Store
  Store
  Store
  Store
  Store
  Store

துப்பாக்கி பிடிக்க நான் தயார்!


                       " தனி ஈழம் இனி சாத்தியமா? " என்று கேள்வி வைத்திருந்தோம் அதற்கு வாசகர்களின் பதிலும் குருஜியின் தனிப்பட்ட விளக்கமும் இதோ
      னி ஈழத்திற்க்கான சாத்திய கூறுகள் இல்லாமல் இல்லை. ஆனால்.......! முதலில் அங்கு பிரிந்து கிடக்கும் தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைய வேண்டும். ராஜதந்திர ரீதியிலான உறவுகளை பலப்படுத்த வேண்டும். சாத்வீக முறையில் தனி ஈழம் கிடைக்காத சூழ்நிலையில் புலிகள் அமைப்பை புதுப்பித்து புலம்பெயர் தமிழர்களின் ஒருமித்த ஆதரவுடன் அமைப்பு ரீதியாக பொருளாதார பலத்துடன் முன்பு யூதர்கள் இஸ்ரேலை பெற என்ன நடைமுறையை கடைபிடித்தார்களோ அந்த முறைப்படி அணுகவேண்டும் அதற்க்கான புத்தியும் சக்தியும் தமிழர்களிடம் உள்ளது. இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக பாழாய்ப்போன கங்கிரஸ் அரசு இந்தியாவில் இல்லாமல் ஒழிய வேண்டும் (தமிழகத்தில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத அரசு அமையவேண்டும்) இவை எல்லாம் நடந்தால் சாத்தியமே.

                                                                                                  ராஜா  நாகர்கோவில்


   னி ஈழம் என்பது எப்போதுமே சாத்தியமில்லாதது தமிழர்கள் எப்படி இலங்கை மண்ணின் பூர்வ குடிகளோ அப்படித்தான் சிங்களரும் . மலையகத்தமிழருக்குத் தனிநாடும் ஈழமக்களுக்குத் தனிநாடும் கொடுத்தால் தமிழ் நிலப்பரப்பை இரண்டாக பிரித்தால் ஈழத்தமிழர்கள் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் கனவில் கூட ஒப்பமாட்டார்கள் என்பது போலத்தான் சிங்களவரும் இலங்கையை பிரிக்க ஒத்துக்கொள மாட்டார்கள் இலங்கையில் எல்லாத்தரப்பு மக்களும் சம உரிமையோடு வாழ முயற்சிப்பதே சாத்தியமான அரசியல் முயற்சி அதை விடுத்து ராணுவத்தீர்வு என்பது நிரந்தர அமைதியைத்தராது

                                                                                   ஜெகதீஷ் பொன்னம்பலம்  கனடா



   னி ஈழம் இனி சாத்தியமா என்னும் கேள்விக்கு நிச்சயமாக பதில் இல்லை. அஆனல் எந்தவொரு இனமும் அடக்குமுறைக்கு மத்தியில் வாழும் போது கிளர்ந்து எழுவது இயற்கை . ஈழத் தமிழரும் அவ்வாறே கிளர்ந்து எழுந்தனர். அனால் அவர்களின் இரண்டு முறை கிளர்ச்சியும் வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் சுய மரியாதையை இலங்கை சிங்களவர் மதிக்கவில்லை. கஜினி முகமது 18 முறை படை எடுத்து தான் இந்தியாவை வென்றான் என்பார்கள். அப்படி தான் ஈழத்தமிழரும் 18 முறை கிளர்ந்து எழும் வாய்ப்பு உள்ளது. தற்சமயம் உள்ள அமைத்து இரு தரப்பு ஆசுவாசப்பட எடுத்துக் கொண்ட இடைவெளி போல தான் தெரிகிறது. தமிழர்களின் உரிமை நிச்சயபடுத்தப் படும் வரை . தனி ஈழம் என்ற கனவை தமிழர்கள் விடப் போவதில்லை என்றே தோன்றுகிறது. 

                                                                                         அங்கிதா வர்மா  கனடா



   பிரபாகரன் நல்லவர் நல்ல தலைவர் சிறந்த ஒழுக்கச்சீலர் எல்லாம் உண்மைதான் ! ஆனால் காலநேரம் அறிந்து முடிவெடுக்கும் அரசியல் ராஜதந்திரி அல்ல! ஒரு சுதந்திரப் போராட்டம் என்பது களத்தில் காட்டும் வீரத்தை மட்டும் சார்ந்து பெருகின்ற வெற்றியல்ல ! உணர்ச்சி வேகத்தால் நிகழ்த்தப்படும் சாதனைகள் எல்லாமே நடைமுறைப்பலனை தருவதில்லை பிரபாகரன் உணர்வுபூர்வமாக செயல்பட்டாரே அல்லாமல்  அறிவுப்பூர்வமாக செயல்பட வில்லை

   நார்வேயின் நல்லலெண்ண முயற்சிக்களை பயன் படுத்தி குறுகியக்கால அரசியல் அமைதியை உண்டாக்கி அதன்பிறகு சுதந்திரப் போரை இரண்டாம் கட்டத்தை துவங்கியிருக்கலாம் இதனால் சர்வதேச சமூகத்தில் சிங்களவரின் முகத்திரையை கிழித்திருக்கலாம் ஆயுதப்போராட்டத்தின் அர்த்தப்புஷ்டியை உலகம் உணர்ந்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் புலிகள் பயங்கரவாதிகள் என்ற மாயாவாதத்தையும் முறியடித்திருக்கலாம்  இப்படிப்பட்ட நல்ல வாய்புக்களை அவர் தவறவிட்டுவிட்டார் அதனால் தற்காலிக நிலையில் தனி ஈழம் சாத்தியம் இல்லை என்பதே யதார்த்தம் !

                                                                                                            ராம தேவி  மதுரை


   ன்னெடுங்காலமாக ஈழ நாட்டில் தமிழ்மக்கள் அவலங்களை அனுபவித்து வருகிறார்கள் அமைதி வழி சிங்களவன் கண்களுக்கு தெரியாத காரணத்தால்தான் ஆயுத வழியை தமிழர்கள் நாடவேண்டிய நிலை உருவானது சட்டத்தாலும் ராணுவத்தாலும் தெடர்ந்து ஒரு இனம் தாக்கப்படும் என்றால் அதை தடுத்து தன்மானத்தை மீட்டெடுக்க ஆயுதப் போராடத்தை தவிற வேறு மார்க்கமே கிடையாது அமைதி அகிம்சை என்று பேசுபவர்கள் தங்களது மனைவி மக்களை வன்முறைக்கு பலியாக கொடுக்கும் போது சித்தாந்தங்களை காற்றில் விட்டுவிடுவார்கள் இன்று ஈழப் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டு இருக்கலாம் ஆனால் புதிய வேகத்தோடு அது வீறுகொண்டெழும்போது தடைகளெல்லாம் தவிடுபொடியாகி விடும் ஈழம் வெற்றுக்கனவல்ல! கலைந்து போக! ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டம்! இன்று இல்லையென்றாலும் நாளை தனி ஈழக்கொடி பரந்தே தீரும். இது சத்தியம்!

                                                                                                                தேவராஜன் பாரிஸ்




    ப்படி ஈழத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலகருத்துக்கள் வாசகர்களிடமிருந்து வந்தன அவைகள் எல்லாவற்றையும் ஊன்றி கவனிக்கையில் இலங்கைத் தமிழர்களில் முக்கால்வாசிப்பேர் யுத்தத்தை விரும்பவில்லை எந்த வகையிலாவது தங்கள் நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்றே விரும்புகிறார்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அமைதியை ஐக்கிய இலங்கைத் தந்தாலும் சரி தனி ஈழம் தந்தாலும் சரியென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது

  மிக நீண்ட நெடிய சண்டையால் மனதாலும் உடலாலும் சோர்ந்துப் போய்கிடக்கிறார்கள் இந்த அப்பாவி மக்களின் விருப்பத்தை புலிகளும் கண்டுகொள்ள வில்லை சிங்கள இனவாத அரசும் கண்டுகொள்ளவில்லை அவ்வளவு தூரம் போவானேன் தாய்தமிழ் நாடுகூட இதை உணரவில்லை

  பாலஸ்தீனியர் போராட்டத்தை புரிந்து கொண்ட இந்தியாவும் இஸ்ரேலியர்களை காப்பாற்றும் அமெக்காவும் கூட இலங்கைமண்னை ராணுவப்பார்வையில் அக்காலத்தில் பார்த்தார்களே தவிற மனிதநேயத்தோடு  பார்க்கவில்லை இரண்டு வல்லரசுக்களும் திரிகோணமலை துரைமுகத்தின் மீது காட்டிய பாசத்தில் கால்பங்கை அகதிகளாக உலகம் முழுவதும் சிதறி அல்லல்களை தினம் தினம் சுமக்கும் ஸ்ரீலங்கா தமிழர்மீது காட்டியிருந்தால் ஒரு தலைமுறையே நாடற்று போயிருக்காது

  அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத லட்சக்கணக்கான அப்பாவி குழந்தைகள் தாங்கள் இலங்கை மண்ணில் பிறந்தோம் என்ற ஓரே பாவத்திற்காக பதுங்குக்குழிகளிலும் ராணுவ சித்திரவதைக் கொட்டகைகளிலும் கிடந்து செத்து மடிகிறார்கள் மனிதநேயம் பேசும் நாகரீக சமூகம் இந்த அவலத்திற்காக வெட்கித்தலை குனியவேண்டும் அந்த கள்ளமில்லாத சின்னஞ்சிறு மொட்டுக்களின் துயரம் தனி ஈழம் பிறந்தால்தான் முடிவுக்கு வரும் என்றால் இதோ நடக்க முடியாத நான் கூட துப்பாக்கி ஏந்தி களம்வர தயார்!






Contact Form

Name

Email *

Message *