Store
  Store
  Store
  Store
  Store
  Store

மாதா,பிதா,குரு தெய்வம்! எப்படி...?

   கைகளை கூப்பி வணக்கம் வைப்பது தீண்டாமையின் இன்னொறு வடிவம் என சில அறிஞர்கள் குறிப்பிடுவதை சுட்டிக் காட்டி அது தவறுதலான கருத்து என்று நாம் விளக்கி இருந்தோம்

 அதை படித்த பலர் பாராட்டுக்களை தெரிவித்தனர் அந்தப் பாராட்டு மொழிகளுக்கு நடுவில் தாய் தந்தை மற்றும் குருமாரை வணங்குவது கூட ஒருவித அடிமையுணர்ச்சி அது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுப்படுகிறது அது உண்மையா இல்லையென்றால் அதன் நிஜப் பொருளென்ன? என்றெல்லாம் சிலர் கேட்டிருந்தனர் அவர்களுக்காக இந்தப்பதிவு

     அம்மா நம்மை கருவில் சுமப்பதாக சொல்கிறார்கள்.  இந்த கரு சுமையை எல்லா பெண்களும் பெருமையாக பேசி கொள்கிறார்கள்.

   பிள்ளையை சுமப்பதில் உள்ள சிரமத்தால் அன்னை புனிதமானவள் என்று கருதப்படுகிறாள்.

   உண்மையில் நம் பிறப்பிற்கு அம்மா மட்டுமா காரணம்? 

    அப்பாவுக்கு அதில் பங்கே இல்லையா?

   அப்படி சொல்லி விட முடியாது.

   கருவறைக்கு வருவதற்கு முன்னால் அப்பாவின் அடிவயிற்றில் தான் நாம் இருந்தோம்.  அவர் மட்டும் வீரியமிக்கதாக நம்மை வைத்து கொள்ளவில்லையென்றால் எத்தனையோ கோடி அனுக்களில் ஒன்றாக செத்து மடிந்து இருப்போம்.

  ஆகவே நமது பிறப்பில் அப்பாவும், அம்மாவும் முக்கிய பங்கு ஆற்றுகிறார்கள். 

 உடலை தந்து அது வளர உயிரை தந்து, அளப்பெரிய ஆற்றலை தந்து வளர்க்கும் அவர்கள் கண்ணுக்கு தெரியும் கடவுள் என்றால் மிகையில்லை.

 ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு உடம்பு எந்த அளவு முக்கியமோ  அதே அளவு முக்கியம் அறிவும் ஞானமும் ஆகும்.

  நாம் யார்?  நாம் எங்கிருந்து வந்தோம்?  எங்கே போகிறோம்?  எதுவாக ஆவோம்?  என்ற கேள்விகளுக்கு எல்லாம் தெளிவை தந்து வாழ்க்கையை வளப்படுத்துவர் குரு. 

  எனவே அவரும் பார்க்கப்படும் பகவான் ஆகிறார். 

  இவர்களை வணங்குவதும் கடவுளை வணங்குவதும் ஒன்று தான் என நமது இந்து மதம் மட்டுமல்ல.  உலகத்தில் உள்ள எல்லா மதமும் சொல்கிறது.
     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்

Contact Form

Name

Email *

Message *