Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெண்கள் மூல நட்சத்திரத்தில் பிறக்க கூடாதா...?

     ஜோதிடத்தைப்பற்றி பல தவறுதலான கருத்துக்கள் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது ஜோதிடத்தில் அடிப்படை அறிவே கூட இல்லாதவர்கள் எதுகை மோனையாக சில பழமொழிகளை உருவாக்கி விடுகிறார்கள் அதில் முக்கியமானது ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் என்பது மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆண்கள் அரசாள்வார்கள் என்றால் அந்தக் காலத்து ராஜாக்களில் இருந்து இந்தக் கால வாரியத் தலைவர்கள் வரை அனைவருமே மூல நட்சத்திரத்தில் மட்டுமே பிறந்திருக்க வேண்டும்.  எத்தனையோ பிச்சைக்காரர்களின் ஜாதங்களை ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன்.  அவர்களில் பாதிப்பேர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே ஆவார்கள்.


  
  அதே போல ராணி மாதிரி வாழ்கின்ற பெண்களில் பலர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.  ஆகவே ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம் என்பதெல்லாம் சாஸ்திர ஆதாரமில்லாத, அனுபவ உண்மைகள் இல்லாத வெற்று நம்பிக்கைகள் ஆகும்.

     இதேபோன்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு மாமியார் இருக்கமாட்டார் என்றவொரு நம்பிக்கை இருந்து வருகிறது.  இன்றைய நிலையில் மருமகளிடம் ஆரோக்கியமாக தினசரி  சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியாக வாழ்கின்ற பல மாமியார்களின் மாட்டுப் பெண்கள் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்கள். 
    மேலும் பரணியில் பிறந்தவர் தாணியாள்வார் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வெகுவாக உள்ளது.  இத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் எங்கோ ஓரிடத்தில் காக்கை உட்கார பனம் பழம விழுந்த கதையாக நடந்திருக்குமே தவிர ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாகவும், சாஸ்திர பூர்வமாகவும் அணுகி ஆராய்ந்த போது இத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்தவிதச் சான்றுகளும் இல்லையென்றே சொல்லவேண்டும்.  ஜோதிட ரீதியாக உள்ள பல மூடநம்பிக்கைகளில் இவைகளும் அடங்கயிருக்கிறதே தவிர அவைகளில் வேறெந்த உண்மையும் இல்லை.





Contact Form

Name

Email *

Message *