினாலும் அன்பும், கருணையும் எப்படி அதை வெல்கிறது என்பதை அவதாரங்கள் நமக்கு காட்டுகிறது.

   தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வினாலும், கடித்து குதறினாலும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை நன்றாக புரிந்து கொள்கிறோம்.

   அவனவன் சுயதர்மத்திலிருந்து விலகும் போது இயற்கையின் நிலை மாறி விடுகிறது.

   உலகத்தை படைத்து சுற்ற விட்டுவிட்டு சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பது அல்ல கடவுளின் செயல்.

   இயற்கையை சரி செய்வதன் மூலம் கடவுள் இப்பொழுதெல்லாம் தனது அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். 

  இராவணன் ஒருவனாகயிருக்கும் போது அவனை அடையாளம் கண்டு அழிப்பது மிக சுலபம். 

   இன்று ஏராளமான ராவணர்கள்.  சில ராவணர்கள் ராமனை போலவே கூட தோற்றமளிக்கிறார்கள்.

   அதனால் கடவுளும் தனது அவதாரங்களை விதவிதமான வடிவத்தில் வைத்து கொள்கிறார்.

   வில்லும் அம்போடு தான் கடவுள் வருவார் என காத்திருந்தால் அது முழுமையான அறியாமையாகும்.

காந்தி காட்டிய அகிம்சையிலும் நேதாஜியின் வீர வழியிலும் கூட கடவுளின் அவதாரத்தின் சாயலை நிஜக் கண்ணுடையவர்கள் பார்ப்பார்கள்

  இன்று நாம் சாலையில் நடந்து செல்லும் போது கைபையை பறித்துச் செல்பவனை துரத்திப் பிடிக்கும் மனிதக் கால்களில் கடவுளின் அவதாரப் புன்னகையை காணலாம்

  நாசகார ஜீவன்களை நோக்கி நிமிரும் துப்பாக்கியை பிடித்திருப்பது ராணுவ வீரனாக இல்லாமல் சிவபெருமானாகக் கூட இருக்கலாம்

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்


Contact Form

Name

Email *

Message *